DC vs KKR : சொதப்புவது அவங்களுக்கு புதுசா? கொல்கத்தாவின் போராட்ட வெற்றியை தாரை வார்த்த வங்கதேச வீரரை – விளாசும் ரசிகர்கள்

Liton Das Stumping
- Advertisement -

ஐபிஎல் 2019 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 20ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 28வது லீக் போட்டியில் கொல்கத்தாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த டெல்லி தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்து நிம்மதியடைந்தது. மழையால் தாமதமாக இரவு 8.30 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த மைதானத்தில் டெல்லியின் தரமான பந்து வீச்சில் ஆரம்பம் முதலே தடுமாறி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 20 ஓவரில் 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக தொடக்க வீரர் ஜேசன் ராய் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 43 (39) ரன்களும் ஆண்ட்ரே ரசல் 1 பவுண்டரி 4 சிக்ஸருடன் 38 (31) ரன்களும் எடுக்க டெல்லி சார்பில் அதிகபட்சமாக இசாந்த் சர்மா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், அன்றிச் நோர்ட்ஜெ ஆகியோர் தலா 2 விக்கெட்கள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 128 ரன்களை துரத்திய டெல்லிக்கு பிரிதிவி ஷா 13, மிட்சேல் மார்ஷ் 2, பில் சால்ட் 5 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தாலும் கேப்டன் டேவிட் வார்னர் நீண்ட நாட்கள் கழித்து அதிரடியாக விளையாடி 11 பவுண்டரியுடன் 57 (41) ரன்கள் குவித்து கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

சொதப்பல் புதுசா:
ஆனால் பிட்ச் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததை பயன்படுத்திய கொல்கத்தாவுக்கு தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி, அங்குல் ராய் மற்றும் கேப்டன் நித்திஷ் ராணா ஆகியோர் மிகச் சிறப்பாக பந்து வீசி மனிஷ் பாண்டே 21 (23) ஆவேஷ் கான் 0 என அடுத்து வந்த டெல்லி வீரர்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கி வெற்றிக்கு போராடினர். இருப்பினும் இலக்கு குறைவாக இருந்த காரணத்தால் அடுத்து களமிறங்கிய அக்சர் படேல் 19* (22) ரன்களும் லலித் யாதவ் 4* (7) ரன்களும் எடுத்து 100க்கும் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி கடைசி ஓவரில் வெற்றி பெற வைத்தனர்.

ஆனால் கடைசி 3 ஓவர்களில் டெஸ்ட் போட்டியை போல கொல்கத்தா அபாரமாக பந்து வீசியதால் அக்சர் படேல் – லலித் யாதவ் ஆகியோர் அதிரடி காட்ட முடியாமல் திணறினார்கள். குறிப்பாக கடைசி 12 பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்ட போது நித்திஷ் ராணா வீசிய 19வது ஓவரின் 3வது பந்தில் இறங்கி அடிக்க முயற்சித்த அக்சர் படேல் பந்தை தவற விட்டார். அப்போது அதை பிடித்த விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ் ஸ்டம்பிங் செய்யும் வாய்ப்பை கோட்டை விட்டார். அதை விட அதே ஓவரின் 5வது பந்தில் மீண்டும் அதேப் போல இறங்கி அடிக்க முயற்சி அக்சர் படேல் முன்பை விட வெள்ளைக்கோட்டுக்கு வெளியே அதிக தூரம் வெளியே சென்றார்.

- Advertisement -

அப்போதும் லிட்டன் தாஸ் அழகாக கிடைத்த ஸ்டம்பிங் வாய்ப்பை நழுவ விட்டதால் பேட்டிங்கில் தடுமாறினாலும் பந்து வீச்சில் கடுமையாக போராடி கொல்கத்தா கொண்டு வந்த வெற்றி வாய்ப்பு பறிபோனது. முன்னாதாக வங்கதேசத்துக்காக அதிரடி தொடக்க வீரராக செயல்பட்டு வரும் லிட்டன் தாஸ் இந்த ஐபிஎல் தொடரில் முதல் முறையாக களமிறங்கிய இந்த போட்டியில் பேட்டிங்கிலும் பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி கூட அதிரடியாக விளையாடாமல் 4 (4) ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தார்.

இதையும் படிங்க:RCB vs PBKS : இனிமே நான் வெறும் பாஸ்ட் பவுலர் மட்டுமில்ல. ஆட்டநாயகன் விருது பெற்ற முகமது சிராஜ் – பேசியது என்ன?

அதை விட 2 அழகான ஸ்டம்பிங் வாய்ப்பை அழுத்தமான நேரத்தில் செய்யாமல் நழுவ விட்டு கொல்கத்தாவின் போராட்ட வெற்றியை டெல்லிக்கு தாரை வார்த்த அவரை ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். பொதுவாகவே சர்வதேச கிரிக்கெட்டில் கையில் இருக்கும் வெற்றியை கூட முழுமையாக வந்து சேர்வதற்கு முன்பாகவே கொண்டாடி அழுத்தமான நேரங்களில் சொதப்பி எதிரணிக்கு பரிசளிப்பது வங்கதேசத்திற்கு கைவந்த கலையாகும். அந்த வகையில் இப்போட்டியில் செயல்பட்ட அவரை பார்த்த ரசிகர்கள் அழுத்தமான போட்டிகளில் சொதப்புது வங்கதேச வீரர்களுக்கு புதுசா என்று கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement