IND vs WI : இந்த தனித்துவம் போதுமா? இந்தியாவை தலைகுனிய வைத்த கேப்டனாக பாண்டியா மோசமான சாதனை – வெளுக்கும் ரசிகர்கள்

Hardik Pandya
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து பின்னடைவுக்குள்ளான இந்தியா அதற்கடுத்த 2 போட்டிகளில் போராடி வென்று தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்தது. ஆனாலும் ஆகஸ்ட் 13ஆம் தேதி அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் நடைபெற்ற கடைசி போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் டி20 கிரிக்கெட்டில் நாங்கள் இன்னும் வீழ்ந்து விடவில்லை என்பதை நிரூபித்து 3 – 2 (5) என்ற கணக்கில் கோப்பையை வென்று இந்த சுற்றுப்பயணத்தில் சந்தித்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர் தோல்விகளுக்கு பழி தீர்த்தது.

அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு மீண்டும் சூரியகுமார் 61 ரன்கள் திலக் வர்மா 27 ரன்கள் எடுத்ததை தவிர்த்து எஞ்சிய பேட்ஸ்மேன்கள் ஏமாற்றத்தை கொடுத்ததால் 20 ஓவர்களில் 165/9 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ரொமாரியா செபாஃர்ட் 4 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 166 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீஸை நிக்கோலஸ் பூரான் 47, பிரண்டன் கிங் 85*, சாய் ஹோப் 22* என முக்கிய பேட்ஸ்மேன்களை அதிரடியான ரன்களை குவித்து 18 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

தனித்துவம் போதுமா:
இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தற்சமயத்தில் உலகின் நம்பர் ஒன் அணியாக திகழும் இந்தியா பலவீனமான அணியாக கருதப்படும் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 2016க்குப்பின் 7 வருடங்கள் கழித்து முதல் முறையாக ஒரு டி20 தொடரில் தோல்வியை சந்தித்துள்ளது. அதை விட 2006 முதல் டி20 கிரிக்கெட்டில் விளையாடி வரும் இந்தியா முதல் முறையாக ஒரு குறிப்பிட்ட தொடரில் 3 தோல்விகளையும் ஒரு 5 போட்டிகள் கொண்ட தொடரில் தோல்வியும் சந்தித்து தலை குனிந்துள்ளது.

இந்நிலையில் இந்த தோல்விகளுக்கு சுமாரான பேட்டிங், பவுலிங் என்பதை தாண்டி கேப்டன் பாண்டியாவின் சுமாரான கேப்டன்ஷிப் மற்றும் அதிமேதேவியான அணுகுமுறையே முக்கிய காரணமாக அமைந்ததாக ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கொந்தளித்து வருகிறார்கள். அதாவது நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரில் 2 போட்டிகளின் முடிவில் 1 – 1 என்ற கணக்கில் இருந்த போது 2006க்குப்பின் முதல் முறையாக எங்களுக்கு எதிராக ஒரு தொடரில் தோல்வியை சந்திப்பதை தவிர்க்க என்ன செய்யப் போகிறீர்கள் என முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் சாமுவேல் பத்ரி கேட்டார்.

- Advertisement -

அதற்கு “தோற்றாலும் பரவாயில்லை. அது தனித்துவமாக இருக்கும்” என்று பாண்டியா கூலாக பதிலளித்தார். அதாவது ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த 17 வருடங்களாக தோனி, கோலி, ரோஹித் போன்ற கேப்டன்கள் தலைமையில் சந்திக்காத தோல்வியை தமது தலைமையில் இந்தியா சந்தித்தால் அது தனித்துவமாக இருக்கும் என்று பாண்டியா தெரிவித்தது ரசிகர்களை கடுப்பாக வைத்தது.

இருப்பினும் அந்தத் தொடரின் கடைசி போட்டியில் இந்தியா வென்றதால் தப்பிய அவரை தற்போது தோற்றதால் ரசிகர்கள் “தனித்துவமான தோல்வியை பெற்ற கேப்டன்” என வறுத்தெடுத்த வருகிறார்கள். மேலும் இந்த தொடரில் முதலிரண்டு போட்டிகளில் அக்ஸர் படேலை சரியாக பயன்படுத்தாது, சஹாலை 18வது ஓவரில் பயன்படுத்தாதது போன்ற கேப்டன்ஷிப் குளறுபடிகளை செய்த அவர் 3வது போட்டியில் வெற்றிக்கு போராடிய திலகர்மாவை 50 ரன்களை தொடவிடாமல் தமது பெயரில் ஃபினிஷிங் செய்து சுயநலமாக நடந்து கொண்டார்.

- Advertisement -

ஆனால் அந்த போட்டியை தவிர்த்து இத்தொடர் முழுவதும் பேட்டிங், பவுலிங் ஆகிய 2 துறைகளிலும் சொதப்பிய அவர் கேப்டனாகவும் சுமாராகவே செயல்பட்டார். அதை விட இந்த தோல்வியின் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 5 போட்டிகள் கொண்ட தொடரில் தோல்வியை பதிவு செய்த முதல் இந்திய கேப்டன் மாற்றும் ஒரு குறிப்பிட்ட டி20 தொடரில் 3 தோல்விகளை பதிவு செய்த முதல் இந்திய கேப்டன் ஆகிய 2 மோசமான சாதனைகளை ஹர்திக் பாண்டியா படைத்துள்ளார்.

இதையும் படிங்க:IND vs WI : முடிவுக்கு வந்த வெற்றி நடை – டி20 வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவுக்கு நேர்ந்த மோசமான தோல்வி – ரசிகர்கள் சோகம்

அதனால் இந்த தனித்துவம் போதுமா? என்று பாண்டியாவை கலாய்க்கும் இந்திய ரசிகர்கள் இவரா 2024 டி20 உலக கோப்பையில் இந்தியாவை வெற்றிகரமாக நடத்தப் போகிறார் என்று கவலையும் வெளிப்படுத்துகிறார்கள்.

Advertisement