அஷ்வினின் காலில் விழுந்து வணங்கிய மகேஷ் பித்தியா. யார் இந்த வீரர்? – ஆஸ்திரேலிய அணிக்கு உதவ என்ன காரணம்?

Mahesh-Pithiya
Advertisement

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நாளை பிப்ரவரி 9-ஆம் தேதி நாக்பூர் மைதானத்தில் துவங்குகிறது. கடந்த முறை ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர்கள் பலர் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வின் பந்துவீச்சில் ரன்களை குறிக்க தடுமாறினார்.

Mahesh Pithiya 1

இதன் காரணமாக இம்முறை அஸ்வினுக்கு எதிரான தாக்குதலில் இருந்து தப்பிக்க ஆஸ்திரேலியா அணியானது அஸ்வினை போலவே பந்துவீசும் உள்ளூர் சுழற்பந்து வீச்சாளரான மகேஷ் பித்தியா என்னும் வீரரை வரவழைத்து வலைப்பயிற்சியில் பந்துவீச வைத்து அவருக்கு எதிராக பயிற்சியினை மேற்கொண்டது. இப்படி ஆஸ்திரேலியா அணி வலைப்பயிற்சிக்கு உள்ளூர் வீரரின் ஒருவரை அழைத்தது தற்போது பெரிய அளவில் பேசுபொருளாக மாறியது. அதுமட்டும் இன்றி மகேஷ் பித்தியா குறித்தும் பலரும் பேச ஆரம்பித்து விட்டனர்.

- Advertisement -

இந்நிலையில் அஸ்வினை போலவே பந்து வீசும் திறமை உடைய இவர் யார்? எங்கிருந்து வந்திருக்கிறார்? அஸ்வினை அவர் நேரில் சந்தித்தபோது என்ன ஆனது என்பது குறித்த நிகழ்வுகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம். அந்த வகையில் ரஞ்சி கிரிக்கெட் போட்டிகளில் தற்போது விளையாடி வரும் அவர் பரோடா அணியில் தனது இடத்தினை உறுதி செய்ய உழைத்து வருகிறார்.

Mahesh Pithiya 2

மேலும் ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடாமல் இருக்கும் அவர் அது குறித்து யோசிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் ஆஸ்திரேலிய அணி வலை பயிற்சியில் பந்துவீச அழைத்ததுமே ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி அதனை ஏற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த பயிற்சியின்போது தமிழக சிறப்பாக அஸ்வினை நேரில் பார்த்த அவர் மகிழ்ச்சியுடன் அவரிடம் சென்று அஸ்வின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி இருக்கிறார்.

- Advertisement -

உடனே அதனை எதிர்பாராத அஸ்வின் அவரைக் கட்டி அணைத்து வாழ்த்தும் தெரிவித்து இருக்கிறார். அதேபோன்று இந்திய அணியின் முன்னணி வீரரான கோலியும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த பயிற்சி முகாம் குறித்து பேசிய மகேஷ் பித்தியா கூறுவதில் : நான் முதல் நாளில் ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டை ஆறு முறை வீழ்த்தியதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : IND vs AUS : இப்போ வாங்க மோதி பாத்துக்கலாம். இந்திய பந்துவீச்சாளருக்கு சவால் விட்டு – ஸ்டீவ் ஸ்மித் அதிரடி

மேலும் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளரான நேதன் லயனும் என்னிடம் எப்படி பந்துவீச வேண்டும் என்பது குறித்து சில ஆலோசனைகளை வழங்கினார். இந்த பயிற்சிக்கு பின்பு அஸ்வின் கூட தன்னிடம் வந்து ஆஸ்திரேலியா வீரர்கள் உன்னுடைய பந்துவீச்சு எதிராக எப்படி ஆடுகிறார்கள் என்றும் கேட்டிருந்தார் என மகேஷ் பித்தியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement