IPL 2023 : ஐ.பி.எல் வரலாற்றில் விராட் கோலி மற்றும் டேவிட் வார்னர் ஆகியோரை தொடர்ந்து – ஷிகர் தவான் படைத்த சாதனை

Dhawan
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 53-வது லீக் போட்டியானது கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது போட்டியின் கடைசி பந்தில் ரிங்கு சிங்கின் அசத்தலான பவுண்டரி காரணமாக ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி அசத்தியது.

Dhawan 2

என்னதான் இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வியை சந்தித்து இருந்தாலும் அந்த அணியின் கேப்டனாக விளையாடிய ஷிகர் தவான் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி மற்றும் டேவிட் கார்னர் ஆகிய இருவர் மட்டுமே படைத்திருந்த சாதனை ஒன்றினில் இணைந்து மூன்றாவது நபராக தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

- Advertisement -

அதன்படி கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற இந்த போட்டியில் 47 பந்துகளை சந்தித்த ஷிகர் தவான் 9 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 57 ரன்கள் குவித்து அசத்தினார். இந்த அரைசதம் அடித்ததன் மூலம் ஷிகர் தவான் ஐ.பி.எல் தொடர்களில் தனது 50 ஆவது அரைசதத்தை பதிவு செய்தார்.

Dhawan 1

இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 50 அரை சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி மற்றும் டேவிட் வார்னர் ஆகியோருக்கு அடித்து 50 அரைசதங்களை அடித்த மூன்றாவது வீரராக தனது பெயரை இணைத்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இடம் கிடைக்காதது குறித்து பேசிய – விரிதிமான் சாஹா (விவரம் இதோ)

ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை அதிக அரைசதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் டேவிட் வார்னர் 57 அரைசதங்கள் அடித்து முதலிடத்திலும், விராட் கோலி மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் 50 அரைசதங்களுடன் இரண்டாவது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement