IND vs AUS : இப்போ வாங்க மோதி பாத்துக்கலாம். இந்திய பந்துவீச்சாளருக்கு சவால் விட்டு – ஸ்டீவ் ஸ்மித் அதிரடி

Steve-Smith
- Advertisement -

இந்திய அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கும் ஆஸ்திரேலியா அணியானது ஏற்கனவே இந்தியா வந்து தற்போது தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது நாளை பிப்ரவரி 9-ஆம் தேதி நாக்பூர் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

KS-Bharat

- Advertisement -

இந்த நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது இந்தியாவில் முற்றிலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் நடைபெற இருப்பதால் ஆஸ்திரேலிய வீரர்கள் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக தமிழக வீரர் அஷ்வினை சமாளிப்பது இந்தியாவில் கடினம் என்பதனால் அவரை போன்றே பந்து வீசும் மகேஷ் பித்தியாவை பயிற்சிக்கு வரவழைத்து பயிற்சி மேற்கொண்டனர்.

அப்படி ஆஸ்திரேலிய வீரர்கள் மேற்கொண்ட பேட்டிங் பயிற்சியில் அவர்கள் மகேஷ் பித்தியாவை பந்துவீச சொல்லி பேட்டிங் பயிற்சிகளை மேற்கொண்டனர். இந்நிலையில் அஷ்வினின் பந்துவீச்சை எதிர்த்து விளையாட தயார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

நாங்கள் பல்வேறு ஆப் ஸ்பின்னர்களுக்கு எதிராக விளையாடி இருக்கிறோம். ஆனால் இந்தியாவில் அஷ்வினை எதிர்த்து விளையாடுவது கடினம் தான். இருப்பினும் அதற்காகவே நாங்கள் மகேஷ் பித்தியாவை பந்துவீச வைத்து பயிற்சியினை மேற்கொண்டோம். அந்த பயிற்சியில் நாங்கள் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டதால் நிச்சயம் அஷ்வினின் பந்துவீச்சை சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

- Advertisement -

அஷ்வின் ஒரு தரமான பந்துவீச்சாளர். அவரது பந்துவீச்சை தற்போது நான் எதிர்கொள்ள முழுவதுமாக தயாராகி விட்டேன். அவருக்கு எதிராக தற்போது எங்களிடம் பல வியூகங்கள் இருக்கின்றன என்று ஸ்டீவ் ஸ்மித் கூறினார். மேலும் நாக்பூர் மைதானம் குறித்து தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் :

இதையும் படிங்க : IND vs AUS : முதல் டெஸ்ட் நடைபெறும் நாக்பூர் மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரங்கள், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

நாக்பூர் மைதானம் வறண்டு காணப்படுவதால் சுழற்பந்து வீச்சுக்கு நிச்சயம் சாதகமாக இருக்கும் என்று தான் நினைப்பதாக தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த பிக் பேஷ் டி20 லீக் தொடரில் அடுத்தடுத்து இரண்டு சதங்களை அதிரடியாக விளாசிய ஸ்மித் தற்போது முழு பார்முடன் இருப்பதினால் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவரது பேட்டிங் ஃபார்ம் டாப் க்ளாஸில் இருக்கும் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement