KKR vs PBKS : ஈடன் கார்டனில் ரசிகர்கள் இவரை கொண்டாடுறாங்க. இளம்வீரருக்கு ஆதரவாக – நிதீஷ் ராணா பாராட்டு

Rana-Rinku
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 53-வது லீக் போட்டியானது கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் நிதீஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

KKR vs PBKS

- Advertisement -

அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணி சார்பாக கேப்டன் ஷிகர் தவான் 57 ரன்களையும், ஜித்தேஷ் ஷர்மா மற்றும் ஷாருக்கான் ஆகியோர் தலா 21 ரன்களையும் குவித்து அசத்தினர்.

பின்னர் 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணியானது சரியாக 20 ஓவர்களின் முடிவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி சார்பாக நிதீஷ் ராணா 51 ரன்களையும், அதிரடி ஆட்டக்காரர் ரசல் 42 ரன்களையும், ரிங்கு சிங் 21 ரன்களையும் குவித்து அசத்தினர்.

Rinku Singh

அதிலும் குறிப்பாக இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக ஆண்ட்ரே ரசலுடன் இணைந்து விளையாடிய ரிங்கு சிங் அனைவராலும் பாராட்டப்பட்டார். ஏனெனில் 10 பந்துகளை சந்தித்த அவர் இரண்டு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 21 ரன்கள் குவித்து இறுதிவரை களத்தில் இருந்து அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

- Advertisement -

இந்நிலையில் போட்டி முடிந்து ரிங்கு சிங்கின் அபாரமான ஆட்டம் குறித்து பாராட்டுக்களை தெரிவித்த நிதீஷ் ராணா கொல்கத்தா மைதானத்தில் அவருக்கு கிடைக்கும் வரவேற்பு குறித்தும் பேசியிருந்தார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : நான் எப்போதுமே ரிங்கு சிங்கிடம் சொல்லிக் கொண்டே இருப்பேன். நிச்சயம் உன்னை நீ நம்பு ஏனெனில் நிறைய வீரர்களிடம் இல்லாத ஒரு திறமை உன்னிடம் உள்ளது என்று கூறுவேன்.

இதையும் படிங்க : IPL 2023 : சந்தீப் சர்மாவை தண்டிச்சுட்டீங்க ஆனா பவுலருக்கு நீதி கிடைக்கல – முன்னாள் வீரர் வேதனை, நடந்தது என்ன

அதோடு தற்போது ஈடன் கார்டன் மைதானத்தில் ரிங்கு சிங் பேட்டிங் செய்யும்போது ரசிகர்கள் அனைவரும் “ரிங்கு, ரிங்கு” என்று கோஷமிடுகின்றனர். அந்த ஒரு மரியாதையை தற்போது ரிங்கு சிங் ரசிகர்களிடம் இருந்து பெற்றுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே நான் கொல்கத்தா அணியில் இருந்து வருகிறேன் அப்போதெல்லாம் மக்கள் “ரசல், ரசல்” என்று கத்துவார்கள். ஆனால் தற்போது “ரிங்கு, ரிங்கு” என்று மக்கள் கத்துவதை கேட்பதற்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருப்பதாக நிதீஷ் ராணா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement