IPL 2023 : எப்போவுமே பிறந்தநாளில் வண்டி ஓடாது, 2009 முதல் சுமாராக செயல்பட்டு வரும் ரோஹித் சர்மாவை – கலாய்க்கும் ரசிகர்கள்

Rohit Sharma MI Ishan Kishan
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 30ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 42வது லீக் போட்டியில் ராஜஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த மும்பை தங்களுடைய 4வது வெற்றியை பதிவு செய்தது. வான்கடே மைதானத்தில் வரலாற்றின் 1000வது போட்டியாக நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 212/7 ரன்கள் குவித்தது. ஜோஸ் பட்லர் 18, கேப்டன் சஞ்சு சம்சான் 14 என முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய அந்த அணிக்கு தனி ஒருவனாக மும்பை பவுலர்களை அடித்து நொறுக்கிய ஜெயஸ்வால் 124 (62) ரன்கள் விளாசினார்.

மும்பை சார்பில் அதிகபட்சமாக அர்சத் கான் 3 விக்கெட்டுகளை சாய்த்தார் அதை தொடர்ந்து 213 ரன்களை துரத்திய அந்த அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா ஆரம்பத்திலேயே 3 (5) ரன்களில் அவுட்டாக இஷான் கிசனும் 28 (23) ரன்களில் நடையை கட்டினார். இருப்பினும் கேமரூன் கிரீன் 44 (26) ரன்களும் சூரியகுமார் யாதவ் 55 (29) ரன்கள் எடுக்க கடைசியில் திலக் வர்மா 29* (21) ரன்களும் டிம் டேவிட் 45* (41) ரன்களும் எடுத்து கடைசி ஓவரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில் அதிகபட்சமாக அஸ்வின் 2 விக்கெட்டுகளை எடுத்தும் இதர பவுலர்கள் ரன்களை வாரி வழங்கியதால் ராஜஸ்தான் தோற்றது.

- Advertisement -

வண்டி ஓடாது:
அப்படி வான்கடே மைதானத்தில் ரசிகர்களுக்கு விருந்து படைத்த அந்த 1000வது போட்டியில் வென்ற மும்பை அணியினர் நேற்று தன்னுடைய 36வது பிறந்தநாளை கொண்டாடிய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு வெற்றியை பிறந்தநாள் பரிசாக கொடுத்தனர். கடந்த 2013இல் கேப்டனாக பொறுப்பேற்ற அவர் அசால்டாக 5 கோப்பைகளை வென்று தோனியையும் மிஞ்சி வெற்றிகரமான ஐபிஎல் கேப்டனாக சாதனை படைத்துள்ளார். அதே போல இந்தியாவுக்காகவும் ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்களை அடித்த வீரராக சாதனை படைத்து நிறைய வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து வரும் அவர் 3 வகையான அணியிலும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

அதனால் நேற்று முழுவதும் முன்னாள் இந்நாள் வீரர்களின் வாழ்த்து மழையில் நனைந்த ரோகித் சர்மா இந்த போட்டியில் ஹிட்மேன் என்று கொண்டாடும் தங்களுக்கு அதிரடியான ஆட்டத்தை பிறந்தநாள் பரிசாக கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இந்த சீசனில் ஒரு போட்டியில் மட்டுமே சிறப்பாக செயல்பட்டு தொடர்ந்து சொதப்பி வரும் அவர் சந்தீப் சர்மா வீசிய 2வது ஓவரில் க்ளீன் போல்ட்டாகி மீண்டும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்தார்.

- Advertisement -

அதை நேராக பார்க்கும் போது சஞ்சு சாம்சன் கிளவுஸ் பட்டதாக தெரிந்ததால் அவுட்டில்லை என்று மும்பை ரசிகர்கள் சொன்னாலும் பக்கவாட்டு பகுதியில் பார்க்கும் போது உண்மையாகவே ரோஹித் சர்மா க்ளீன் போல்ட்டானாது தெளிவாக தெரிகிறது. அதை விட 5000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ள ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த 2014ஆம் ஆண்டு இதே போல தன்னுடைய பிறந்தநாளில் முதல் முறையாக களமிறங்கி விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

இருப்பினும் ஹைதராபாத் அணிக்கு எதிராக ஏப்ரல் 30ஆம் தேதி துபாயில் நடைபெற்ற அந்த போட்டியில் 5 பந்துகளை எதிர்கொண்ட ரோகித் சர்மா புவனேஸ்வர் குமார் வேகத்தில் இதே போல 1 ரன்னில் கிளீன் போல்டாகி தோல்விக்கு காரணமாக வகையில் செயல்பட்டார். அதே போல் 2022 சீசனில் மீண்டும் மும்பைக்காக தன்னுடைய பிறந்தநாளில் விளையாடும் வாய்ப்பைப் பெற்ற அவர் இதே ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 5 பந்துகளில் அஸ்வின் சுழலில் 2 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

இதையும் படிங்க:IPL 2023 : பர்த்டே ஃகிப்ட் 1 கோடிக்காக மும்பைக்கு நல்லா வேலை செஞ்சிங்க – அம்பயர்களை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள், காரணம் இதோ

மேலும் 2009இல் டெக்கான் அணிக்காகவும் 17 (20) ரன்னில் அவுட்டானார். மொத்தத்தில் ஐபிஎல் தொடரில் மும்பைக்காக இதுவரை தன்னுடைய பிறந்தநாளில் களமிறங்கிய 3 போட்டிகளில் அவர் முறையே 17 (10), 1 (5), 2 (5), 3 (5) என ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி வருகிறார். இதைப் பார்க்கும் ரசிகர்கள் பிறந்தநாளில் வண்டி விடுமுறை என்பதால் ஓடாது என்பது போல் ரோகித் சர்மா செயல்பட்டு வருவதாக கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement