CSK : மினி ஏலத்தில் முதல் நபராக சி.எஸ்.கே வாங்கிய வீரர் யார் தெரியுமா? – அவருக்கு வயசு என்ன தெரியுமா?

CSK-Auction
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது இதுவரை 15 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரின் 16-வது சீசன் எதிர்வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக தற்போது மினி ஏலமானது கொச்சியில் இன்று டிசம்பர் 23-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த மினி ஏலத்தில் 400-க்கும் மேற்பட்ட வீரர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர். அவர்களிலிருந்து 87 வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்பதனால் இந்த ஏலத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் நான்கு முறை ஐ.பி.எல் சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை அணியானது எந்தெந்த வீரர்களை தேர்வு செய்யப் போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சற்று முன்னர் சி.எஸ்.கே அணி தங்களது முதல் தேர்வாக 34 வயதான இந்திய வீரர் அஜிங்க்யா ரஹானேவை 50 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

கடந்த ஆண்டு கொல்கத்தா அணிக்காக விளையாடிய அஜின்க்யா ரகானே மோசமான ஃபார்ம் காரணமாக அந்த அணியில் இருந்து கழட்டி விடப்பட்ட வேளையில் எப்பொழுதுமே வயதான வீரர்களை குறி வைத்து ஏலத்தில் எடுக்கும் நமது சிஎஸ்கே அணி இம்முறையும் அதனை காப்பாற்றும் விதமாக 34 வயதான ரகானேவை எடுத்துள்ளது.

- Advertisement -

சமீபத்தில் இந்திய டெஸ்ட் அணியிலிருந்து கழற்றிவிடப்பட்ட ரகானே தற்போது ரஞ்சி கிரிக்கெட் தொடரில் மும்பை அணியின் கேப்டனாகவும் விளையாடி வருகிறார். அதோடு கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அவர் இரட்டை சதம் அடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் சிஎஸ்கே அணி இவரை எந்த இடத்தில் பிரயோகிக்கும் என்பது புரியாத ஒன்றாகவே உள்ளது.

இதையும் படிங்க : வீடியோ : பேட்டிங்கில் சொதப்பி விட்டு ரிஷப் பண்ட்டை முறைத்த விராட் கோலி – கடைசி வாய்ப்பையும் தவற விட்டதால் ரசிகர்கள் அதிருப்தி

34 வயதான இந்திய வீரர் ரஹானே கடந்த 2011 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிற்கு அறிமுகமாகி இதுவரை 82 டெஸ்ட் போட்டிகள், 90 ஒருநாள் போட்டிகள் மற்றும் 20 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதேபோன்று ஐ.பி.எல் போட்டிகளை பொறுத்தவரை 2008 ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் அவர் இதுவரை 158 போட்டிகளில் விளையாடி 4000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement