கேப்டன் அவர் தான் ஆனா என்ன செய்றார்னு அவருக்கே தெரியாது – கேஎல் ராகுலை கலாய்க்கும் ரசிகர்களின் ரியாக்சன்கள் இதோ

KL Rahul
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடி வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலைமையில் டிசம்பர் 22ஆம் தேதியன்று தாக்கா கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய 2வது போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் ஆரம்பம் முதலே துல்லியமாக பந்து வீசிய இந்தியாவுக்கு பதில் சொல்ல முடியாத அந்த அணி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சாண்டோ 24, சாகிப் அல் ஹசன் 16, ரஹீம் 26 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக மோனிமுல் ஹைக் 84 ரன்கள் எடுத்தார்.

சிறப்பாக செயல்பட்ட இந்தியா சார்பில் அதிகபட்சமாக உமேஷ் யாதவ் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய இந்தியாவுக்கு பொறுப்புடன் செயல்பட வேண்டிய கேப்டன் கேஎல் ராகுல் மீண்டும் தடவலாக செயல்பட்டு 45 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 1 பவுண்டரியுடன் 10 ரன்களில் 22.22 என்ற புஜாராவை விட மோசமான ஸ்ட்ரைக் ரேட்டில் அவுட்டாகி சென்றார்.

- Advertisement -

ஒரு வேலையும் இல்ல:
முன்னதாக கடந்த 2019 வாக்கில் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் இளம் வீரராக இருப்பதால் அடுத்த தலைமுறை கேப்டனாக உருவாக்க நினைத்த பிசிசிஐ ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் துணை கேப்டனாக அறிவித்தது. ஆனால் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் 17 கோடி என்ற உச்ச கட்டத்தை எட்டிய தன்னுடைய மார்க்கெட்டை தக்க வைப்பதற்காக பெரிய ரன்களை குவிக்க வேண்டும் என்ற சுயநலத்துடன் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடும் அவர் சமீப காலங்களாகவே தன்னுடைய அணியின் தோல்விக்கு காரணமாகும் வகையில் செயல்பட்டு வருகிறார்.

குறிப்பாக நடைபெற்று முடிந்த ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் அதிரடி காட்ட வேண்டிய ஓப்பனிங் இடத்தில் தடவலாக செயல்பட்ட அவரது மோசமான பேட்டிங் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அத்துடன் ஏதேனும் ஒரு கத்துக்குட்டி அணிக்கு எதிராக பெரிய ரன்களை அடித்து விட்டு அதை வைத்து அடுத்து 10 போட்டிகளில் வாய்ப்புகளைப் பெற்று காலத்தை தள்ளி வரும் அவரை செல்பிஷ் என்று ரசிகர்கள் ஆதாரபூர்வமாக விமர்சித்து வருகிறார்கள். அந்த நிலையில் இந்த வங்கதேச ஒருநாள் தொடரின் கடைசிப் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா காயமடைந்ததால் டெஸ்ட் தொடரில் இந்தியாவை வழி நடத்தும் வாய்ப்பை பெற்றுள்ள அவர் இது வரை முறையே 22, 23, 10 என சொற்ப ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

அதை விட முதல் போட்டியில் 150 ரன்களுக்கு சுருண்ட வங்கதேசம் ஃபாலோ ஆன் பெற்றது. அப்போது 254 ரன்கள் முன்னிலை இருந்ததால் நிச்சயம் இந்தியா ஃபாலோ ஆன் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதை செய்தால் 2வது இன்னிங்ஸில் பெரிய ஸ்கோர் குவித்து தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க முடியாது என்று கருதிய ராகுல் சுயநலத்துடன் இந்தியா மீண்டும் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தது ரசிகர்களை கடுப்பாக வைத்தது.

அதே போல் முதல் போட்டியில் அவரை விட அதிகமான (40) ரன்களும் 8 விக்கெட்டுகளும் எடுத்து ஆட்டநாயகன் விருது வென்ற குல்தீப் யாதவை சம்பந்தமின்றி நீக்குவதற்கு கேப்டனாக அனுமதி கொடுத்த ராகுல் மற்றுமொரு சுயநல செயல்பாட்டை வெளிப்படுத்தினார். அப்படி ஏற்கனவே பேட்ஸ்மேனாக திண்டாடும் அவர் கேப்டனாகவும் அணியின் நலனுக்காக பாடுபடாமல் சுயநலத்துடன் நடந்து கொள்வது தெளிவாக தெரிகிறது.

இதையும் படிங்க: ஐ.பி.எல் வரலாற்றிலேயே யாரும் தொடாத உச்சத்தை தொட்ட சாம் கரன் – அப்பாடா இவ்வளவு கோடிகளா?

அதனால் எஞ்சிய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு இதற்கு முன் டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக வெற்றியை பதிவு செய்யாத அவரது பெயரில் முதல் வெற்றியை சேர்த்து இந்தியாவுக்காகவும் பாடுபட்டு வருகிறார்கள். இதிலிருந்து கேப்டனாக இந்தியாவை ராகுல் நடத்தவில்லை இந்திய அணி வீரர்கள் தான் ராகுலை கேப்டனாக வழி நடத்துகிறார்கள் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சரமாரியாக கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement