ஐபிஎல் விட பிஎஸ்எல் தான் பெஸ்ட் ஏன் தெரியுமா? முகமது ரிஸ்வான் வெளிப்படையாக காரணம் கூறும் என்ன

Mohammed Rizwan IPL
- Advertisement -

உலக அளவில் நம்பர் ஒன் பிரீமியர் லீக் டி20 தொடராக கருதப்படும் ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் 2023ஆம் ஆண்டு கோடைகாலத்தில் இந்தியாவிலேயே கோலாகலமாக நடைபெறுகிறது. அதற்காக வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று நடைபெறும் வீரர்கள் ஏலத்தில் உலகம் முழுவதிலும் இருந்து 405 கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கிறார்கள். முன்னதாக கடந்த 2008ஆம் ஆண்டு சாதாரண 8 அணிகளுடன் துவங்கப்பட்ட ஐபிஎல் கடந்த 15 வருடங்களில் தன்னைத்தானே மெருகேற்றிக் கொண்டு இன்று சர்வதேச கிரிக்கெட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் அங்கமாக மாறியுள்ளது. இதில் நடைபெறும் பெரும்பாலான போட்டிகள் கடைசி ஓவர் வரை சென்று திரில்லர் திருப்பங்களை ரசிகர்களுக்கு விருந்து படைப்பதுடன் ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கான ரூபாய்களை வருமானமாக கொட்டிக் கொடுக்கிறது.

- Advertisement -

அதனால் தரத்தில் உலக கோப்பையையும் பணத்தில் ஐசிசியையும் மிஞ்சம் அளவுக்கு விஸ்வரூபம் அடைந்துள்ள ஐபிஎல் தொடருக்கு போட்டியாக உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் டி20 தொடர்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் அதில் எந்த தொடராலும் ஐபிஎல் தொடரின் உச்சத்தை பாதியளவு கூட தொட முடியவில்லை. அந்த வகையில் அண்டை நாடான பாகிஸ்தான் கடந்த 2016 முதல் பிஎஸ்எல் தொடரை வெற்றிகரமாக நடத்தி வந்தாலும் ஐபிஎல் தொடரின் உச்சத்தை தொட முடியவில்லை.

பிஎஸ்எல் தான் டாப்:

சொல்லப்போனால் அத்தொடரில் கோப்பையை வெல்லும் அணிக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை ஐபிஎல் தொடரில் விளையாடும் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற நட்சத்திரங்கள் வாங்கும் ஒரு வருட சம்பளத்துக்கு சமமாக இல்லை. ஆனாலும் ஐபிஎல் தொடரை விட பிஎஸ்எல் தொடர் தான் சிறந்தது என்று அந்நாட்டு வாரியமும் முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் கடந்த சில வருடங்களாகவே கூறி வருகிறார்கள். அந்த வரிசையில் இணைந்துள்ள நட்சத்திர வீரர் முகமது ரிஸ்வான் உலகில் இருக்கும் டி20 தொடர்களிலேயே தரத்தில் முதன்மையான இடத்தில் இருப்பதால் ஐபிஎல் தொடரை விட பிஎஸ்எல் தான் சிறந்தது என்று கூறியுள்ளார்.

psl 1

குறிப்பாக உலகத்தரம் வாய்ந்த சர்வதேச வீரர்களுக்கு கூட வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் அமரும் அளவுக்கு பிஎஸ்எல் தொடர் மிகவும் தரமானது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “பிஎஸ்எல் இந்த ஒட்டு மொத்த உலகத்தையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது. ஆரம்பத்தில் பிஎஸ்எல் வெற்றி பெறாது என்று பேச்சுக்கள் இருந்தன. ஆனால் கிரிக்கெட் வீரர்களான நாங்கள் பிஎஸ்எல் வெற்றி அடைந்ததாக உணர்கிறோம்”

- Advertisement -

“இங்கே ஐபிஎல் இருக்கலாம் ஆனால் இந்த உலகில் பிஎஸ்எல் தொடரில் விளையாடிய எந்த வீரரை வேண்டுமானாலும் கேளுங்கள். அவர்கள் பாகிஸ்தான் தொடர் தான் உலகிலேயே மிகவும் கடினமான லீக் தொடர் என்று நிச்சயமாக சொல்வார்கள். இங்கு ரிசர்வ் ஆன வீரர்கள் கூட சர்வதேச அளவிலான வீரர்களாக இருந்தாலும் பெஞ்சில் அமர்ந்துள்ளனர். அந்த வகையில் பாகிஸ்தான் நல்ல பேக் அப் வீரர்களை பெற்றுள்ளது. அதற்கான பாராட்டை பிஎஸ்எல் பெற வேண்டும்” என்று கூறினார்.

Rizwan-2

அதாவது பணத்தில் ஐபிஎல் நம்பர் ஒன் தொடராக இருந்தாலும் தரத்தில் உலகிலேயே பிஎஸ்எல் தொடருக்கு நிகர் வேறு எதுவுமில்லை என்று தெரிவிக்கும் முகமது ரிஸ்வான் அதை உலகம் முழுவதிலும் இருக்கும் வெளிநாட்டு வீரர்கள் சொல்வதாக கூறியுள்ளார்.  இருப்பினும் பிஎஸ்எல் தொடரை விட நிறைய நட்சத்திர வீரர்கள் பல கோடிகளுக்கு வாங்கப்பட்டு ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் அமர்ந்த கதைகள் உள்ளது.

இதையும் படிங்க:  IND vs BAN: வீடியோ : சிக்சருடன் சதமடித்த காபா நாயகன் சுப்மன் கில் – 3வது நாளின் முடிவில் இந்தியாவின் வெற்றி நிலவரம் இதோ

அத்துடன் ஐசிசி நடத்தும் உலக கோப்பைகளை விட ஐபிஎல் மிகவும் தரமான தொடர் என்று சமீப காலங்களில் ரிக்கி பாண்டிங், ஏபி டீ வில்லியர்ஸ் போன்ற வெளிநாட்டு ஜாம்பவான் வீரர்கள் வெளிப்படையாக பாராட்டியுள்ளார்கள். இருப்பினும் பிஎஸ்எல் தொடர் தான் உலகிலேயே நம்பர் ஒன் என்று முகமது ரிஸ்வான் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement