எல்லாரும் தோனியின் சிக்ஸரை மட்டும் தான் பேசுறாங்க, அவரை யாருமே கண்டுக்கல – 2011 உ.கோ பைனல் பற்றி கம்பீர் ஆதங்கம்

Gambhir
- Advertisement -

2023 புத்தாண்டில் ஜூன் மாதம் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் இந்திய கிரிக்கெட் அணி செயல்பட உள்ளது. குறிப்பாக சொந்த மண்ணில் எப்போதுமே வலுவான அணியாக திகழும் இந்தியா கடைசியாக கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையை எம்எஸ் தோனி தலைமையில் வென்றது. அதன் பின் 2013ஆம் சாம்பியன்ஸ் டிராஃபியையும் அவரது தலைமையில் வென்ற இந்தியா அதன் பின் கடந்த 10 வருடங்களாக எந்த ஐசிசி கோப்பையையும் வெல்ல முடியாமல் திண்டாடி வருகிறது.

Gambhir

- Advertisement -

முன்னதாக 2011 உலக கோப்பையை எப்போதுமே இந்திய ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்று எனக் கூறலாம். ஏனெனில் முதல் போட்டியிலேயே வங்கதேசத்தை வீரேந்திர சேவாக் மற்றும் விராட் கோலியின் அதிரடியுடன் சிதைத்த இந்தியா இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சச்சின் டெண்டுல்கரின் சதங்களுடன் நாக் அவுட் சுற்றில் யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோரது அபாரமான பங்குடன் பைனலுக்கு முன்னேறியது.

கம்பீரின் ஆதங்கம்:
அதை தொடர்ந்து மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் பைனலில் இலங்கை நிர்ணயித்த 275 ரன்களை துரத்தும் போது சச்சின், சேவாக் உள்ளிட்ட முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து ஆரம்பத்திலேயே இந்தியா தடுமாறியது. இருப்பினும் 3வது இடத்தில் களமிறங்கி நங்கூரமாக இந்தியாவை தூக்கி நிறுத்திய கௌதம் கம்பீர் 9 பவுண்டரியுடன் 97 ரன்கள் குவித்து வெற்றி பாதைக்கு அழைத்து வந்து கடைசி நேரத்தில் சதத்தை நழுவ விட்டு அவுட்டானார்.

ஆனால் அவருடன் 4வது விக்கெட்டுக்கு 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து முக்கிய நேரத்தில் ஃபார்முக்கு திரும்பிய கேப்டன் தோனி கடைசி வரை அவுட்டாகாமல் 8 பவுண்டரி 2 சிக்சருடன் 91* (79) ரன்கள் குவித்து அபார பினிஷிங் செய்து இந்தியாவின் 28 வருட உலககோப்பை கனவை நிஜமாக்கினார். குறிப்பாக ரவி சாஸ்திரி வர்ணனையுடன் இப்போதும் கண்ணை மூடி நினைத்தால் இந்திய ரசிகர்களுக்கு புல்லரிப்பை ஏற்படுத்தும் அபார சிக்ஸருடன் பினிஷிங் செய்ததால் ஆட்டநாயகன் விருதை வென்ற அவர் தொடர் முழுவதும் அசத்தி தொடர் நாயகன் விருதை வென்ற யுவராஜ் சிங், பைனலில் 97 ரன்கள் குவித்த கம்பீர் ஆகியோரை விட இப்போதும் அதிக மக்களால் கொண்டாடப்படுகிறார்.

- Advertisement -

அதனால் கடந்த சில வருடங்களாகவே கௌதம் கம்பீர் போன்ற முன்னாள் வீரர்கள் எப்போதுமே தோனி அப்படி சொன்னதில்லை என்றாலும் அவர் என்ன தனியாளாக கோப்பை வென்று கொடுத்தாரா? என்ற விமர்சனங்களை வைத்து வருகிறார்கள். அந்த வரிசையில் மீண்டும் இணைந்துள்ள கெளதம் கம்பீர் 2011 உலகக்கோப்பை என்றதும் அனைவரும் தோனியின் அந்த சிக்ஸரையும் தம்முடைய 97 ரன்களை மட்டுமே பேசுகிறார்களே தவிர 21 விக்கெட்டுகள் எடுத்து பந்து வீச்சு துறையில் முக்கிய பங்காற்றிய ஜஹீர் கானை மறந்து விட்டதாக ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Gambhir

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “2011 உலகக்கோப்பை என்றதுமே மக்கள் அனைவரும் எம்எஸ் தோனியின் வெற்றி பெற வைத்த சிக்ஸரைப் பற்றியும் என்னுடைய 97 ரன்களை பற்றியும் பேசுகிறார்கள். ஆனால் ஜஹீர் கான் தான் உண்மையாகவே அந்த உலகக் கோப்பை பைனலில் வெற்றிக்கான முதல் தாக்கத்தை ஏற்படுத்தினார்” என்று கூறினார்.

- Advertisement -

அவர் கூறுவது போல மாபெரும் பைனலில் முதலில் பேட்டிங் செய்த இலங்கைக்கு புதிய பந்தில் ஸ்விங் செய்து சவாலை கொடுத்த ஜாகிர் கான் 10 ஓவர்களில் 60 ரன்களை மட்டுமே கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை எடுத்து பந்து வீச்சில் இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார் என்பதை யாரும் மறுக்க முடியாது. அத்துடன் 21 விக்கெட்டுகள் எடுத்த அவர் 2011 உலகக்கோப்பையில் அதிக விக்கெட் எடுத்த பவுலர் என்ற சாதனையை சாகித் அப்ரிடியுடன் பகிர்ந்து கொண்டார்.

ZaheerKhan

இதையும் படிங்கஹாட்ரிக் உட்பட 8 விக்கெட்களை சாய்த்து டெல்லியை நொறுக்கிய உனட்கட் – ரஞ்சி கோப்பையில் 75 வருட புதிய சாதனை

ஆனால் ஜஹீர் கான் மட்டுமல்ல சச்சின் முதல் நாக் அவுட்டில் 20, 30 போன்ற முக்கிய ரன்களை அடித்த ரெய்னா வரை அனைவருமே இந்தியாவின் வெற்றி முக்கிய பங்காற்றினார்கள். இருப்பினும் தோனியை தான் அதிக ரசிகர்கள் எப்போதும் கொண்டாடுவதாக கௌதம் கம்பீர் மீண்டும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement