சோயப் அக்தரிடம் சந்தித்த விலா எலும்பு காயத்தை – நாட்டுக்காக கங்குலியுடன் மறைத்த பின்னணியை பகிர்ந்த சச்சின்

Ganguly-1
- Advertisement -

இந்தியாவின் நட்சத்திர முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள், அதிக சதங்கள், அதிக ஆட்டநாயகன் விருதுகள் போன்ற ஏராளமான சரித்திர சாதனைகளை படைத்து நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த ஜாம்பவானாக போற்றப்படுகிறார். மேலும் நவீன கிரிக்கெட்டை விட அவரது காலத்தில் ஜிம்பாப்வே அணியில் கூட பந்து வீச்சாளர்கள் தரமாகவும் திறமையாகவும் இருந்தார்கள். இருப்பினும் அந்த அனைத்து பவுலர்களுக்கும் பெரும்பாலான தருணங்களில் சிம்ம சொப்பனமாக நின்ற அவர் பலமுறை தக்க பதிலடி கொடுத்து பெரிய ரன்களை குவித்து அசத்தியுள்ளார்.

sachin 2

- Advertisement -

குறிப்பாக பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் இந்தியாவை சாய்க்க வேண்டுமெனில் முதலில் சச்சினை அவுட்டாக்க வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே பவுன்சர் பந்துகளையும் பீமர் பந்துகளையும் வீசி அச்சுறுத்துவார். அதற்கு 2003 உலக கோப்பையில் அடித்த மறக்க முடியாத சிக்ஸர் உட்பட சச்சின் பல தருணங்களில் தக்க பதிலடி கொடுத்துள்ளார். முன்னதாக தன்னுடைய அற்புதமான 24 வருட கேரியரில் சச்சின் டெண்டுல்கர் ஏராளமான காயங்களையும் சந்தித்தவர்.

விளா எலும்பு முறிவு:
ஆனால் அதற்கெல்லாம் சளைக்காமல் காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் மீண்டும் விளையாடிய அவரது உடல் முழுவதும் ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது என்று 90ஸ் கிட்ஸ் கிரிக்கெட் ரசிகர்கள் நம்பிய காலங்களை மறக்க முடியாது. அந்த வரிசையில் அவர் கடந்த 2007ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சோயப் அக்தர் வீசிய ஒரு பவுன்சர் பந்தில் விலா எலும்பு முறிவை சந்தித்தார். அந்த சத்தத்தை எதிர்ப்புறமிருந்த கேப்டன் சௌரவ் கங்குலி கேட்டு பதற்றமடைந்ததைப் போல இதர இந்திய வீரர்கள் பதற்றமடையக் கூடாது என்பதற்காக அந்த வலியை பொறுத்துக் கொண்டு அடுத்ததாக நடைபெற்ற ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் வரை தொடர்ந்து விளையாடியதாக சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Ganguly

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “எதிர்ப்புறமிருந்த கங்குலி அதை கேட்டார் (விலா எலும்புகள் உடையும் சத்தம்). அப்போது என்னிடம் வந்த அவர் நீங்கள் சாம்பியன் வீரர் என்பதால் களத்திலிருந்து வெளியேற மாட்டீர்கள் என்று கூறினார். அதற்கு நான் கங்குலியிடம் “எதுவும் பேசாதீர்கள் என்னால் உங்களுக்கு பதிலளிக்க முடியவில்லை” என்று கூறினேன். அதே சமயம் அந்த இடத்தை விட்டு நகராத நான் கவலைப்படாதீர்கள் நான் தொடர்ந்து விளையாடுவேன் என்று கேப்டனான அவரிடம் சொன்னேன்”

- Advertisement -

“அந்த காயம் தீவிரமாக இருந்தது. அது 95 கி.மீ வேகத்தில் உங்கள் மீது குத்து விட்டது போல் இருந்தது. இருப்பினும் நான் தொடர்ந்து விளையாடுவேன் என்று சொன்னேன். அப்போது ஏதோ பெரிய தவறு இருப்பதாக எனக்கு தெரிந்தும் நான் அதை கட்டுப்படுத்த வேண்டியிருந்தது. ஏனெனில் நான் காயமடைந்ததை எதிரணி பவுலருக்கு காட்ட விரும்பவில்லை. அதுவும் ஒரு வகையான மைண்ட் கேம் ஆகும். இருப்பினும் தாதா கேப்டனாக நான் களத்திலிருந்து வெளியேறி விடுவேனோ என்று பதற்றமடைந்தார். ஆனால் கவலைப்படாதீர்கள் நான் தொடர்ந்து விளையாடுவேன் என்று அவரிடம் கூறினேன்”

sachin1

“அந்த போட்டிக்கு பின் என்னால் நிம்மதியாக தூங்கவும் இருமவும் உட்காரவும் சிரிக்கவும் முடியவில்லை. இருப்பினும் அதை தெரிந்தால் இதர வீரர்கள் கவலையடைவார்கள் என்பதால் எனது அருகில் இருக்கும் வீரர்களை நான் கவனத்துடன் தேர்வு செய்தேன். அதன் பின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் முடிந்த பின் மருத்துவமனைக்கு சென்று சோதித்த போது என்னுடைய விலா எலும்புகள் முறிந்து போனதாக மருத்துவர் சொன்னார். அது எனக்கு முன்கூட்டியே தெரியும் என்றாலும் நான் யாரிடமும் அதை பகிர்ந்து கொள்ளவில்லை. ஏனெனில் வரலாற்றில் என்னை விட பல மகத்தான விளையாட்டு வீரர்கள் காயங்களுடன் தங்களது நாட்டுக்காக விளையாடியுள்ளார்கள்”

இதையும் படிங்க: CSK : சாம் கரனை தவறவிட்டாலும் தரமான ஆல்ரவுண்டரை 16.25 கோடிக்கு வாங்கிய சி.எஸ்.கே – இதுதான் கரெக்ட்

“அந்த வகையில் இந்தியாவுக்காக விளையாடுவது மிகப்பெரிய கௌரவம் என்பதால் அதை என்னால் விட்டுக் கொடுக்க முடியாது. நான் கிரிக்கெட்டை மிகவும் விரும்பியதால் அதில் எனது வாழ்க்கையை செலுத்துவதற்காக தேர்ந்தெடுத்தேன். அந்த அழகான பயணத்தில் எனக்கு நிறைய அற்புதமான தருணங்கள் கிடைத்தது. நல்லது நடக்கும் போது இறுதியில் நீங்கள் கடவுளுக்கு இனிப்பு வழங்க வேண்டும்” என்று கூறினார். இதைக் கேட்கும் இந்திய ரசிகர்களுக்கு சச்சினை போன்ற தேசப்பற்று மிகுந்த வீரர்கள் இப்போது இந்தியாவுக்காக விளையாடுவதில்லையே என்ற ஆதங்கம் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement