அப்டின்னா முதலில் ரிஸ்வான், பாபர் அசாமை தான் வெளியே அனுப்பனும் – ஷாஹித் அப்ரிடி அறிவிப்பை கலாய்க்கும் ரசிகர்கள்

Babar Azam Mohammad Rizwan Shahid Afridi
- Advertisement -

2022 சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணிகளில் ஒன்றாக திகழும் பாகிஸ்தான் வரலாறு காணாத வீழ்ச்சியையும் தோல்விகளையும் சந்தித்தது. குறிப்பாக ஆசிய மற்றும் டி20 உலக கோப்பை பைனலில் தோற்ற அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் தோற்று 1 – 0 (3) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. அதை விட இங்கிலாந்திடம் சரமாரியாக அடி வாங்கி 3 – 0 (3) என்ற கணக்கில் வைட் வாஷ் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் வரலாற்றிலேயே சொந்த மண்ணில் முதல் முறையாக 4 தொடர்ச்சியான டெஸ்ட் போட்டிகளில் தோற்று உலக அளவில் விமர்சனத்திற்கு உள்ளானது.

அதனால் கடுப்பான அந்நாட்டு பிரதமர் வாயில் மட்டும் பேசிக் கொண்டிருந்த ரமீஷ் ராஜா தலைமையிலான பாகிஸ்தான் வாரியத்தை இரவோடு இரவாக நீக்கி விட்டு முன்னாள் தலைவர் நஜாம் சேதியை புதிய தலைவராக நியமித்தார். அத்துடன் தேர்வுக்குழு தலைவர் அதிரடியாக நீக்கப்பட்டு முன்னாள் ஜாம்பவான் வீரர் சாகித் அப்ரிடி புதிய தேர்வுக்குழு தலைவராக நியமனம் செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து சொந்த மண்ணில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணியை தேர்வு செய்த அவர் முன்னாள் கேப்டன் சஃர்பராஸ் அகமதை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்தார்.

- Advertisement -

ஸ்ட்ரைக் முக்கியம்:
அதில் 2 இன்னிங்ஸிலும் அரை சதமடித்த அவர் மிகச்சிறந்த கம்பேக் கொடுத்த போதிலும் இதர வீரர்களின் சொதப்பலால் கடைசி நாளில் போதிய வெளிச்சமின்மையால் தோல்வியிலிருந்து தப்பிய பாகிஸ்தான் முதல் போட்டியை டிரா செய்தது. இந்நிலையில் நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு அடுத்தபடியாக டி20 கிரிக்கெட்டில் முன்னேறுவதற்கான வேலைகளை தேர்வுக்குழு தலைவர் சாகித் அப்ரிடி துவங்கியுள்ளார்.

குறிப்பாக ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் தோல்வியில் சந்திப்பதற்கு அதிரடியாக விளையாட வேண்டிய டி20 கிரிக்கெட்டில் ஆமை வேகத்தில் நிறைய பேட்ஸ்மேன் விளையாடியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. பொதுவாகவே களத்தில் அதிரடியாக பேட்டிங் செய்யும் தன்மை கொண்ட அவர் டி20 கிரிக்கெட்டில் வெற்றி பெறுவதற்கு முதலில் அதிரடியை கொண்டு வர வேண்டும் என்று தீர்மானித்துள்ளார். அதற்காக உள்ளூர் கிரிக்கெட்டில் 130 – 135 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட்டிங் செய்யாத யாரும் பாகிஸ்தான் டி20 அணியில் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்று அவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

- Advertisement -

இப்போதெல்லாம் இங்கிலாந்து போன்ற அணிகள் டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே அடித்து நொறுக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்தும் நிலையில் குறைந்தபட்சம் டி20 கிரிக்கெட்டிலாவது தங்கள் அணி அதிரடியாக விளையாட வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். அந்த முடிவை பெரும்பாலான பாகிஸ்தான் ரசிகர்கள் வரவேற்கிறார்கள். அதே சமயம் இந்த அறிவிப்பால் முதலில் பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திர பேட்ஸ்மேன்கள் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோருக்கு டி20 அணியில் இடம் கிடைக்குமா? என்றும் ரசிகர்கள் கலாய்க்க துவங்கியுள்ளனர்.

ஏனெனில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோரை மிஞ்சி டான் ப்ராட்மேனையும் மிஞ்சிய உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடும் பாபர் அசாம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை 99 போட்டிகளில் குவித்துள்ள 3355 ரன்களை 127.80 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் தான் எடுத்துள்ளார். அதே போல் மற்றொரு நம்பிக்கை நட்சத்திரம் முகமது ரிஸ்வான் 80 போட்டிகளில் குவித்துள்ள 2635 ரன்களை 126.60 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார்.

- Advertisement -

குறிப்பாக ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இவர்கள் டாப் ஆடரில் அடித்து நொறுக்காமல் தடவலாக பேட்டிங் செய்து குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடியது தான் பாகிஸ்தானுக்கு தோல்வியை கொடுத்தது. எனவே நாட்டுக்காக விளையாட போராடி வரும் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களை இது போன்ற புதிய விதிமுறையால் கழற்றி விட வேண்டாம் என்று தெரிவிக்கும் ரசிகர்கள் ஏற்கனவே விளையாடி வரும் இந்த நட்சத்திர வீரர்களை அதே விதிமுறைக்குட்பட்டு கழற்றி விடுமாறு கலாய்க்கிறார்.

இதையும் படிங்கவீடியோ : நேரலை டெஸ்ட் போட்டியில் சிகரெட் லைட்டர் கேட்ட ஆஸ்திரேலிய வீரர், சிரித்த வர்ணனையாளர்கள் – காரணம் இதோ

அல்லது இந்த அறிவிப்பால் முகமது ரிஸ்வான், பாபர் அசாம் ஆகியோர் அவர்களாகவே டி20 ஓய்வு பெறுவதே சரியான முடிவாக இருக்கும் எனவும் ரசிகர்கள் கூறுகிறார்கள்.

Advertisement