ஐ.பி.எல் வரலாற்றிலேயே யாரும் தொடாத உச்சத்தை தொட்ட சாம் கரன் – அப்பாடா இவ்வளவு கோடிகளா?

Sam-Curran
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று கேரள மாநிலம் கொச்சியில் ஐபிஎல் தொடருக்கான மினி ஏலமானது நடைபெற்று வருகிறது. எதிர்வரும் இந்த 16-ஆவது ஐபிஎல் தொடரானது 2023-ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ள வேளையில் இந்த தொடருக்கான மினி ஏலமானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த மினி ஏலத்தில் எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களை வாங்கப் போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சத்தை பெற்றுள்ளது.

அந்த வகையில் ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என ஒரு ஆல்ரவுண்டராக அசத்தி தொடர் நாயகன் விருதினை வென்றிருந்த 24 வயதான இளம் வீரர் சாம் கரன் எந்த அணிக்காக ஏலத்தில் எடுக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்தது. ஏனெனில் சமீபத்தில் மிகச் சிறப்பான ஒரு ஆல்ரவுண்டாக திகழ்ந்துவரும் அவர் மிகவும் இளம்வயது வீரர் என்பதனால் அவரை ஏலத்தில் எடுக்க பல்வேறு அணிகளும் போட்டி போட்டன.

- Advertisement -

அந்தவகையில் மும்பை, பெங்களூரு, ராஜஸ்தான், பஞ்சாப், லக்னோ, சென்னை என பல்வேறு அணிகளும் மோதின. அடிப்படை விலையாக இரண்டு கோடிகள் நிர்ணயிக்கப்பட்டிருந்த அவரது விலை ஏலம் விடப்பட்ட சிறிது நேரத்திலேயே ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. ஏலத்தில் சாம் கரனை எடுக்க பல்வேறு அணிகளும் கடுமையான போட்டியை நிகழ்த்த சிஎஸ்கே அணியும் 15.25 கோடி வரை அவரை ஏலத்தில் கேட்டது.

ஆனால் அதற்கும் மேலே லக்னோ, பஞ்சாப், மும்பை அணிகள் அவரது விலையை ஏற்றி கொண்டே போக ஒரு கட்டத்தில் சிஎஸ்கே அணி அவரது ஏலத்தின் கேள்வியை நிறுத்திக் கொண்டது. ஆனால் இறுதியில் சாம் கரனுடைய விலையானது 18.50 கோடி ரூபாய் வரை சென்று உச்சம் தொட்டது. அப்போது ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு ஏலம் போனவராக சாம் கரன் சாதனை படைத்தார்.

- Advertisement -

இந்திய மதிப்பில் சுமார் 18 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் அவரை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. ஏற்கனவே ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக 2019 ஆம் ஆண்டு விளையாடி இருந்த சாம்கரன் கடந்த 2021-ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்காக விளையாடி இருந்தார்.

இதையும் படிங்க : சோயப் அக்தரிடம் சந்தித்த விலா எலும்பு காயத்தை – நாட்டுக்காக கங்குலியுடன் மறைத்த பின்னணியை பகிர்ந்த சச்சின்

இந்நிலையில் இந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அவரை எந்த அணி ஏலத்தில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவரை பஞ்சாப் அணி 18.50 கோடிக்கு தட்டி தூக்கியுள்ளது. இதன்மூலம் இதுவரை ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போனவராக இருந்த கிரிஸ் மோரிசை பின்னுக்கு தள்ளி அவர் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement