டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இடம் கிடைக்காதது குறித்து பேசிய – விரிதிமான் சாஹா (விவரம் இதோ)

Saha
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ரசிகர்கள் மத்தியில் டெஸ்ட் போட்டிகளுக்கான வரவேற்பை மீட்டெடுக்க உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நடத்தி வருகிறது. அதன்படி ஏற்கனவே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக தோல்வியடைந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது.

IND vs AUS

- Advertisement -

அதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. இந்த தொடரின் இறுதிப்போட்டியானது வரும் ஜூன் 7-ம் தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த இறுதிப் போட்டிக்கான இந்திய அணி அண்மையில் பிசிசிஐ மூலம் அறிவிக்கப்பட்டது.

அந்த அணியில் இடம்பெற்றிருந்த கே.எல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஜெய்தேவ் உனட்கட் ஆகியோர் காயம் காரணமாக விளையாட முடியாத வேளையில் அவர்களுக்கு பதிலாக எந்தெந்த வீரர்கள் மாற்று வீரராக அறிவிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதிலும் குறிப்பாக கே.எல் ராகுலுக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஐபிஎல் தொடரில் தற்போது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சாஹாவிற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

saha

ஆனால் கே எல் ராகுலுக்கு பதிலாக இசான் கிஷனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதேபோன்று ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக சென்னை அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரஹானேவிற்கு மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் கொடுக்கப்பட்டது. மேலும் ஸ்டான்ட் பை வீரர்களாக சூரியகுமார் யாதவ், முகேஷ் குமார் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய விரிதிமான் சாஹாவிற்கு டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரின் இறுதி போட்டியில் வாய்ப்பு கிடைக்காதது ரசிகர்கள் மத்தியிலும் வருத்தம் அளிக்கும் விடயமாக மாறியுள்ளது. ஆனால் தனக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காதது குறித்து பேசிய விரிதிமான் சாஹா கூறுகையில் : நான் இப்போது ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடி வருகிறேன்.

இதையும் படிங்க : KKR vs PBKS : ஈடன் கார்டனில் ரசிகர்கள் இவரை கொண்டாடுறாங்க. இளம்வீரருக்கு ஆதரவாக – நிதீஷ் ராணா பாராட்டு

எனவே இந்த தொடரில் மட்டும் தான் கவனம் செலுத்தி வருகிறேன். மற்ற விடயங்களை பற்றி பெரிதாக யோசிப்பது கிடையாது. குறிப்பாக என் கையில் இல்லாத விஷயங்களை நினைத்து நான் எப்போதுமே வருத்தப்பட மாட்டேன் அது என் பழக்கமும் இல்லை. தற்போது இருக்கும் வேலையை சரியாக செய்வதில் மட்டும் கவனத்தை செலுத்தி வருகிறேன் என விரிதிமான் சாஹா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement