IPL 2023 : மினி ஏலத்திற்கு தனது பெயரை பதிவுசெய்த 15 வயது இளம்வீரர் – யார் இவர்? விவரம் இதோ

Ghazanfar-1
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16-வது சீசனானது எதிர்வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கு முன்னதாக தற்போது இந்த தொடரில் பங்கேற்று விளையாடும் 10 அணிகளும் தங்களது அணியில் இருந்து விடுவிக்கும் வீரர்கள் மற்றும் அணிகளுக்கு இடையேயான மாற்றம் செய்யும் வீரர்கள் என அனைத்து பட்டியலையும் வெளியிட்டு விட்டனர். அதன் பின்னர் வரும் டிசம்பர் 23-ஆம் தேதி கொச்சியில் மினி ஏலம் நடைபெற இருக்கிறது.

Auction

- Advertisement -

இந்த மினி ஏலத்தில் அவரவர்களுக்கு தேவையான வீரர்களை வாங்க அனைத்து அணிகளும் காத்திருக்கின்றனர். இந்த ஏலத்தில் 900-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த வேளையில் அதிலிருந்து 405 வீரர்கள் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளார்கள். அதில் 132 வெளிநாட்டு வீரர்களும், 273 இந்திய வீரர்களும் அடங்குவர்.

இந்நிலையில் இந்த மினி ஏலத்தில் மிகவும் குறைந்த வயதில் தனது பெயரை பதிவு செய்தவராக ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அல்லா முகமது கசான்ஃபர் என்பவர் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

Ghazanfar

ஏற்கனவே ஆப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த ரஷீத் கான், முகமது நபி, முஜிபுர் ரஹ்மான் மற்றும் ரஹமனுல்லா குர்பாஸ் ஆகியோர் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் வேளையில் தற்போது மினி ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ள இந்த 15 வயதான ஆப்கான் வீரர் மீது அனைவரது கவனமும் சென்றுள்ளது.

- Advertisement -

அதன்படி 15 வயதாகும் அல்லா முகமது கஸான்பர் 6 அடி 2 அங்குலம் கொண்ட சுழற்பந்து வீச்சாளராக இருக்கிறார். இருப்பினும் அனுபவமில்லா அவரை ஐபிஎல் அணிகள் ஏலத்தில் எடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும்.

இதையும் படிங்க : கேப்டன் பதவிக்கெல்லாம் இவரு செட்டாக மாட்டாரு. இதுக்கு அவரே இருந்திருக்கலாம்? – டேனிஷ் கனேரியா கருத்து

அதே வேளையில் அல்லாஹ் முகமது கசான்பர்-க்கு இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வினின் பந்துவீச்சு மிகவும் பிடிக்கும் என்று தான் ஐபிஎல் தொடரில் விளையாட ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இவர் இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பேஷ் தொடரில் தனது பெயரை பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement