காயத்திலிருந்து மீண்ட நட்சத்திர வீரர். 2ஆவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு – ஆனாலும் ஒரு சிக்கல்

Jasprit Bumrah Team India
- Advertisement -

வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது முதலில் அங்கு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இழந்தது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது வங்கதேச நாட்டில் நடைபெற்று வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த டிசம்பர் 14ஆம் தேதி துவங்கியது.

IND-vs-BAN

- Advertisement -

இவ்வேளையில் இந்த டெஸ்ட் தொடருக்கான முதல் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஒருநாள் தொடரின் போது ஏற்பட்ட கட்டை விரல் காயம் காரணமாக விளையாட முடியாமல் அணியிலிருந்து வெளியேறினார். அதனைத்தொடர்ந்து மும்பை திரும்பிய அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

அந்த பரிசோதனையின் முடிவில் முதல் போட்டியை தவறவிட்ட ரோஹித் சர்மா வரவிருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தற்போது நடைபெற்று வரும் முதல் போட்டியில் ரோகித் சர்மா விளையாடாததால் அவருக்கு பதிலாக கே.எல் ராகுல் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

Rohit-Sharma

இவ்வேளையில் அடுத்த டிசம்பர் 22-ஆம் தேதி மீர்பூர் நகரில் நடைபெறயிருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரோகித் மீண்டும் கேப்டனாக அணிக்கு திரும்புவார் என்று கூறப்படுகிறது. ஆனாலும் ரோகித் சர்மா காயத்திலிருந்து மீண்டது குறித்தோ அல்லது அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாடுவது குறித்தோ இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ எந்த ஒரு அதிகாரப்பூர்வ செய்தியையும் வெளியிடவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : வீடியோ : ஆர்சிபியை மிஞ்சிய ஆஸ்திரேலிய பிபிஎல் அணி, வெறும் 15 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி மோசமான உலக சாதனை

அதேபோன்று இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமி மற்றும் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காயத்தினால் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த வங்கதேச சுற்றுப்பயணத்தின் ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணியானது இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்ற ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement