CSK vs PBKS : ஒரு ஓப்பனரா நான் அவரை மாதிரி ஆடனும். அதுதான் என் ஆசை – துவக்கவீரர் டேவான் கான்வே பேட்டி

Devon Conway 1
- Advertisement -

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று மதியம் நடைபெற்ற 41-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பஞ்சாப் அணி கடைசி பந்தில் வீழ்த்தி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை குவித்தது.

CSK vs PBKS

- Advertisement -

சென்னை அணி சார்பாக துவக்க வீரர் டேவான் கான்வே 52 பந்துகளை சந்தித்து 16 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 92 ரன்கள் குவித்து அசத்தினார். பின்னர் 201 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி கடைசி ஓவரின் கடைசி பந்தில் வெற்றியினை பதிவு செய்து 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது சென்னை அணிக்காக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 92 ரன்கள் அடித்த டேவான் கான்வேக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்து ஆட்டநாயகன் விருதினை பெற்ற கான்வே தான் விளையாடிய சிறப்பான இன்னிங்ஸ் குறித்து பேசியகையில் கூறியதாவது :

Devon Conway

நாங்கள் முதலில் பேட்டிங் செய்து முடித்த போது இந்த மைதானத்தில் பந்து நின்று வருவதால் நிச்சயம் இந்த 200 ரன்கள் வெற்றிக்கு போதுமானது என்றே பேசிக்கொண்டோம். அதேபோன்று இந்த மைதானத்தில் 200 ரன்கள் இலக்கு என்பது சற்று சவாலான இலக்கு தான் இருந்தாலும் இறுதியில் இந்த போட்டியில் நாங்கள் தோல்வி அடைந்ததில் மிகவும் வருத்தமாக இருக்கிறது.

- Advertisement -

இந்த தோல்வியை எங்களால் எளிதில் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த மைதானத்தில் பேட்டிங் செய்வது எளிதாக இல்லை இருந்தாலும் நம்முடைய ஆட்டத்தை சிம்பிளாக வைத்தால் ரன்கள் வருகிறது. டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை ஏற்றம் இறக்கம் என்பது நிகழக்கூடிய ஒன்றுதான். என்னை பொறுத்தவரை நான் ஒரு வீரராக மைக் ஹஸ்ஸி போன்று விளையாட நினைக்கிறேன்.

இதையும் படிங்க : MI vs RR : பொல்லார்டு மாதிரி இவர்கிட்ட பவர் இருக்கு. ராஜஸ்தான் அணிக்கெதிரான வெற்றிக்கு பிறகு – ரோஹித் சர்மா பேட்டி

மைக் ஹஸ்ஸி ஆஸ்திரேலியா அணிக்காக மட்டுமின்றி சிஎஸ்கே அணிக்காகவும் நிறைய விளையாடிய அனுபவம் உடையவர். அவர் இங்கு நிறைய போட்டிகளில் விளையாடியுள்ளார். அதேபோன்று நானும் இங்கு நிறைய போட்டிகளில் விளையாட ஆசைப்படுகிறேன் என டேவான் கான்வே கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement