வீடியோ : ஆர்சிபியை மிஞ்சிய ஆஸ்திரேலிய பிபிஎல் அணி, வெறும் 15 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி மோசமான உலக சாதனை

BBL
- Advertisement -

ஆஸ்திரேலியாவின் புகழ் பெற்ற பிக்பேஷ் டி20 தொடரின் 16வது சீசன் கடந்த டிசம்பர் 13ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கியது. மொத்தம் 8 அணிகள் 61 போட்டிகளில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தும் இத்தொடரில் டிசம்பர் 16ஆம் தேதியன்று நடைபெற்ற 5வது போட்டியில் சிட்னி தண்டர்ஸ் மற்றும் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் ஆகிய அணிகள் மோதின. புகழ்பெற்ற ஸ்பாட்லஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற அடிலெய்ட் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் போராடி 139/9 ரன்கள் சேர்த்தது. மேத்தியூ ஷார்ட் 9, ஜேக் வெதரால்ட் 10, ஆடம் ஹாஸ் 4, தாமஸ் கெல்லி 13, ஹேரி நெல்சன் 13 என முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக கிறிஸ் லின் 36 (27) ரன்களும் கோலின் டீ கிராண்ட்ஹோம் 33 (24) ரன்களும் எடுத்து ஓரளவு காப்பாற்றினார்கள்.

சிட்னி சார்பில் அதிகபட்சமாக பரூக்கி 3 விக்கெட்களை எடுத்த நிலையில் 140 ரன்களை துரத்திய அந்த அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த ஆடுகளத்தில் துல்லியமாக பந்து வீசிய அடிலெய்ட் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பதில் சொல்ல முடியாத சிட்னி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்கள். குறிப்பாக முதல் ஓவரிலேயே மேத்தியூ கிக்ல்ஸ் டக் அவுட்டான நிலையில் அடுத்த ஓவரில் தென்னாப்பிரிக்க வீரர் ரிலீ ரோசவ் 3 (5) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்.

- Advertisement -

ஆர்சிபியை மிஞ்சி:
போதாக்குறைக்கு அடுத்து வந்த கேப்டன் ஜேசன் சங்கா டக் அவுட்டான நிலையில் எதிர்ப்புறம் நின்ற நம்பிக்கை நட்சத்திர அதிரடி வீரர் அலெக்ஸ் ஹேல்ஸும் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அதனால் 7/4 என ஆரம்பத்திலேயே திணறிய அந்த அணியை நங்கூரத்தை போட்டு காப்பாற்ற வேண்டிய டேனியல் சாம்ஸ் 1 (3), ஓலிவர் டேவிஸ் 1 (4), அலெஸ் ரோஸ் 2 (4), கிறிஸ் க்ரீன் 0 (6) என மிடில் ஆர்டர் மற்றும் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் அடுத்தடுத்து வந்த வாக்கிலேயே ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்கள்.

அதனால் 10/8 என சரிந்த அந்த அணி 50 ரன்களையாவது தாண்டுமா என்று எதிர்பார்த்த நிலையில் குரிண்டர் சந்து 0 (3), ப்ரெண்டன் டோகேட் 4 (2) என டெயில் எண்டர்களுக்கும் கருணை காட்டாத சிட்னி பவுலர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக்கி வெறும் 15 ரன்களுக்கு சுருட்டி கதையை முடித்தார்கள். அந்தளவுக்கு எரிமலையாக பந்து வீசிய சிட்னி சார்பில் ஹென்றி தோர்ன்டன் 5 விக்கெட்டுகளையும் வெஸ் அகர் 4 விக்கெட்டுகளையும் மேத்யூ சார்ட் 1 விக்கெட்டையும் எடுத்தனர்.

- Advertisement -

அதன் வாயிலாக 124 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி தனது முதல் போட்டியிலேயே அசுர வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 2 புள்ளிகளுடன் அதிக ரன் ரேட்டை பெற்று முதலிடம் பிடித்து மிரட்டியது. ஆனால் 15 ரன்களுக்கு சுருண்டு பரிதாபமாக தோற்ற சிட்னி தண்டர்ஸ் அணி பிக்பேஷ் லீக் வரலாற்றில் குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து மோசமான சாதனை படைத்தது. இதற்கு முன் கடந்த 2014ஆம் ஆண்டு மெல்போர்ன் ரெஜெனெட்ஸ் அணி மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு எதிராக 57 ரன்களில் அவுட்டானதே முந்தைய சாதனையாகும்.

அதை விட ஒட்டு மொத்த டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்த அணி என்ற பரிதாப உலக சாதனையும் அந்த அணி படைத்துள்ளது. இதற்கு முன் கடந்த 2019ஆம் ஆண்டு துருக்கி அணி சீசெக் அணிக்கு எதிராக 21 ரன்களுக்கு ஆல் அவுட்டானதே முந்தைய உலக சாதனையாகும். அதை விட முதல் தரம், லிஸ்ட் ஏ, டி20 என அனைத்து உலகின் வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து ஒரு இன்னிங்ஸில் குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற மோசமான உலக சாதனையும் சிட்னி தண்டர்ஸ் அணி படைத்தது.

இதையும் படிங்க: ஐபிஎல் விட பிஎஸ்எல் தான் பெஸ்ட் ஏன் தெரியுமா? முகமது ரிஸ்வான் வெளிப்படையாக காரணம் கூறும் என்ன

முன்னதாக உலகின் நம்பர் ஒன் டி20 தொடராக கருதப்படும் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 49 ரன்களுக்கு ஆல் அவுட்டானதே உலகப் புகழ் பெற்றதாகும். தற்போது அந்த அணியை மும்மடங்கு மிஞ்சும் வகையில் மோசமாக அவுட்டான சிட்னி அணியை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பரிதாபத்துடன் கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement