MI vs RCB : எதிரணிக்கு இம்பேக்ட் வீரராக ஜாலம் செய்த கேதார் ஜாதவ், டு பிளேஸிஸ் – மேக்ஸ்வெல் ஆட்டதுக்கு ஏற்படுத்திய பங்கம்

RCB Kedar Jadhav
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 9ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு மும்பையில் நடைபெற்ற 54வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதின. தலா 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் கீழ் வரிசையில் தவிக்கும் அந்த 2 அணிகளுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய நிலையில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய பெங்களூருவுக்கு முதல் ஓவரிலேயே விராட் கோலி கேட்ச் கொடுத்து 1 (4) ரன்னில் மும்பையில் சிறப்பான ரிவியூ காரணமாக அவுட்டானார்.

அதை தொடர்ந்து வந்த அனுஜ் ராவத் 6 (4) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததால் 16/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய பெங்களூருவை அடுத்ததாக களமிறங்கிய கிளன் மேக்ஸ்வெல் மறுபுறம் நின்ற கேப்டன் டு பிளேஸிஸ் உடன் இணைந்து அதிரடியாக விளையாடி மீட்டெடுத்தார். குறிப்பாக மும்பை பவுலர்களை 200 ஸ்ட்ரைக் ரேட்டில் தன்னுடைய ஸ்டைலில் பவுண்டரிகளாக பறக்க விட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்த அவர் முதல் ஆளாக அரை சதமடித்து அசத்தினார்.

- Advertisement -

அதே வேகத்தில் 3வது ஓவரில் இணைந்து 13 ஓவர்கள் வரை நிலைத்து நின்று அதிரடி காட்டிய இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 120 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து பெங்களூருவை வலுப்படுத்திய போது கிளன் மேக்ஸ்வெல் 7 பவுண்டரி 4 சிக்ஸருடன் 68 (33) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அந்த நிலையில் வந்த மஹிபால் லோம்ரர் 1 (3) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுக்க மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கேப்டன் டு பிளேஸிஸ் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 65 (41) ரன்கள் குவித்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார்.

அந்த நிலைமையில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் இந்த சீசனில் முதல் முறையாக தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அதிரடியாக விளையாடி 4 பவுண்டரி 1 சிக்சரை பறக்க விட்டு 30 (18) ரன்கள் குவித்து கடைசி நேரத்தில் அவுட்டானார். ஆனால் மறுபுறம் 1 ரன்னில் அவுட்டான மஹிபால் லோம்ரருக்கு பதிலாக இம்பேக்ட் வீரராக களமிறங்கியிருந்த சீனியர் இந்திய வீரர் கேதார் ஜாதவ் பவுண்டரியை பறக்க விட்டதால் மிரட்டலாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

இருப்பினும் சமீப காலங்களாகவே சுமாராக செயல்பட்டதால் இந்தியா மற்றும் ஐபிஎல் தொடரில் கழற்றி விடப்பட்ட அவர் மும்பையின் நேர்த்தியான பந்து வீச்சில் மேற்கொண்டு அதிரடி காட்ட முடியாத அளவுக்கு கடைசி நேரத்தில் திணறலாக செயல்பட்டார். குறிப்பாக கடைசி ஓவரில் 3 பந்துகளை எதிர்கொண்ட அவர் வெறும் 2 ரன்களை மட்டுமே எடுத்து மொத்தமாக 10 பந்துகளில் 12* ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரை விட ஹசரங்கா 2 பவுண்டரியை பறக்க விட்டு 12* (8) ரன்கள் எடுத்த போதிலும் 20 ஓவர்களில் பெங்களூரு 199/6 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்தளவுக்கு பந்து வீச்சில் டெத் ஓவர்களில் அசத்தலாக செயல்பட்ட மும்பை சார்பில் அதிகபட்சமாக ஜேசன் பேரன்டாப் 3 விக்கெட்டுகளை எடுத்தார். இருப்பினும் டு பிளேஸிஸ் – மேக்ஸ்வெல் அதிரடியால் முதல் 12.2 ஓவரில் 136/2 ரன்களை எடுத்த பெங்களூரு 220 ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் அவுட்டானதும் லோயர் மிடில் ஆர்டரில் தினேஷ் கார்த்திக் தவிர இதர வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறினார்.

இதையும் படிங்க: MI vs RCB : எதிரணிக்கு இம்பேக்ட் வீரராக ஜாலம் செய்த கேதார் ஜாதவ், டு பிளேஸிஸ் – மேக்ஸ்வெல் ஆட்டதுக்கு ஏற்படுத்திய பங்கம்

குறிப்பாக இம்பேக்ட் வீரராக களமிறங்கிய கேதர் ஜாதவ் வெறும் 1 பவுண்டரியுடன் 12* (10) ரன்கள் மட்டுமே எடுத்து பெங்களூருவுக்கு அல்லாமல் மும்பைக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது அந்த அணி ரசிகர்களை கடுப்பாக வைத்துள்ளது. ஏற்கனவே 2020 சீசனில் சென்னை அணிக்காக ஃபீல்டர்களை எண்ணி அடிப்பது போல் ஜாலம் செய்து தோல்விகளுக்கு முக்கிய பங்காற்றிய அவரை வாங்கியதற்கு இது உங்களுக்கு தேவை தான் என்று பெங்களூருவை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

Advertisement