IPL 2023 : சந்தீப் சர்மாவை தண்டிச்சுட்டீங்க ஆனா பவுலருக்கு நீதி கிடைக்கல – முன்னாள் வீரர் வேதனை, நடந்தது என்ன

- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 2008க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் இதுவரை பங்கேற்ற 11 போட்டிகளில் 5 வெற்றிகளையும் 6 தோல்விகளின் பதிவு செய்து புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. குறிப்பாக ஹைதராபாத்துக்கு எதிராக நடைபெற்ற கடைசி போட்டியில் கையிலிருந்த வெற்றியை கடைசி பந்தில் நழுவ விட்டு அந்த அணி ஏமாற்றத்தை சந்தித்தது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ஜோஸ் பட்லர் 95, சஞ்சு சாம்சன் 66* என முக்கிய வீரர்களின் அதிரடியால் 20 ஓவர்களில் 214/2 ரன்கள் சேர்த்தது.

அதை துரத்திய ஹைதராபாத்துக்கு அபிஷேக் சர்மா 55, ராகுல் திரிபாதி 47, ஹென்றிச் க்ளாஸென் 26 என முக்கிய வீரர்கள் அதிரடியாக ரன்களை எடுத்து வெற்றி பாதைக்கு அழைத்து வந்த போதிலும் கேப்டன் ஐடன் மார்க்ரம் 5 (6) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார். இருப்பினும் கடைசி நேரத்தில் களமிறங்கிய கிளன் பிலிப்ஸ் 19வது ஓவரில் குல்தீப் யாதவை 6, 6, 6, 4 என அடுத்தடுத்த பவுண்டரிகளாக பறக்க விட்டு 25 (7) ரன்கள் குவித்து திருப்பு முனையை ஏற்படுத்தி ஆட்டமிழந்தார்.

- Advertisement -

பவுலர்களுக்கு அநீதி:
அதனால் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட போது அதிரடியாக போராடிய அப்துல் சமத்தை கடைசி பந்தில் சந்திப் சர்மா அவுட்டாக்கினார். இருப்பினும் அது நோ பாலாக மாறியதால் ஃப்ரீ ஹிட்டில் சிக்சர் அடித்த அப்துல் சமத் வெற்றி பெற வைத்ததால் சந்திப் சர்மா மற்றும் ராஜஸ்தானின் இதயம் நொறுங்கியது. குறிப்பாக சென்னைக்கு எதிராக மகத்தான தோனியை கடைசி பந்தில் சிக்சர் அடிக்க விடாத அளவுக்கு இந்த சீசனில் அசத்திய சந்திப் சர்மா துரதிஷ்டவசமாக அப்போட்டியில் நோ-பால் வீசியது ராஜஸ்தானின் வெற்றியை பறித்தது.

இந்நிலையில் வெள்ளைக்கோட்டை ஒரு இன்ச் தாண்டியதற்காக சந்திப் சர்மா தண்டிக்கப்பட்டதை ஏற்றுக் கொள்வதாக தெரிவிக்கும் முன்னாள் வீரர் முரளி கார்த்திக் அதே நேரத்தில் எதிர்புறமிருந்த ஹைதராபாத் பேட்ஸ்மேன் மார்கோ யான்சென் பந்தை வீசுவதற்கு முன்பாகவே 2 அடிகள் வரை ரன்கள் எடுக்க வெளியே சென்றதற்கான தண்டனையை யார் கொடுப்பார் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். பேட்ஸ்மேன்கள் பந்தை வீசுவதற்கு முன்பாகவே வெளியேறுவது விதிமுறைக்கு உட்பட்டதல்ல என்பதால் ரவிச்சந்திரன் அஸ்வின் போராட்டத்திற்கு பின் பவுலர்கள் எதிர்புறம் ரன் அவுட் செய்வதை எம்சிசி அதிகாரப்பூர்வமாக மாற்றியது.

- Advertisement -

இருப்பினும் அவ்வாறு செய்தால் நேர்மைக்கு புறம்பாக வெற்றி கண்டதாக விமர்சனங்கள் வருவதால் இப்போதும் சில பவுலர்கள் அதை தைரியமாக செயல்படுவதற்கு பயப்படுகிறார்கள். அந்த நிலையில் இந்த போட்டியில் அதை சந்திப் சர்மா கவனிக்கவில்லை என்றாலும் பேட்ஸ்மேன் நியாயமின்றி வெளியேறியதை 3வது நடுவர் பார்த்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என முரளி கார்த்திக் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

எனவே பவுலர்களுக்கு ஃபிரீ ஹிட் போலவே பேட்ஸ்மேன்களுக்கும் அது போன்ற தருணத்தில் பெனால்டி போன்ற ஏதாவது தண்டனை வழங்கினால் தான் இதை நிறுத்த முடியும் என்று கூறும் அவர் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “ஆம் பந்து வீச்சாளர் லைனை மீறக் கூடாது. அதற்காகத்தான் அவர் அபராதத்தை பெற்றார். ஆனால் அந்த முக்கிய தருணங்களில் எதிர்ப்புறம் இருக்கும் பேட்ஸ்மேன் அழுத்தத்தால் தொடர்ந்து வெளியேறுகிறாரா அல்லது வேண்டுமென்றே வெளியேறுகிறாரா. இதற்கு ஒரு தடை, பெனால்டி அல்லது டாட் பால் போன்ற ஏதாவது தண்டனை இல்லாமல் போனால் இப்படியே தொடரும்”

இதையும் படிங்க:KKR vs PBKS : நான் அதைப்பத்தி யோசிக்குறதே கிடையாது. கடைசி பந்தில் வெற்றி பெற்றது குறித்து – ரிங்கு சிங் பேட்டி

“ஏனெனில் இது நியாயமற்றதாகும். கிரிக்கெட்டின் வடிவத்தை பொறுத்து பவுலர்கள் அவ்வாறு செய்வதை (மன்கட்) நிறுத்தினால் அவர்களுக்கு எவ்வளவு தடுமாற்றம் ஏற்படும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். அதனால் தான் சிகிச்சையை விட தடுப்பு மருந்து சிறந்தது. அத்துடன் அந்த சமயத்தில் ரன் அவுட் செய்ய வேண்டியது தானே என சிலர் சொல்லலாம். ஆனால் வேகமாக ஓடிவரும் வேகப்பந்து வீச்சாளர் தந்தை ரிலீஸ் செய்யும் கடைசி நொடியில் திடீரென நின்று அதை செய்வது கடினமாகும்.என்று கூறியுள்ளார்.

Advertisement