வீடியோ : பிறந்தநாளில் இப்படியா பண்ணுவீங்க, அம்பயரை விளாசும் ரோஹித் ரசிகர்கள் – ஆனால் உண்மையான உண்மை இதோ

- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெற்ற 42வது லீக் போட்டியில் ராஜஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த மும்பை 4வது வெற்றியை பதிவு செய்தது. வான்கடே மைதானத்தில் வரலாற்றின் 1000வது ஐபிஎல் போட்டியாக நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 212/7 ரன்கள் குவித்தது. சொல்லப்போனால் பட்லர் 18, சாம்சன் 14 என முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க தவறியதால் தடுமாறிய ராஜஸ்தானை தனி ஒருவனாக தூக்கி நிறுத்திய தொடக்க வீரர் யசஎஸ்வி ஜெய்ஸ்வால் சதமடித்து 124 (62) ரன்கள் விளாசிய நிலையில் மும்பை சார்பில் அதிகபட்சமாக அர்சத் கான் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதை தொடர்ந்து 212 ரன்களை துரத்திய மும்பைக்கு கேப்டன் ரோகித் சர்மா 3 (5) இசான் கிசான் 28 (23) என தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இருப்பினும் அடுத்து வந்த கேமரூன் கிரீன் அதிரடியாக 44 (26) ரன்களும் சூரியகுமார் யாதவ் 55 (29) ரன்கள் எடுத்து கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்த ஆட்டமிழந்தனர். அதை வீணடிக்காமல் திலக் வர்மா 29* (21) ரன்கள் எடுக்க கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் ஹாட்ரிக் சிக்ஸர்களுடன் 45* (14) ரன்கள் விளாசி வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

குழப்பத்தில் ரசிகர்கள்:
அதனால் 1000வது ஐபிஎல் போட்டியில் அதிரடியான வெற்றி பெற்ற மும்பை நேற்று 36வது பிறந்தநாளை கொண்டாடிய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு வெற்றியை பரிசாக கொடுத்தது. இருப்பினும் 213 ரன்களை துரத்தும் போது தொடக்க வீரராக களமிறங்கி ஹிட்மேன் என்ற பெயருக்கேற்றார் போல் அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் ஆரம்பத்திலேயே தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அப்போது அவருக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் 2வது ஓவரை வீசிய சந்திப் சர்மாவை மெதுவாக வீசுமாறு சொன்ன கேப்டன் சஞ்சு சாம்சன் ஸ்டம்ப்களுக்கு மிகவும் அருகிலேயே நின்றார்.

அந்த நிலைமையில் எதிர்பார்க்கப்பட்டது போலவே சந்தித் சர்மா வீசிய கடைசி பந்து சற்று மெதுவாக வந்ததை கணிக்க தவறிய ரோகித் சர்மா முன்கூட்டியே அடிக்க முயற்சித்து தவற விட்டார். அதனால் அந்தப் பந்து ஸ்டம்ப்களில் அடித்த காரணத்தால் ரோஹித் சர்மா அவுட்டானார். இருப்பினும் அந்த சமயத்தில் மிகவும் நெருக்கமாக நின்ற சஞ்சு சாம்சனின் கிளவ்ஸ் பெய்ல்ஸ் மீது பட்டிருக்குமா என்பதை 3வது நடுவர்கள் சோதித்தனர். அப்படி சோதித்ததில் பந்து பெய்ல்ஸ் மீது படுவதற்கு முன்பாகவே சஞ்சு சாம்சனின் கைகளுக்கு சென்றது. அப்போது அவருடைய கிளவ்ஸ் தான் பெய்ல்ஸ் மீது பட்டது போல தெரிந்தது.

- Advertisement -

ஆனால் நிலையிலும் சோதனைக்கு பின் அது அவுட் என்று அம்பயர்கள் அறிவித்தது மும்பை ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும் கோபத்தையும் கொடுத்தது. ஏனெனில் பந்து பெய்ல்ஸ் மீது படுவதற்கு முன்பாகவே சாம்சனின் கைகளில் சென்று தஞ்சம் அடைந்து விட்டது. அதன் பின்பு தான் அவருடைய கிளவுஸ் பெய்ல்ஸ் மீது பட்டதாக வீடியோ ஆதாரத்தை நீட்டும் மும்பை ரசிகர்கள் தன்னுடைய பிறந்தநாளில் அதிரடி காட்டுவதற்காக வந்த ரோகித் சர்மாவுக்கு இப்படி தவறான தீர்ப்பை வழங்கி அவுட்டாக்கிய அம்பயர்களை சமூகவலைதளங்களில் சரமாரியாக விமர்சித்து வருகிறார்கள்.

ஆனால் மும்பை ரசிகர்கள் நேரான கோணத்தை மட்டுமே பார்த்து விட்டு பேசுவதாக எதிரணி தரப்பு ரசிகர்கள் பதிலடி கொடுக்கிறார்கள். குறிப்பாக பக்கவாட்டு கோணத்தில் இருந்து பார்க்கும் போது பந்து பெய்ல்ஸ் மீது லேசாக உரசியவாறு சென்று சஞ்சு சாம்சனின் கைகளில் படுகிறது. அப்போது போல்ட்டான மகிழ்ச்சியில் சஞ்சு சாம்சன் பந்தை கூட பிடிக்காமல் விக்கெட்டை கொண்டாடத் துவங்குகிறாரே தவிர பெய்ல்ஸ் மீது தனது கையுறைகளை மோதவில்லை.

இதையும் படிங்க:CSK vs PBKS : ஒரு ஓப்பனரா நான் அவரை மாதிரி ஆடனும். அதுதான் என் ஆசை – துவக்கவீரர் டேவான் கான்வே பேட்டி

அதாவது முதல் கோணத்தில் பார்க்கும் போது உண்மையாகவே சஞ்சு சாம்சன் வேண்டுமென்றே உரசியது போல் தெரிகிறது. ஆனால் பெய்ல்ஸ் மீது உரசிய பந்து கோணம் மாறாமல் நேர்கோட்டில் சென்றதாலேயே அப்படி ஒரு காட்சி அமைகிறது. இருப்பினும் பக்கவாட்டில் பார்க்கும் போது தான் உண்மை தெளிவாக தெரிகிறது என்பதால் அதை பார்க்காமல் பேசாதீர்கள் என்று மும்பை ரசிகர்களுக்கு எதிரணி ரசிகர்கள் பதிலடி கொடுக்கின்றனர்.

Advertisement