IPL 2023 : பர்த்டே ஃகிப்ட் 1 கோடிக்காக மும்பைக்கு நல்லா வேலை செஞ்சிங்க – அம்பயர்களை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள், காரணம் இதோ

- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 30ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 42வது லீக் போட்டியில் ராஜஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த மும்பை தங்களுடைய 4வது வெற்றியை பதிவு செய்தது. அந்த போட்டியில் முதல் பேட்டிங் செய்த ராஜஸ்தானுக்கு ஜோஸ் பட்லர் 18, சஞ்சு சாம்சன் 14, ஹெட்மயர் 8 என்ன முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் மறுபுறம் தனி ஒருவனாக மும்பையை அடித்து நொறுக்கிய ஜெயஸ்வால் சதமடித்து 124 (62) ரன்கள் விளாசி 20 ஓவர்களில் 212/8 ரன்கள் குவிக்க உதவினார்.

மும்பை சார்பில் அதிகபட்சமாக அர்சத் தான் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து 213 ரன்களை துரத்திய மும்பைக்கு ரோகித் சர்மா 3 (5) இசான் கிசான் 28 (23) என தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தாலும் அடுத்து வந்த கேமரூன் கிரீன் 44 (26) ரன்களும் சூரியகுமார் யாதவ் 55 (29) ரன்களும் எடுத்து வெற்றி பாதைக்கு அழைத்து வந்தனர். அதை வீணடிக்காமல் கடைசி நேரத்தில் அதிரடியாக செயல்பட்ட திலக் வர்மா 29* (21) ரன்களும் டிம் டேவிட் 45* (14) ரன்களும் எடுத்து கடைசி ஓவரில் வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

பர்த்டே ஃகிப்ட்:
ராஜஸ்தான் சார்பில் பந்து வீட்டில் அதிகபட்சமாக அஸ்வின் 2 விக்கெட்களை எடுத்தும் இதர பவுலர்கள் ரன்களை வாரி வழங்கியதால் வெற்றி பறிபோனது. அப்படி 1000வது போட்டியில் அதிரடியாக வென்ற மும்பையினர் நேற்று தன்னுடைய 36வது பிறந்தநாளை கொண்டாடிய ரோகித் சர்மாவுக்கு வெற்றியையும் மகிழ்ச்சியும் பரிசாக கொடுத்தனர். ஆனால் அதற்கு மும்பை உரிமையாளர்கள் மற்றும் அம்பானி நிர்வாகத்தினர் அம்பயருக்கு ஒரு கோடி பரிசாக கொடுத்து சாத்தியப்படுத்தியதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

ஏனெனில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தானுக்கு தனி ஒருவனாக சரவெடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் அர்சத் கான் வீசிய கடைசி ஓவரின் 2, 3 ஆகிய பந்துகளில் அடுத்தடுத்த பவுண்டரிகளை பறக்க விட்டு உச்சகட்ட ஃபார்மில் இருந்தார். அப்போது இடுப்புக்கு மேலே வந்த 4வது பந்தை ஜெய்ஸ்வால் அடிக்க முயற்சித்தும் நேராக மேலே சென்று அதை வீசிய அர்சத் கானிடம் கேட்ச்சாக மாறியது. அப்போது வழக்கம் போல இடுப்புக்கு மேலே சென்ற பந்தை நோபால் என்று அறிவிப்பதற்காக நடுவர்கள் அதை சோதித்தனர்.

- Advertisement -

அதை சோதித்துப் பார்த்த போது ஜெய்ஸ்வால் இடுப்புக்கு மேலே வந்த பந்து ஸ்டம்ப்புகளில் கூட உரசாமல் தொடர்ந்து மேலே சென்றது தெளிவாக தெரிய வந்தது. அதனால் நிச்சயமாக அம்பயர்கள் நோபால் வழங்கி ஃப்ரீ ஹிட் கொடுப்பார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் 3வது நடுவர் சோதித்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே களத்தில் இருந்த நடுவர்களிடம் சென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா எதையோ சொன்னதால் அமைதியான நடுவர்கள் ரிப்ளையில் அது நோபால் என்று அப்பட்டமாக தெரிந்தும் அதை அப்படியே அமுக்கி சரியான பந்து தான் என்று அறிவித்தார்கள்.

அதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்களைப் போலவே அதிருப்தியுடன் சென்ற ஜெய்ஸ்வால் இப்போட்டியில் இருந்த ஃபார்முக்கு ஃபீரி ஹிட் கிடைத்து அடுத்த 2 எதிர்கொண்டிருந்தால் நிச்சயமாக 10 ரன்கள் எடுத்திருப்பார். அது இறுதியில் ராஜஸ்தானின் வெற்றிக்கு இன்னும் சற்று அதிகமாக போராடும் வாய்ப்பைக் கொடுத்திருக்கும் என்றே சொல்லலாம்.

- Advertisement -

ஆனால் அதை செய்யாத அம்பயர்கள் பிறந்தநாள் பரிசாக பெற்ற ஒரு கோடிக்கு ரோகித் சர்மாவின் பேச்சைக் கேட்டு மும்பைக்கு சாதகமாக நடந்து கொண்டதாக ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள். அதே போல் பட்லருக்கு ஒய்ட் பந்தில் அம்பயர்கள் அவுட் கொடுத்தனர். அத்துடன் மும்பை வீரர்கள் அணிந்திருந்த ஷூ போலவே களத்தில் இருந்த நடுவர்கள் ஷூ அணிந்திருந்தது அதற்கு மற்றுமொரு சாட்சி என்றும் ரசிகர்கள் கூறுகிறார்கள்.

இதையும் படிங்க:வீடியோ : பிறந்தநாளில் இப்படியா பண்ணுவீங்க, அம்பயரை விளாசும் ரோஹித் ரசிகர்கள் – ஆனால் உண்மையான உண்மை இதோ

மேலும் முரட்டுத்தனமாக அடிக்கக்கூடியவர் என்று தெரிந்தும் டிம் டேவிட்க்கு கடைசி ஓவரின் முதல் 3 பந்துகளில் ஜேசன் ஹோல்டர் ஃபுல் டாஸ் போட்டு கொடுத்து ஹாட்ரிக் சிக்ஸர்களை வழங்கியதும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக ரசிகர்கள் கூறுகின்றனர். கடந்த பல வருடங்களாகவே பல போட்டிகளில் மும்பைக்கு சாதகமாக நடுவர்கள் தொடர்ந்து அப்பட்டமாக நடந்து கொள்வதே ரசிகர்கள் இப்படி கலாய்ப்பதற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement