IPL 2023 : இப்போ கலாய்க்குறோம் அடுத்த மேட்ச்ல அடிச்சு காட்டுங்க பாப்போம் – இளம் வீரரை கலாய்க்கும் ரசிகர்கள், நடந்தது என்ன

Harry Brook SRH
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 24ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 34வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த டெல்லி தங்களுடைய 2வது வெற்றியை பதிவு செய்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி 20 ஓவர்களில் போராடி 144/9 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதிகபட்சமாக மணிஷ் பாண்டே மற்றும் அக்சர் படேல் ஆகியோர் தலா 34 ரன்கள் எடுத்த நிலையில் பந்து வீச்சில் அசத்திய ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளும் புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

அதை தொடர்ந்து 145 ரன்களை துரத்தியாக ஹைதராபாத் அணிக்கு மயங் அகர்வால் 7 பவுண்டரியுடன் 49 (39) ரன்கள் எடுத்த போதிலும் ஹரி ப்ரூக் 7, ராகுல் திரிபாதி 5, கேப்டன் ஐடன் மார்க்ரம் 3 என முக்கிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர். அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் கடைசி நேரத்தில் ஹென்றிச் க்ளாஸென் 31 (19) வாஷிங்டன் சுந்தர் 24* (15) ரன்கள் எடுத்த போதிலும் 20 ஓவர்களில் 137/6 ரன்கள் மட்டுமே எடுத்த ஹைதராபாத் பரிதாபமாக தோற்றது.

- Advertisement -

அடிச்சு காட்டுங்க:
முன்னதாக இந்த போட்டியில் வெறும் 145 ரன்களை துரத்தும் போது பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி எளிதாக அதிரடியான தொடக்கத்தை கொடுக்க வேண்டிய இளம் இங்கிலாந்து ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஹரி ப்ரூக் 14 பந்துகளில் வெறும் 7 ரன்களை 50.00 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து ஆன்றிச் நோர்ட்ஜெவின் அதிரடியான வேகத்தில் கிளீன் போல்ட்டானார். கடந்த 2022 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் இங்கிலாந்துக்காக அறிமுகமான அவர் கடந்த வருடம் பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் அதிரடியாக விளையாடி வெற்றிகளில் முக்கிய பங்காற்றினார்.

அப்படி டெஸ்ட் மற்றும் டி20 என வெவ்வேறு வகையான கிரிக்கெட்டில் தொடர்ந்து பெரிய ரன்களை குவித்ததால் இந்தியாவின் விராட் கோலியை போல் வருவார் என்று பென் ஸ்டோக்ஸ் ஆரம்பத்திலேயே அவரை அனைவரும் திரும்பி பார்க்கும் வகையில் ஒப்பிட்டு பாராட்டினார். அதனால் 13.25 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட அவர் பிப்ரவரியில் நடைபெற்ற 2023 பிஎஸ்எல் தொடரிலும் அதிரடியாக செயல்பட்டு அசத்தியதால் ஐபிஎல் தொடரிலும் மிரட்டலாக செயல்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

- Advertisement -

ஆனால் 13 (21), 3 (4), 13 (14) என முதல் 3 போட்டிகளிலும் 100க்கும் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் சொற்ப ரன்களில் அவுட்டானதால் ஏமாற்றமடைந்த இந்திய ரசிகர்கள் ஆரம்பத்திலேயே ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடுவதற்கு இது ஒன்றும் பாகிஸ்தானில் இருக்கும் தார் ரோட் போன்ற பிட்ச்களை கொண்டு நாடு கிடையாது என்று சமூகவலைதளங்களில் விமர்சித்து கலாய்த்தனர். ஏனெனில் அந்த 3 போட்டிகளிலும் உண்மையாகவே அவர் தரமான சுழல் மற்றும் வேகத்திற்கு பதில் சொல்ல முடியாமல் திண்டாட்டமாக செயல்பட்டார்.

மேலும் பொதுவாகவே காரணமில்லாமல் விமர்சிக்கும் பழக்கத்தை கொண்டிராத இந்திய ரசிகர்கள் ஒவ்வொரு போட்டியிலும் சொதப்பும் வீரர்களின் தவறுகளை சுட்டி காட்டி கலாய்ப்பது வழக்கமாகும். அந்த நிலையில் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பேட்டிங்க்கு சாதகமான பிட்ச்சில் 55 பந்தில் 100* ரன்கள் விளாசி ஹைதராபாத்தை வெற்றி பெற வைத்த அவர் போட்டியின் முடிவில் இந்திய ரசிகர்களின் கிண்டல்களுக்கு பதிலடி கொடுத்துள்ளதாக வெளிப்படையாகவே பேசினார்.

- Advertisement -

பொதுவாகவே கேப்டனாகவும் ஜாம்பவானாகவும் இருக்கும் ரோஹித் சர்மாவை கூட சுமாராக செயல்பட்டால் விட்டு வைக்காமல் இந்திய ரசிகர்கள் விமர்சிப்பது வழக்கமாகும். அப்படி முன்னேறுவதற்காக கிண்டலடித்து விமர்சிக்கும் கருத்துக்களை விராட் கோலி போன்றவர்கள் கூட உத்வேகமாக எடுத்துக்கொண்டு வருகிறார்கள்.

இதையும் படிங்க:சி.எஸ்.கே அணியில் சேர்ந்த அதிர்ஷ்டம். கைமேல அடித்த ஜாக்பாட் – ரஹானேவே இதை எதிர்பார்த்து இருக்கமாட்டாரு

அந்த நிலையில் ஒரு போட்டியில் அடித்து விட்டு வாயில் பதிலடி கொடுத்த அவர் அதன் பின் நடைபெற்ற 3 போட்டிகளில் 9 (7), 18 (13), 7 (14) என மீண்டும் சொரப்பா ரன்களில் அவுட்டாகி சொதப்பி வருகிறார். அதனால் அதிருப்தியடைந்துள்ள இந்திய ரசிகர்கள் இப்போதும் கலாய்க்கும் இதற்கு பதிலடியாக அடுத்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டு புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் திண்டாடும் ஹைதராபாத்தை மேலே கொண்டுவர முயற்சி செய்யுங்கள் என்று அவருக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

Advertisement