கேப்டன் பதவிக்கெல்லாம் இவரு செட்டாக மாட்டாரு. இதுக்கு அவரே இருந்திருக்கலாம்? – டேனிஷ் கனேரியா கருத்து

Kaneria
- Advertisement -

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது வங்கதேச நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியானது கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி சட்டகிராம் நகரில் துவங்கிய வேளையில் இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 404 ரன்களை அடித்தது. அதன் பின்னர் தங்களது முதல் இன்னிங்சை விளையாடிய வங்கதேச அணியானது 150 ரன்களில் சுருண்டது.

IND-vs-BAN

- Advertisement -

இந்த போட்டியின் முதல் நாள் முதல் செஷனில் ஆதிக்கம் செலுத்திய வங்கதேச அணியானது பின்னர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் இன்னிங்ஸில் புஜாரா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இந்நிலையில் வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் கேப்டன் பதவிக்கு சரியான நபர் இல்லை என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியா விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

Shakib-3

வங்கதேச அணியில் எபோதத் ஹொஸேன் லேசான காயம் காரணமாக பந்து வீசாமல் வெளியேறினார். ஆனால் அதன் பின்னர் அவர் மீண்டும் களத்திற்கு வந்தும் அவருக்கு சரியாக பந்து வீசும் வாய்ப்பை சாஹிப் அவர்கள் வழங்கவில்லை. அதே போன்று மற்றொரு வீரரான காலித் அகமதுவையும் அவர் சரியாக பயன்படுத்தவில்லை.

- Advertisement -

இப்படி அவருடைய கேப்டன்ஷிப் இந்த போட்டியில் மோசமாக இருந்ததாலேயே வங்கதேச அணி சரிவை சந்தித்தது. சாஹிப் அல் ஹசன் ஒரு மிகச்சிறந்த வீரர்தான் அதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. ஆனால் அவருக்கு டெஸ்ட் கேப்டன்சி சரிப்பட்டு வராது. அதே வேளையில் ஒரு நாள் தொடரில் லிட்டன் தாஸ் மிகச் சிறப்பாக செயல்பட்டதை நாம் பார்த்தோம்.

இதையும் படிங்க : காயத்திலிருந்து மீண்ட நட்சத்திர வீரர். 2ஆவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு – ஆனாலும் ஒரு சிக்கல்

எனவே டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவரே கேப்டன்சி செய்திருக்கலாம். சாகிப் அல் ஹசன் கேப்டன்சி பதவிக்கு செட்டாக மாட்டார் என்று நேரடியாகவே அவரை விமர்சனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement