WTC Final : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான இந்திய அணி அறிவிப்பு – மொத்த வீரர்களின் லிஸ்ட் இதோ

IND vs AUS
- Advertisement -

உலக டெஸ்ட் கிரிக்கெட்டின் 2வது சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி வரும் ஜூன் 7 – 11 வரை இங்கிலாந்தின் லண்டனில் இருக்கும் புகழ்பெற்ற ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. அதற்காக கடந்த 2021 முதல் நடைபெற்று வந்த லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடித்து ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய அணிகள் இந்த பைனலில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன. அதிலும் குறிப்பாக வரலாற்றின் முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலக கோப்பையின் லீக் சுற்றில் விராட் கோலி தலைமையில் சக்கை போடு போட்டு ஆஸ்திரேலியாவில் சரித்திர வெற்றி பெற்ற இந்தியா ஃபைனலில் நியூசிலாந்திடம் தோற்றது.

அதனால் கடந்த முறை விட்ட கோப்பையை இம்முறை ரோகித் சர்மா தலைமையில் எப்படியாவது வெல்லும் முனைப்புடன் இந்தியா களமிறங்க உள்ளது. அந்த வகையில் ஐசிசி தரவரிசையில் டாப் 2 இடங்களில் இருக்கும் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா மோதும் இந்த மாபெரும் ஃபைனலுக்கு அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அந்த போட்டிக்கு இன்னும் ஒன்றரை மாதம் மட்டுமே இருக்கும் நிலையில் முதல் ஆளாக பட் கமின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா தங்களுடைய அணியை கடந்த வாரமே அறிவித்திருந்தது.

- Advertisement -

இந்திய அணி அறிவிப்பு:
அந்த நிலையில் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையில் பங்கேற்கும் ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழு இன்று வெளியிட்டுள்ளது. பொதுவாகவே இங்கிலாந்து மண்ணில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும் என்பதால் அதை சமாளிக்க எக்ஸ்ட்ரா வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் தேவை என்ற நிலையில் கடந்த முறை ஓவல் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றி காண்பதற்கு முக்கிய பங்காற்றிய ஷார்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதே போல் பும்ரா இல்லாத நிலைமையில் ஷமி, உமேஷ் யாதவ், சிராஜ் ஆகியோருடன் இடது கை வேகப்பந்து வீச்சாளர் குறையை தீர்ப்பதற்காக சமீபத்தில் 12 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்த அனுபவ வீரர் ஜெயதேவ் உனட்கட் இந்திய அணியில் 4வது வேகப்பந்து வீச்சாளராக இணைக்கப்பட்டுள்ளார். அத்துடன் ரிஷப் பண்ட் இல்லாத நிலைமையில் கேஎல் ராகுல் மற்றும் கேஎஸ் பரத் ஆகியோர் விக்கெட் கீப்பர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சமீபத்திய பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய ரவிச்சந்திரன், அஸ்வின் ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோரும் சுழல் பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -

பேட்டிங் துறையில் கேப்டன் ரோகித் சர்மா – சுப்மன் கில் ஆகியோருடன் விராட் கோலி, புஜாரா ஆகிய சீனியர் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரையும் தாண்டி கடந்த பிப்ரவரி மாதம் கழற்றி விடப்பட்ட அஜிங்க்ய ரகானே காயமடைந்த ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாகக சமீபத்திய ரஞ்சி கோப்பையில் இரட்டை சதமடித்து ஃபார்முக்கு திரும்பியதால் ஒரு வருடம் கழித்து மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கான இந்திய அணி வீரர்கள் விவரம் இதோ:

1. பேட்ஸ்மேன்கள்: ரோகித் சர்மா (கேப்டன்) விராட் கோலி, செட்டேஸ்வர் புஜாரா, அஜிங்க்ய ரகானே, சுப்மன் கில்
2. ஆல் ரவுண்டர்கள்: ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா, சர்துல் தாக்கூர்
3. விக்கெட் கீப்பர்கள் : கேஎஸ் பரத், கேஎல் ராகுல்
4. பந்து வீச்சளார்கள் : முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனட்கட்

இதையும் படிங்க: இந்த தப்பை மாத்திக்கலானா நாம் அவ்ளோதான். தோல்விக்கு பிறகு பேட்ஸ்மேன்களை வெளுத்து வாங்கிய – எய்டன் மார்க்ரம்

இதை தொடர்ந்து தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் இந்திய வீரர்களில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாத அணிகளில் இடம் பிடிக்கும் வீரர்கள் முன்கூட்டியே இங்கிலாந்துக்கு பயணிக்க உள்ளனர். இது போக ஐபிஎல் தொடரில் விளையாடாத புஜாரா ஏற்கனவே இங்கிலாந்தில் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் இந்த ஃபைனலில் கோப்பையை வெல்வதற்கான பயிற்சியாக விளையாடி தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement