கடிவாளம் போட்ட குதிரை மாதிரி ஓடுறாரு. அந்த இந்திய பவுலரின் பருப்பு இனி வேகாது – சல்மான் பட் கருத்து

Butt
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்த வேலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை வகிக்கின்றன. இதன் காரணமாக இந்த தொடரானது தற்போது சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது.

IND vs SL

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான தொடரின் முடிவை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று இரவு 7 மணிக்கு ராஜ்கோட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றப்போவது யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

- Advertisement -

இவ்வேளையில் இந்திய அணி வீரர்களின் செயல்பாடு இந்த தொடரில் எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக்கின் பந்துவீச்சு இனி எடுபடாது என்று பாகிஸ்தான அணியின் முன்னாள் வீரரான சல்மான் பட் விமர்சித்துள்ளார்.

Umran Malik

இதுகுறித்து அவர் கூறுகையில் : உம்ரான் மாலிக் மிகவும் வேகமாக பந்து வீசுகிறாரே தவிர அவரிடம் வேறுயெந்த வேரியேஷனும் இல்லை. குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் யார்க்கர், ஸ்லோவர் பால்ஸ் போன்ற பந்துகள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பந்துகளாக இருக்கும். ஆனால் அவைகளை அவர் உபயோகிக்க மறுக்கிறார்.

- Advertisement -

அதேபோன்று வீசினால் வேகமாக தான் வீசுவேன் என்று பந்துவீசி வரும் அவரது பந்துவீச்சை பேட்ஸ்மேன்கள் கண்டுபிடித்து விட்டார்கள். இனி அவரை பேட்ஸ்மேன்கள் எளிதாக எதிர்கொண்டு ரன்களை குவிப்பார்கள். எனவே அவரது வேகம் பலமாக இருந்தாலும் அதே வேளையில் ரன்களும் அவர் ஓவரில் கசியும் என சல்மான் பட் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : AUS vs SA : சச்சினை தடுத்த கேப்டன் டிராவிட் போல் 18 வருடத்துக்கு பின் ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்த டிக்ளேர் சம்பவம் – ரசிகர்கள் அதிருப்தி

இலங்கை அணிக்கு எதிரான போட்டியின் போது மணிக்கு 155 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசி இந்திய வீரர்களில் அதிவேகமாக பந்து வீசியவர் என்ற சாதனையை படைத்த உம்ரான் மாலிக்கை பாகிஸ்தான் முன்னாள் வீரரான சல்மான் பட் விமர்சித்து இருப்பது ரசிகர்கள் மத்தியிலும் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement