சி.எஸ்.கே அணியில் சேர்ந்த அதிர்ஷ்டம். கைமேல அடித்த ஜாக்பாட் – ரஹானேவே இதை எதிர்பார்த்து இருக்கமாட்டாரு

Ajinkya Rahane WTC Final
- Advertisement -

வரலாற்றின் 2வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி வரும் ஜூன் 7 – 11 வரை இங்கிலாந்தில் இருக்கும் புகழ் பெற்ற லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. அப்போட்டியில் லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகள் கோப்பைக்காக பலப்பரீபரிட்சை நடத்த உள்ளன. அதில் பங்கேற்கும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் பேட்டிங் துறையில் விராட் கோலி, சுப்மன் கில், புஜாரா ஆகியோருடன் நட்சத்திர இந்திய சீனியர் வீரர் அஜிங்க்ய ரகானே யாருமே எதிர்பாராத வகையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2011ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 3 வகையான இந்திய அணியிலும் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் 2015 உலக கோப்பையில் முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளையாடிய போதிலும் நாளடைவில் மெதுவாக செயல்பட்டதால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் கழற்றி விடப்பட்டு டெஸ்ட் அணியில் மட்டும் துணை கேப்டனாக விளையாடி வந்தார்.

- Advertisement -

சென்னையின் அதிர்ஷ்டம்:
குறிப்பாக 36க்கு ஆல் அவுட்டாகி மோசமான வரலாற்று தோல்வியை சந்தித்து தடுமாறிய போது நாடு திரும்பிய விராட் கோலியின் இடத்தில் கேப்டனாக பொறுப்பேற்று மெல்போர்னில் நடைபெற்ற 2வது போட்டியில் சதமடித்து வெற்றி பெற வைத்த அவர் எஞ்சிய போட்டிகளிலும் இளம் வீரர்களை வைத்து அபாரமாக கேப்டன்ஷிப் செய்து 2 – 1 (4) என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் மண்ணை கவ்வ வைத்து 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார்.

ஆனால் அத்தொடருக்கு பின் சதமடிக்காமல் தவித்த அவரை கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இலங்கை தொடரில் புஜாராவுடன் சேர்த்து தேர்வுக்குழு கழற்றி விட்டது. அதில் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் அசத்திய புஜாரா உடனடியாக கம்பேக் கொடுத்தார். ஆனால் அடுத்த தலைமுறையை உருவாக்குவதற்காக இஷாந்த் சர்மா, சஹா போன்ற சீனியர்களை கழற்றி விட்ட தேர்வுக்குழு உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் தடுமாறிய ரஹானே 34 வயதை தொட்டதால் கழற்றி விட்டதாகவே பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனாலும் மனம் தளராமல் போராடிய அவர் சமீபத்திய ரஞ்சி கோப்பையில் இரட்டை சதமடித்து ஃபார்முக்கு திரும்பிய நிலையில் வெறும் 50 லட்சத்துக்கு தன்னை வாங்கிய சென்னை அணிக்காக நடைபெற்று வரும் 2023 ஐபிஎல் தொடரில் சரவெடியாக விளையாடிய அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். குறிப்பாக பிறந்து வளர்ந்த மும்பைக்கு எதிரான முதல் போட்டியிலேயே 19 பந்துகளில் அதிவேகமாக அரை சதமடித்த சென்னை வீரராக சாதனை படைத்த அவர் நேற்று முன்தினம் கொல்கத்தாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 71* (29) ரன்களை விளாசி 7 வருடங்கள் கழித்து ஆட்டநாயகன் விருது வென்று முழுமையான ஃபார்முக்கு திரும்பினார்.

அதிலும் குறிப்பாக பொதுவாகவே கிளாஸ் பேட்டிங் வெளிப்படுத்தக்கூடிய அவர் விக்கெட் கீப்பருக்கு பின் திசைகளில் வித்தியாசமாக அடித்தது யாருமே எதிர்பாராத ஒன்றாக அமைந்தது. அதனால் காயமடைந்த ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக ரகானே டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் விளையாட வேண்டுமென கடந்த சில தினங்களாகவே ரசிகர்கள் கோரிக்கை தற்போது பலித்துள்ளது என்றே சொல்லலாம். அதை விட இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் எப்போதுமே சிறப்பாக செயல்பட்டுள்ள ரகானே நல்ல ஃபார்மில் இல்லாத ஒரே காரணத்தால் மட்டுமே கழற்றி விடப்பட்டார்.

- Advertisement -

அந்த நிலையில் ரஞ்சி கோப்பையில் இரட்டை சதமடித்து ஃபார்முக்கு திரும்பியும் அவரை கண்டுகொள்ளாத தேர்வுக்குழு ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் அதிரடியாக விளையாடிய பின்பு தான் தேர்வு செய்துள்ளது. அந்த வகையில் சென்னை அணியில் விளையாடிய அதிர்ஷ்டம் மீண்டும் இந்திய அணியில் ரகானேவுக்கு இடத்தை பெற்றுக் கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். சொல்லப்போனால் குஜராத்துக்கு எதிரான சென்னையின் முதல் போட்டியில் வாய்ப்பு பெறாத ரகானே கூட இதை எதிர்பார்த்திருக்க மாட்டார்.

இதையும் படிங்க:WTC Final : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான இந்திய அணி அறிவிப்பு – மொத்த வீரர்களின் லிஸ்ட் இதோ

ஏனெனில் மொய்ன் அலி காயமடைந்ததால் அதிர்ஷ்டவசமாக கிடைத்த வாய்ப்பில் திறமையை வெளிப்படுத்திய அவருக்கு இந்திய அணியில் விளையாடும் ஜாக்பாட் வாய்ப்பு பரிசாக கிடைத்துள்ளது. மேலும் தொடர்ச்சியாக விளையாடும் வாய்ப்பையும் சுதந்திரத்தையும் தோனி மற்றும் சென்னை நிர்வாகம் கொடுத்ததே தம்முடைய அதிரடிக்கு காரணமென ரகானேவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement