ஆஸ்திரேலியாவில் அடித்த இடியால் இந்தியாவில் ஆர்சிபி’யை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள் – விதவிதமான ரியாக்சன்கள் உள்ளே

RCB Sydney Thunders
- Advertisement -

ஆஸ்திரேலியாவின் புகழ் பெற்ற பிக்பேஷ் லீக் தொடரின் 16வது சீசன் கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில் டிசம்பர் 16ஆம் தேதியன்று நடைபெற்ற 5வது லீக் போட்டி உலகையே திரும்பி பார்க்க வைத்தது. ஏனெனில் பந்து வீச்சுக்கு சாதகமாக அமைந்த ஸ்பாட்லஸ் கிரிக்கெட் மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 20 ஓவரில் போராடி 139/9 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கிறிஸ் லின் 36 ரன்கள் எடுக்க சிட்னி சார்பில் அதிகபட்சமாக பரூக்கி 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதை தொடர்ந்து 140 ரன்களை துரத்திய சிட்னி தண்டர்ஸ் அணி நெருப்பாக பந்து வீசிய அடிலெய்ட் வேகபந்து வீச்சாளர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் சீட்டு கட்டு போல மட மடவென விக்கெட்டுகளை இழந்து 5.5 ஓவரில் வெறும் 15 ரன்களுக்கு சுருண்டது.

அலெக்ஸ் ஹேல்ஸ் உள்ளிட்ட 5 வீரர்கள் டக் அவுட்டான அந்த அணியில் அதிகபட்சமாக பிரண்டன் டோஜெட் 4 ரன்கள் எடுத்தார். அந்த அளவுக்கு எரிமலையாக பந்து வீசிய அடிலெய்ட் சார்பில் அதிகபட்சமாக ஹென்றி தோர்ன்டன் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதன் வாயிலாக 124 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற அடிலெய்ட் தனது முதல் போட்டியிலேயே அதிரடி வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியது.

- Advertisement -

ஆர்சிபி அலப்பறைகள்:
ஆனால் 15 ரன்களுக்கு சுருண்ட சிட்னி தண்டர்ஸ் அணி டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து பரிதாபமான உலக சாதனை படைத்தது. இதற்கு முன் சீசெக் குடியரசு அணிக்கு எதிராக துருக்கி அணி 29 ரன்களுக்கு சுருண்டதே முந்தைய சாதனையாகும். அப்படி ஆஸ்திரேலியாவில் முழங்கிய அந்த இடியால் இந்திய சமூக வலைத்தளங்களில் ஐபிஎல் தொடரில் 49 ரன்களுக்கு சுருண்டு குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்த பெங்களூரு அணியை நினைவு கூர்ந்து ஏராளமான ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

ஏனெனில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவுக்கு எதிராக 132 ரன்களை துரத்திய பெங்களூரு அணி நட்சத்திர வீரர்கள் இருந்தும் வெறும் 49 ரன்களுக்கு அவுட்டாகி குறைந்தபட்ச ஐபிஎல் ஸ்கோரை பதிவு செய்து பரிதாப சாதனை படைத்தது. அப்போது முதல் ஏதேனும் ஒரு அணி ஆரம்பத்திலேயே கொத்தாக நான்கைந்து விக்கெட்டுகளை இழந்தால் 49 ரன்களுக்குள் அவுட்டாகி பெங்களூருவின் வரலாற்றுச் சாதனையை உடைக்குமா என்று ரசிகர்கள் கிண்டலடிப்பார்கள்.

- Advertisement -

அது இப்போது நடந்துள்ளதால் 15 ரன்கள் எடுத்த சிட்னி அணியை பார்க்கும் பெங்களூரு ரசிகர்கள் நம்மையும் மிஞ்சிய ஒரு அணி இருப்பதை நினைத்து மகிழ்ச்சியடைந்தாலும் அது ஐபிஎல் தொடரில் இல்லை என்பதை நினைத்து அடுத்த நொடியே சோகமடைவது போல் ஒரு ரசிகர் கலாய்த்துள்ளார். மறுபுறம் சிட்னி அணி ஆல் அவுட்டானதற்கு பலிகாடாக அனைவரும் சேர்ந்து பெங்களூரு அணியை கலாய்ப்பதாக ஒரு ரசிகர் குறிப்பிட்டுள்ளார்.

என்ன இருந்தாலும் 49 ரன்கள் மிஞ்சி தங்களை விட கேவலமாக அவுட்டான சிட்னி அணிக்கு சில பெங்களூரு ரசிகர்களே “அய்யாதுரை நீ பல்லாண்டு வாழனும் ஐயாத்துரை” என்று பாட்டு பாடி நன்றி தெரிவிப்பதுடன் விராட் கோலி புகைப்படத்தை போட்டும் நன்றி தெரிவிக்கிறார்கள். அதே போல் பிரம்மானந்தா, ஆமிர் கான் போன்ற பிரபல நடிகர்கள் போர்வையில் சில பெங்களூரு ரசிகர்கள் சிட்னி அணியை பார்த்து கண்கலங்கி நன்றி தெரிவிக்கிறார்கள்.

- Advertisement -

அத்துடன் தங்களுடைய சாதனையை சிட்னி அணி உடைத்ததை பார்த்து 2022 சீசனில் டெல்லியை மும்பை தோற்கடித்த போது பெங்களூரு அணி கொண்டாடியது போல் அந்த அணி ரசிகர்கள் தற்போது கொண்டாடுவதாகவும் விக்ரம் படத்தில் கமல்ஹாசன் மாஸ் என்ட்ரி கொடுப்பது போன்ற வீடியோக்களை பதிவிட்டு இதர ரசிகர்கள் கலகலப்பை வெளிப்படுத்துகிறார்கள்.

இதையும் படிங்க: IPL 2023 : மினி ஏலத்திற்கு தனது பெயரை பதிவுசெய்த 15 வயது இளம்வீரர் – யார் இவர்? விவரம் இதோ

இது போல டஜன் கணக்கில் நிறைய ரசிகர்கள் பெங்களூரு அணியையும் சிட்னி அணியையும் சமூக வலைதளங்களில் வெறித்தனமாக கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement