வீடியோ : நேரலை டெஸ்ட் போட்டியில் சிகரெட் லைட்டர் கேட்ட ஆஸ்திரேலிய வீரர், சிரித்த வர்ணனையாளர்கள் – காரணம் இதோ

marnus labuschange
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இத்தொடரை இரு அணிகளுமே வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய நிலையில் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தத்து தொடரை இழந்த தென்னாப்பிரிக்கா டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 2வது இடத்திலிருந்து 5வது இடத்திற்கு சரிந்தது. அதனால் 4வது இடத்திலிருந்த இந்தியா வங்கதேச தொடரில் பெற்ற வெற்றியுடன் 2வது இடத்திற்கு முன்னேறி பைனல் செல்லும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.

அதனால் தென்னாப்பிரிக்காவின் பைனல் வாய்ப்பு கிட்டத்தட்ட பறிபோன நிலையில் இத்தொடரின் கடைசி சம்பிரதாய போட்டி ஜனவரி 3ஆம் தேதியன்று துவங்கியது. உலகப் புகழ்பெற்ற சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு கடந்த போட்டியில் இரட்டை சதமடித்து பார்முக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் டேவிட் வார்னர் 10 ரன்களில் ஆரம்பத்திலேயே நோர்ட்ஜேவிடம் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

லைட்டர் கொடுங்க:
இருப்பினும் அடுத்து வந்த உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்ஷேன் மற்றொரு தொடக்க வீரர் உஸ்மான் கவாஜாவுடன் இணைந்து நங்கூரத்தை போட்டு நிதான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். தொடர்ந்து பேட்டிங் செய்த அந்த ஜோடியில் இருவருமே அரை சதமடித்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆஸ்திரேலியாவை வழிப்படுத்திய போது மாலை நேரத்தில் மோசமான வானிலை மற்றும் மழையால் ஒரு மணி நேரமாக போட்டி தாமதமானது. அதைத் தொடர்ந்து கடைசி ஒரு மணி நேரத்தில் மீண்டும் துவங்கிய போட்டியில் 2வது விக்கெட்டுக்கு 135 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய மார்னஸ் லபுஸ்ஷேன் 13 பண்டரியுடன் 79 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அப்போது முதல் நாள் ஆட்டமும் முடிவுக்கு வந்த நிலையில் 147/2 ரன்களுடன் விளையாடி வரும் ஆஸ்திரேலியாவுக்கு களத்தில் உஸ்மான் கவாஜா 54* ரன்களுடன் உள்ளார். முன்னதாக இப்போட்டியில் விளையாடிய மார்னஸ் லபுஸ்ஷேன் ஒரு கட்டத்தில் தன்னுடைய ஹெல்மெட்டில் ஏதோ தொந்தரவு ஏற்படுவதாக உணர்ந்ததால் அதை கழற்றி சோதித்தார். அதில் அழுத்தத்தை தவிர்ப்பதற்காக ஓட்டப்பட்டிருந்த ஸ்பாஞ்ச் போன்ற அமைப்புகள் பிணைப்பை விட்டு நகர்ந்ததால் அந்த தொந்தரவு ஏற்பட்டதையும் அவர் அறிந்தார்.

- Advertisement -

அதை நெருப்பில் வாட்டினால் மீண்டும் ஒட்டிக்கொண்டு நல்ல பிணைப்பு ஏற்பட்டு ஹெல்மெட்டில் மேற்கொண்டு தொந்தரவு ஏற்படாது என்று கருதிய அவர் மைதானத்திலிருந்த வாக்கிலேயே பெவிலியினை நோக்கி தனது சக அணி வீரர்களிடம் லைட்டரை கொண்டு வரச் சொன்னார். முதலில் ஹெல்மெட்டை ஒட்ட வேண்டும் அதற்காக லைட்டரை கொண்டு வாருங்கள் என்ற வகையில் கையால் செய்கை செய்த அவருடைய எண்ணத்தை பெவிலியனில் இருந்த ஆஸ்திரேலிய அணியினர் புரிந்து கொள்ளவில்லை. அதனால் வேறு வழியின்றி தனது வாயில் சிகரெட் பிடிப்பது போல் கையை வைத்து அதைப் பற்ற வைப்பதற்காக லைட்டரை கொண்டு வாருங்கள் என்று அவர் வெளிப்படையாகவே சைகை செய்தார்.

அதை பார்த்து வர்ணனையாளர்கள் சிரித்த நிலையில் கேட்டது போலவே ஆஸ்திரேலியா அணியினர் கொண்டு வந்த லைட்டரை பயன்படுத்திய அவர் தன்னுடைய ஹெல்மெட்டை சரி செய்து தொடர்ந்து விளையாடினார். அதனால் சமூக வலைதளங்களில் கலகலப்பை ஏற்படுத்திய இந்த நிகழ்வு ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது. அந்த வகையில் தொடர்ந்து நடைபெறும் இந்த போட்டியில் வென்று 3 – 0 (3) என்ற கணக்கில் இத்தொடரை ஆஸ்திரேலியா வெல்லும் பட்சத்தில் தொடர்ந்து முதலிடம் பிடித்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை பிரகாசமாக்கும்.

இதையும் படிங்கஎல்லாரும் தோனியின் சிக்ஸரை மட்டும் தான் பேசுறாங்க, அவரை யாருமே கண்டுக்கல – 2011 உ.கோ பைனல் பற்றி கம்பீர் ஆதங்கம்

அது நடைபெறும் பட்சத்தில் வரும் பிப்ரவரி மாதம் இதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் 1 – 0 அல்லது 2 – 0 அல்லது 3 – 0 அல்லது ஏதோ ஒரு கணக்கில் வென்றாலே இந்தியாவும் பைனலுக்கு தகுதி பெறும் நிலைமையும் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement