RCB vs PBKS : இனிமே நான் வெறும் பாஸ்ட் பவுலர் மட்டுமில்ல. ஆட்டநாயகன் விருது பெற்ற முகமது சிராஜ் – பேசியது என்ன?

Siraj
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 27-வது லீக் போட்டியானது நேற்று மதியம் மொஹாலி நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் சாம் கரன் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியானது தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை குவித்தது.

RCB vs PBKS

- Advertisement -

பெங்களூர் அணி சார்பாக கேப்டன் விராட் கோலி 59 ரன்களையும், டூபிளெஸ்ஸிஸ் 84 ரன்களையும் அடித்து அசத்தினர். பின்னர் 175 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணியானது 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்கள் மட்டுமே குவித்ததால் 24 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய பெங்களூரு அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் நான்கு ஓவர்கள் வீசி 21 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன் காரணமாக அவருக்கு இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது சிறப்பான பந்துவீச்சு குறித்து பேசிய முகமது சிராஜ் கூறுகையில் :

Siraj 1

நான் முதல் பந்தே கொஞ்சம் ஷார்ட்டாக வீசினேன். அப்போதே எனக்கு தெரிந்து விட்டது நிச்சயம் இந்த மைதானத்தில் பந்தினை சற்று ஃபுல் பந்துகளாக வீசினால் விக்கெட்டுகள் கிடைக்கும் என்று நினைத்தேன். அந்த வகையில் மிகச் சிறப்பாக பந்துவீச விக்கெட்டுகளும் அடுத்தடுத்து கிடைத்தன. லாக்டவுனின் போது நான் எடுத்துக் கொண்ட பயிற்சி எனக்கு தற்போது பெரிதளவு உதவுகிறது.

- Advertisement -

ஏனெனில் முன்னர் எல்லாம் நான் பந்துவீசும் போது அடிக்கடி பேட்ஸ்மேன்கள் பவுண்டரிகளை விளாசுவார்கள். அப்போதுதான் நான் லாக்டவுனில் நிறைய பயிற்சிகளை மேற்கொண்டேன். எனது பந்துவீச்சு திட்டங்கள், என்னுடைய உடற்தகுதி மற்றும் நான் பந்துவீசும் இடங்கள் என அனைத்தையும் வகைப்படுத்தி தனித்தனியே பயிற்சியினை மேற்கொண்டேன். அந்த பயிற்சிகளின் முடிவு தான் தற்போது என்னை மிகச் சிறப்பாக பந்துவீச வைக்கிறது.

இதையும் படிங்க : DC vs KKR : என்னதான் நாங்க இந்த மேட்ச்ல ஜெயிச்சிருந்தாலும், எனக்கு திருப்தி இல்ல – டேவிட் வார்னர் அதிருப்தி

அதோடு இனிமேல் பந்துவீச்சில் மட்டுமல்ல இனி நான் அணிக்காக அனைத்து வகையிலும் எனது பங்களிப்பை வழங்க பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். அதிலும் குறிப்பாக தற்போது என்னை நான் ஒரு டீசன்டான ஃபீல்டர் என்று கூறுவேன். ஏனெனில் களத்தில் பீல்டிங்கின் போது சில தவறுகள் ஏற்படுவது இயல்புதான். ஆனால் தற்போது நான் பீல்டிங்கிலும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன் என முகமது சிராஜ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement