சர்பராஸ் கான் மட்டும் என்ன ஸ்பெஷலா? துருவ் ஜுரேலுக்கு ஆதரவாக – ஆனந்த் மஹேந்திராவை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்

Jurel-and-Mahindra
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரினை இந்திய அணி மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் மார்ச் 7-ஆம் தேதி தர்மசாலா நகரில் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் முன்னணி வீரர்கள் இல்லாத இந்த டெஸ்ட் தொடரில் இளம் வீரர்கள் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி இங்கிலாந்து அணியை வீழ்த்தியது அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்த டெஸ்ட் தொடரில் இதுவரை இந்திய அணி சார்பாக 4 வீரர்களுக்கு (ரஜத் பட்டிதார், சர்பராஸ் கான், துருவ் ஜுரேல், ஆகாஷ் தீப்) அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சர்ஃபராஸ் கான் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜுரேல் ஆகிய இருவரும் ஒன்றாக அறிமுகமாகியிருந்தனர். அந்த வகையில் நடைபெற்று முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களுமே அரைசதம் அடித்து அசத்திய அறிமுகவீரர் சர்பராஸ் கானின் பேட்டிங்கை பலரும் பாராட்டியிருந்தனர்.

அதோடு அவரது தந்தை நௌஷாத் கானுக்கு ஆனந்த் மகேந்திரா தார் காரினை பரிசாக வழங்க விரும்புவதாக அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது நடைபெற்று முடிந்துள்ள நான்காவது டெஸ்ட் போட்டியில் துருவ் ஜுரேல் முதல் இன்னிங்சில் 90 ரன்கள் அடித்து இந்திய அணியில் ரன் குவிப்பிற்கு உதவியிருந்தார்.

- Advertisement -

அதோடு இரண்டாவது இன்னிங்ஸில் 39 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றிக்கும் அழைத்துச்சென்றார். இதன்காரணமாக தற்போது ஆனந்த் மகேந்திராவை இந்திய ரசிகர்கள் சமூக வலைதளத்தின் மூலம் ட்ரோல் செய்து வருகின்றனர். அதன்படி ரசிகர்கள் குறிப்பிட்டுள்ள பதிவில் : மூன்றாவது போட்டியின் போது சிறப்பாக விளையாடிய சர்பராஸ் கானிற்கு தார் காரை பரிசாக வழங்கி உள்ளீர்கள்.

இதையும் படிங்க : ரொம்ப நன்றி சார்.. நீங்க மட்டும் அதை செய்யலன்னா இந்தப் பையனே இல்ல.. துருவ் ஜுரேல் உருக்கம்

ஆனால் நான்காவது போட்டியின் போது அவருடனே அறிமுகமாகி தற்போது அசத்தியுள்ள முன்னாள் கார்கில் போராட்ட வீரரின் மகனான துருவ் ஜுரேலுக்கு ஏன் தார் காரை பரிசாக வழங்கவில்லை? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். அதிலும் குறிப்பாக தற்போது ஜுரேலின் சிறப்பான ஆட்டத்தை பாராட்டி எம்.ஜி நிறுவனம் அவர்களது MG Hector காரை பரிசாக வழங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து தற்போது ஆனந்த் மகேந்திராவை அந்த அறிவிப்பை வைத்து ரசிகர்கள் ட்ரோல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement