IND vs ENG : அரையிறுதி போட்டிக்கான அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல் – மாற்றுவீரர் அறிவிப்பு

Moeen-Ali
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் சூப்பர் 12 சுற்றில் பங்கேற்ற 12 அணிகளில் இரண்டு குழுக்களிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்த நான்கு அணிகள் அரையிறுதி சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளன. அந்த வகையில் குரூப் ஒன்றில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணியும், குரூப் இரண்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணியும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

INDvsENG

- Advertisement -

அந்த வகையில் இந்த தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியானது நாளை நவம்பர் 9-ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே சிட்னி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. அதனை தொடர்ந்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அரையிறுதி போட்டி நாளை மறுதினம் நவம்பர் 10-ஆம் தேதி அடிலெயிடு மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த அரையிறுதி போட்டிக்கான அணியில் இருந்து இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் தசைப்பிடிப்பு காரணமாக விளையாடப் போவதில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற கடைசி ஆட்டத்தின் போது அணியில் விளையாடிய அவர் போட்டியின் போது தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்பட்டதால் பீல்டிங் செய்யாமல் மைதானத்தில் இருந்து வெளியேறினார். மேலும் இரண்டாவதாக இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய வரும் போதும் அவர் கடைசி வரை பேட்டிங் செய்ய இறங்கவே இல்லை.

Phil Salt

இதன் காரணமாக அவரது காயம் பெரிய அளவில் உள்ளது என்பது உறுதியானது. அதனைத்தொடர்ந்து இங்கிலாந்து அணியின் சீனியர் வீரரான மொயின் அலியும் டேவிட் மலானின் காயம் மோசமாக இருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள அரையிறுதி போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இருந்து டேவிட் மலான் வெளியேற்றப்பட்டுள்ளார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

மேலும் அவரது இந்த விலகல் இங்கிலாந்து அணிக்கு பின்னடைவு தான் என்றாலும் அவருக்கு பதிலாக தற்போது அரையிறுதி போட்டிக்கான இங்கிலாந்து அணியில் அதிரடி துவக்க ஆட்டக்காரரான ஃபில் சால்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரை கைப்பற்ற முழு காரணமாக திகழ்ந்தவர் தான் இந்த ஃபில் சால்ட் என்பவர் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பர்ஸ்ட் டைம் விளையாடுனாலும் எப்படி பக்காவா விளையாடுறீங்க? அஷ்வினின் கேள்விக்கு பதிலளித்த – சூரியகுமார் யாதவ்

டி20 கிரிக்கெட்டில் களத்தில் இறங்கிய உடனே அதிரடியில் அசத்தும் அவர் அரையிறுதி போட்டியில் விளையாடினால் பட்லர் அல்லது அலெக்ஸ் ஹேல்ஸ் இருவரில் ஒருவர் மிடில் ஆர்டரில் விளையாட வேண்டிய சூழல் ஏற்படலாம். இல்லையெனில் பில் சால்ட் 3 ஆவது வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது. எது எப்படி இருப்பினும் இந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அரையிறுதி போட்டியானது அனல் பறக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Advertisement