CSK : சாம் கரனை தவறவிட்டாலும் தரமான ஆல்ரவுண்டரை 16.25 கோடிக்கு வாங்கிய சி.எஸ்.கே – இதுதான் கரெக்ட்

CSK-Auction
- Advertisement -

இந்தியாவில் எதிர்வரும் 2023-ஆம் ஆண்டிற்கான பதினாறாவது ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் மினி ஏலமானது டிசம்பர் 23-ஆம் தேதி இன்று கொச்சியில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த மினி ஏலத்தில் 400-க்கும் மேற்பட்ட வீரர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர். அவர்களிலிருந்து வெறும் 87 வீரர்கள் மட்டுமே 10 அணிகளுக்கும் தேர்வார்கள் என்பதனால் இந்த ஏலத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஐபிஎல் மினி ஏலத்தில் நமது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்தெந்த வீரர்களை எடுக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பும் தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே அடிப்படை விலையான 50 லட்சம் ரூபாய்க்கு ரகானேவை வாங்கிய சி.எஸ்.கே அணி அடுத்ததாக பிராவோவின் இடத்தை நிரப்பும் வீரராக ஒரு தரமான ஆல்ரவுண்டரை எதிர்பார்த்தது.

- Advertisement -

அப்படி அந்த இடத்தில் இங்கிலாந்து வீரர் சாம் கரனை சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் சாம் கரன் அதிக தொகைக்கு பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டதால் அடுத்ததாக ஒரு சிறப்பான ஆல்ரவுண்டரை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சிஎஸ்கே அணி 31 வயதான இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனான பென் ஸ்டோக்சை 16 கோடியே 25 லட்ச ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது.

அண்மையில் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த பென் ஸ்டோக்ஸ் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதிரடியான பேட்ஸ்மேன் என்பது மட்டுமின்றி வேகப்பந்து வீச்சாளராகவும் அசத்தலாக செயல்படும் ஸ்டோக்ஸ் கேப்டன்சி அனுப்பவும் உடையவர். எனவே சென்னை அணியின் கேப்டனாக தோனிக்கு அடுத்து அவர் கூட அடுத்த தேர்வாக இருக்கலாம் என்பதனால் சிஎஸ்கே அணி அவரை ஏலத்தில் எடுத்ததாக தெரிகிறது.

- Advertisement -

31 வயதான பென் ஸ்டோக்ஸ் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தனிப்பட்ட காரணங்களால் விளையாடவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அறிமுகமாகிய அவர் இதுவரை 89 டெஸ்ட் போட்டிகள், 105 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 43 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

ஐபிஎல் தொடரை பொறுத்தவரை கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை இதுவரை 43 போட்டிகளில் அவர் பங்கேற்றுள்ளார். சிஎஸ்கே அணிக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டது ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது. ஏனெனில் போட்டியின் எந்த நேரத்திலும் இவரால் முழுமையான நான்கு ஓவர்களை வீசமுடியும்.

இதையும் படிங்க : CSK : மினி ஏலத்தில் முதல் நபராக சி.எஸ்.கே வாங்கிய வீரர் யார் தெரியுமா? – அவருக்கு வயசு என்ன தெரியுமா?

அதே போன்று துவக்க வீரராகவோ, மிடில் ஆர்டரிலோ அல்லது பின் வரிசையிலோ எந்த இடத்தில் வேண்டுமானாலும் களமிறங்கி அதிரடியாக பேட்டிங் செய்ய முடியும். இப்படி ஒரு தரமான ஆல்ரவுண்டர் நமக்கு கிடைத்தது நிச்சயம் வரவேற்கக் கூடிய ஒன்றுதான். அதேபோன்று சிஎஸ்கே அணியை தலைமை தாங்கவும் இவருக்கு தகுதி இருக்கிறது என்று ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement