நீங்கல்லாம் எப்டி இந்தியாவின் முன்னாள் செலக்ட்ரா இருந்தீங்க? சுனில் ஜோசியை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள் – காரணம் இதோ

Joshi
- Advertisement -

வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை பிப்ரவரி 9 முதல் நாக்பூரில் துவங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இத்தொடரில் குறைந்தபட்சம் 3 போட்டிகளில் வென்று வரும் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் பைனலுக்கு தகுதி பெறும் முனைப்புடன் இந்தியா களமிறங்குகிறது. மறுபுறம் ஏற்கனவே புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா பைனல் வாய்ப்பை உறுதி செய்து விட்ட காரணத்தால் 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் வரலாற்றில் முதல் முறையாக தோல்வியை பரிசளித்த இந்தியாவை இம்முறை அவர்களுடைய சொந்த மண்ணில் தோற்கடிக்கும் முனைப்புடன் களமிறங்குகிறது.

மேலும் சுழலுக்கு சாதகமான மைதானங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இத்தொடரில் நாக்பூரில் துவங்கும் முதல் போட்டி தான் ஒட்டுமொத்த தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிக்கும் ஒன்றாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் முதல் போட்டியிலே வென்றால் அந்த புத்துணர்ச்சியுடன் அடுத்தடுத்த போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி தொடரை வெல்லலாம் என்ற காரணத்தால் நாக்பூர் போட்டியை எப்படியாவது வெல்லும் முனைப்புடன் இரு அணிகளும் களமிறங்குகின்றன. அதற்கு சுழலுக்கு சாதகமான சூழ்நிலைகளை சமாளிக்கும் வகையில் தரமான 11 வீரர்களை தேர்வு செய்து கட்டாயமாகிறது.

- Advertisement -

முன்னாள் செலக்டர் வேற:
அந்த வகையில் முதல் போட்டியில் களமிறங்கும் ரோகித் சர்மா தலைமையிலான தங்களது 11 பேர் இந்திய அணியை ஏராளமான ரசிகர்களும் வாசிம் ஜாபர் போன்ற முன்னாள் வீரர்களின் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் இணைந்துள்ள முன்னாள் இந்திய வீரர் சுனில் ஜோசி ரோஹித் – கில் ஆகியோரை ஓப்பனிங் ஜோடியிலும் மிடில் ஆர்டரில் ராகுல், கேஎஸ் பரத் ஆகியோரையும் அஷ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோரை சுழல் பந்து வீச்சு ஜோடியாகவும் தேர்வு செய்துள்ளார்.

ஆனால் முக்கியமான 3வது இடத்தில் சம்பந்தமின்றி சூரியகுமார் யாதவை தேர்வு செய்துள்ள அவர் அந்த இடத்தில் கடந்த 10 வருடங்களாக நிறைய சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்து டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் என்று தனக்கென அடையாளத்தை உருவாக்கிய புஜாராவை கழற்றி விட்டுள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்றாலும் சமீபத்திய வங்கதேச தொடரில் சதமடித்து பார்முக்கு திரும்பிய புஜாரா 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று இந்தியா சரித்திரம் படைக்க கருப்பு குதிரையாக செயல்பட்டதை யாராலும் மறுக்க முடியாது.

- Advertisement -

மறுபுறம் என்ன தான் டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருந்தாலும் கொஞ்சம் நிதானமாக விளையாட வேண்டிய ஒருநாள் கிரிக்கெட்டிலேயே திண்டாடும் சூரியகுமார் யாதவ் உள்ளூர் முதல் தர கிரிக்கெட்டிலும் 45க்கும் குறைவான பேட்டிங் சராசரியை வைத்துள்ளார். இருப்பினும் தற்சமயத்தில் உச்சகட்ட பார்மில் இருக்கும் அவர் மோசமானவர் கிடையாது என்றாலும் அதற்காக புஜாரா போன்ற 10 வருடத்திற்கும் மேல் அனுபவம் கொண்ட ஒருவருக்கு பதிலாக தேர்வு செய்துள்ளது எந்த வகையிலும் நியாயமில்லை என்றும் சரியான தேர்வு இல்லை என்றும் ரசிகர்கள் சுனில் ஜோசிக்கு பதிலடி கொடுக்கிறார்கள்.

அத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தற்சமத்தில் விளையாடும் வீரர்களில் சிறந்த சராசரியை (54.08) கொண்ட வீரராக புஜாரா உள்ளார். 2வது இடத்தில் ஜோ ரூட் (38.76) உள்ளார். எனவே வேண்டுமானால் ராகுல் போன்ற சுமாரான பார்மில் தவிப்பவருக்கு பதிலாக சூரியகுமாரை தேர்வு செய்திருக்கலாமே என்று அவருக்கு பதிலடி கொடுக்கும் ரசிகர்கள் புஜாரா தான் உங்களுக்கு பலி கிடாவா? என்றும் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள். அத்துடன் இப்படி ஒரு மோசமான தேர்வை தேர்வு செய்துள்ள நீங்கள் எப்படி சேட்டன் சர்மா தலைமையிலான முன்னாள் இந்திய தேர்வுக்குழுவில் உறுப்பினராக இடம் பிடித்தீர்கள் என்றும் ரசிகர்கள் அவரை கலாய்க்கிறார்கள்.

இதையும் படிங்க: அஷ்வினின் காலில் விழுந்து வணங்கிய மகேஷ் பித்தியா. யார் இந்த வீரர்? – ஆஸ்திரேலிய அணிக்கு உதவ என்ன காரணம்?

ஒருவேளை இப்படி மோசமாக தேர்வு செய்ததன் காரணமாக தான் உங்களை பிசிசிஐ வீட்டுக்கு அனுப்பி வைத்ததா என்றும் அவரை கிண்டலடிக்கும் ரசிகர்கள் பேசாமல் முன்னாள் வீரர் என்று சொல்லிக் கொள்ளாமல் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்துமாறு விதவிதமாக கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement