ஹாட்ரிக் உட்பட 8 விக்கெட்களை சாய்த்து டெல்லியை நொறுக்கிய உனட்கட் – ரஞ்சி கோப்பையில் 75 வருட புதிய சாதனை

Advertisement

இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சிக் கோப்பையின் 2022 – 23 சீசன் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் டிசம்பர் 3ஆம் தேதியன்று எலைட் குரூப் பி பிரிவில் இடம் பிடித்திருந்த டெல்லி மற்றும் சௌராஷ்டிரா அணிகள் மோதிய லீக் போட்டி சவுராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லிக்கு ஆரம்பத்திலேயே சௌராஷ்ட்ரா கேப்டன் ஜெயதேவ் உனட்கட் மிகப்பெரிய அதிர்ச்சி கொடுத்தார். ஏனெனில் முதல் ஓவரை வீசிய அவர் 3, 4, 5 ஆகிய பந்துகளில் முறையே துருவ் சோரே 0 (3), வைபவ் ராவல் 0 (1), கேப்டன் யாஷ் துல் 0 (1) என அடுத்தடுத்த 3 பந்துகளில் 3 பேட்ஸ்மேன்களை டக் அவுட்டாகி ஹாட்ரிக் விக்கெட்டுகளை சாய்த்தார்.

Jaydev Unadkat

அத்தோடு நிற்காத அவர் தன்னுடைய 2வது ஓவரின் 4, 6 ஆகிய பந்துகளில் ஜான்டி சித்து 4, லலித் யாதவ் 0 என மேலும் 2 முக்கிய வீரர்களை காலி செய்து மிரட்டினார். அந்த வகையில் முதல் 12 பந்துகளில் ஹாட்ரிக் உட்பட 5 விக்கெட்டுகளை சாய்த்த அவரால் 6/5 என திண்டாடிய டெல்லி 30 ரன்கள் தாண்டாது என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் 8வது விக்கெட்டுக்கு நங்கூரத்தை போட்ட டெயில் எண்டர்கள் ப்ரான்சு விஜிரன் 15 ரன்கள் எடுத்து மானத்தை காப்பாற்றினார்.

- Advertisement -

வரலாற்று சாதனை:
அவருடன் விளையாடிய ரித்திக் ஷாக்கின் அடுத்து வந்த சிவங்க் வசிஸ்த்துடன் ஜோடி சேர்ந்து 9வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் முக்கியமான பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு காப்பாற்றிய போதிலும் டெல்லி 133 ரன்களுக்கு சுருண்டது. அதில் ரித்திக் ஷாக்கீன் 68* ரன்கள் எடுத்த நிலையில் வசிஸ்த் 38 ரன்களிலும் குல்தீப் யாதவை டக் அவுட்டாக்கி கதையை முடித்த ஜெயதேவ் உனட்கட் மொத்தமாக 12 ஓவர்களில் 1 மெய்டன் உட்பட 39 ரன்களை கொடுத்து 8 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார்.

அதனால் ரஞ்சி கோப்பையில் தன்னுடைய மிகச் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த அவர் முதல் தர கிரிக்கெட்டில் சௌராஷ்ட்ரா அணிக்காக சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த வீரர் என்ற 75 வருட சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. ஜெயதேவ் உனட்கட் : 8/39, டெல்லிக்கு எதிராக, 2022*
2. சுர்ஜுராம் கிர்தாரி : 8/55, குஜராத்துக்கு எதிராக, 1947
3. டி நரூட்டோம் : 7/16, பரோடாவுக்கு எதிராக, 1948
4. ரவீந்திர ஜடேஜா : 7/31 ஹைதராபாத்துக்கு எதிராக, 2008

- Advertisement -

முன்னதாக முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் எடுத்த அவர் 88 வருட ரஞ்சி கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியின் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் எடுத்த முதல் பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையும் படைத்தார். மேலும் முதல் தர கிரிக்கெட்டில் ஒரு போட்டியின் முதல் போட்டியில் ஹாட்ரிக் எடுத்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையை இர்பான் பதானுக்கு பின் பெற்றார். கடந்த 2010ஆம் ஆண்டு தன்னுடைய 19 வயதிலேயே இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் முதல் போட்டியிலேயே விக்கெட் எடுக்காமல் சுமாராக செயல்பட்டதால் பின்னர் வாய்ப்பு பெறவில்லை.

அதன் பின் 2013 – 2018 வரையிலான காலகட்டத்தில் கிடைத்த ஓரிரு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் சுமாராகவே செயல்பட்ட அவர் சமீப காலங்களில் ஐபிஎல் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு செயல்படவில்லை. அதனால் கேரியர் முடிந்து விட்டதாக அனைவரும் நினைத்தாலும் உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி வரும் அவர் 2019 ரஞ்சி கோப்பையில் அதிக விக்கெட்களை எடுத்து கேப்டனாக சௌராஷ்டிரா அணிக்கு முதல் முறையாக கோப்பையை வென்று கொடுத்தார்.

இதையும் படிங்கவீடியோ : 155 கி.மீ வேகத்தில் இலங்கை கேப்டனை அவுட்டாக்கிய உம்ரான் மாலிக் – பும்ராவை மிஞ்சி புதிய வரலாற்று சாதனை

மேலும் 2022 விஜய் ஹசாரே கோப்பையையும் வென்ற காரணத்தால் சமீபத்திய வங்கதேச டெஸ்ட் தொடரில் தேர்வு செய்யப்பட்ட அவர் 12 வருடங்கள் கழித்து போராடி தன்னுடைய முதல் விக்கெட்டை எடுத்து கனவை நிஜமாக்கினார். இருப்பினும் முதன்மை பவுலர்கள் காயமடைந்ததால் பெற்ற அந்த வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள தேவைப்பட்ட அற்புதமான செயல்பாட்டை தற்போது வெளிப்படுத்தியுள்ள அவர் மீண்டும் இந்திய அணியில் தேர்வாகும் வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளார்.

Advertisement