பைனலில் இந்த 2 அணிகள் தான் மோதும். ஒரே வாரத்தில் உல்ட்டாவாக பேசிய சோயிப் அக்தர் – கலாய்க்கும் ரசிகர்கள்

Akhtar
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் ஆரம்பத்திலேயே வெற்றிகரமான வெஸ்ட் இண்டீஸ் முதல் சுற்றிலேயே வெளியேறிய நிலையில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் கோப்பையை தக்க வைக்க முடியாமல் பரிதாபமாக வெளியேறியது. அதைவிட கடைசி நேரத்தில் தென்னாபிரிக்கா வெளியேறியதை பயன்படுத்தி அரை இறுதிக்குள் நுழைந்த பாகிஸ்தானுடன் நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகளும் முன்னதாகவே தகுதி பெற்றன.

இதையடுத்து அரையிறுதி சுற்றில் நவம்பர் 9ஆம் தேதி நியூசிலாந்தை பாகிஸ்தானும் நவம்பர் 10ஆம் தேதி இந்தியாவை இங்கிலாந்தும் எதிர்கொள்கின்றன. இந்த முக்கிய போட்டிகளில் 100% சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி பைனலுக்கு தகுதி பெற அனைத்து அணிகளும் தீவிரமான வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அதில் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் அரையிறுதி சுற்றில் வென்று 2007 போல மீண்டும் பைனலில் மோதுமா என்ற எதிர்பார்ப்பு இருநாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

நாற வாய் பேச்சு:
ஆனால் இறுதியில் 1992இல் இதே ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த உலகக் கோப்பையில் ஆரம்பத்தில் தடுமாறினாலும் கடைசி நேரத்தில் கொதித்தெழுந்து கோப்பையை வென்றது போல் பாகிஸ்தான் வெல்லும் என்று அந்நாட்டு ரசிகர்களும் 2011இல் எம்எஸ் தோனி தலைமையில் 28 வருடங்கள் கழித்து கோப்பையை வென்றது போல் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்லும் என்று இந்திய ரசிகர்களும் நிறைய ஆதாரங்களுடன் சமூக வலைதளங்களில் மோதி வருகிறார்கள். இந்நிலையில் இந்த உலகக் கோப்பையில் கடைசி நேரத்தில் அதிர்ஷ்டத்துடன் வந்துள்ள பாகிஸ்தான் அரையிறுதியில் நியூசிலாந்தை தோற்கடித்த ஃபைனலில் இந்தியாவை எதிர்கொண்டு கோப்பையை வெல்லும் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் கூறியுள்ளார்.

ஆரம்பத்தில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளிடம் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்ததால் இந்த வாரம் லீக் சுற்றுடன் பாகிஸ்தான் வெளியேறினால் அடுத்த வாரம் செமி பைனலுடன் இந்தியா வெளியேறிவிடும் என்று கடந்த வாரம் பேசியிருந்த அவர் தற்போது அப்படியே யூடர்ன் போட்டு உல்ட்டாவாக பேசியது பின்வருமாறு. “அரையிறுதியுடன் இந்தியாவும் பாகிஸ்தானும் வீட்டுக்கு திரும்பாது என்று நம்புகிறேன். நான் இந்தியா – பாகிஸ்தான் மோதும் ஃபைனலை பார்க்க விரும்புகிறேன். அப்படி நடந்தால் ஐசிசி மற்றும் ஒளிபரப்பு நிர்வாகிகளும் மகிழ்ச்சியடைவார்கள்”

- Advertisement -

“குறிப்பாக நாங்கள் இந்தியாவை மீண்டும் எதிர்கொள்வோம் என்று நம்புகிறேன். ஆரம்பத்தில் நாங்கள் வெளியேறி விட்டோம் என்று சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அரையிறுதியுடன் இரு அணிகளும் வெளியேறினால் அது மிகப்பெரிய நகைச்சுவையாக இருக்கும். பாகிஸ்தான் தங்களுடைய அரையிறுதி போட்டியில் வெல்ல வேண்டும். ஆனால் இந்தியா வெல்லுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம். ஏனெனில் வரலாற்றில் நியூசிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் சிறப்பாக செயல்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக நிறைய தோல்விகளை சந்தித்து நியூசிலாந்து சுமாராகவே செயல்பட்டுள்ளது”

“இருப்பினும் எங்களுடைய தொடக்க வீரர்கள் பவுன்ஸ் பந்துகளில் தடுமாறுகிறார்கள். எனவே பாபர் அசாம் சிறப்பாக செயல்பட வேண்டும். ஷாஹீன் அப்ரிடி இன்னும் முழுமையாக குணமடையவில்லை. ஆனால் இங்குள்ள மைதானங்கள் அவரது தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும் என்று நம்புகிறேன். அடுத்த 2 போட்டிகளில் அவர் அபாரமாக செயல்பட்டால் வரலாறு படைப்பார். நசீம் மற்றும் ஹரிஷ் ஏற்கனவே சிறப்பாக செயல்படுகிறார்கள். அத்துடன் எங்களது சுழல் பந்து வீச்சு நியூசிலாந்தை திணறடிக்கும் என்பதால் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்” என கூறினார்.

- Advertisement -

அதாவது 1992, 1999, 2007 ஆகிய வருடங்களில் அரையிறுதியில் நியூசிலாந்தை தோற்கடித்தது போல் இம்முறையும் பாகிஸ்தான் வென்று பைனலுக்கு வரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதனால் மறுபுறம் இங்கிலாந்தை தோற்கடித்து இந்தியா பைனலுக்கு வருமா என்று எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : IND vs ENG : அரையிறுதி போட்டிக்கான அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல் – மாற்றுவீரர் அறிவிப்பு

ஆனால் ஒரு வாரத்திற்கு முன்பாக இரு அணிகளும் வெளியேறும் என்று கூறிய அவர் “அது நாற வாய், இது வேற வாய்” என்ற வகையில் பேசியுள்ளதால் நிறைய ரசிகர்கள் கலாய்க்கிறார்கள். மேலும் வென்றாலும் தோற்றாலும் உங்களது அணிக்கு எப்போதும் ஒரே ஆதரவை கொடுங்கள் என்றும் ரசிகர்கள் அவரை சாடுகிறார்கள்.

Advertisement