ரொம்ப நன்றி சார்.. நீங்க மட்டும் அதை செய்யலன்னா இந்தப் பையனே இல்ல.. துருவ் ஜுரேல் உருக்கம்

Dhruv Jurel 7
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக ராஞ்சியில் நடைபெற்று முடிந்த 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 3 – 1* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை வென்றுள்ளது. முன்னதாக இந்த தொடரில் முதலிரண்டு போட்டிகளில் தடுமாறிய விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத்துக்கு பதிலாக 3வது போட்டியில் துருவ் ஜுரேல் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை பெற்றார்.

அந்த வாய்ப்பில் 46 ரன்கள் அடித்து வெற்றியில் தன்னுடைய பங்காற்றிய அவர் விக்கெட் கீப்பிங்கிலும் வழக்கமான வேலைகளை செய்து அசத்தினார். அதைத் தொடர்ந்து நடந்த 4வது போட்டியில் முதல் இன்னிங்ஸில் முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்ததால் 177/7 என தடுமாறிய இந்தியா 300 ரன்கள் தொடாது என்று நம்பப்பட்டது. ஆனால் அப்போது டெயில் எண்டரான குல்தீப் யாதவுடன் சேர்ந்து நங்கூரமாக விளையாடிய அவர் 90 ரன்கள் அடித்து காப்பாற்றினார்.

- Advertisement -

வாய்ப்புக்கு நன்றி:
அதனால் 307 ரன்கள் அடித்து ஓரளவு தப்பிய இந்தியாவுக்கு இரண்டாவது இன்னிங்ஸில் 192 ரன்களை சேசிங் செய்த போது ரோஹித் – ஜெய்ஸ்வால் நல்ல துவக்கத்தை கொடுத்தனர். ஆனால் ஜடேஜா, ரஜத் படிடார், சர்பராஸ் கான் சொற்ப ரன்களில் அவுட்டானதால் இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியானது. அப்போது சுப்மன் கில்லுடன் சேர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் முக்கியமான 39* ரன்கள் அடித்து ஃபினிஷிங் செய்து வெற்றி பெற வைத்தார்.

அப்படி 2 இன்னிங்சிலும் அபாரமாக விளையாடிய வெற்றி பெற வைத்ததால் துருவ் ஜுரேல் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 22 வருடங்கள் கழித்து அறிமுக தொடரிலேயே ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளார். அந்த வகையில் தாங்கள் கொடுத்த வாய்ப்பை வீணடிக்காத துருவ் ஜூரேலை ராஞ்சி போட்டி முடிந்ததும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.

- Advertisement -

இந்நிலையில் நீங்கள் மட்டும் நம்பி எனக்கு வாய்ப்பு கொடுக்காமல் போனால் இந்த வெற்றி கிடைத்திருக்காது என்று ராகுல் டிராவிட் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு துருவ் ஜுரேல் உருக்கமான நன்றியை தெரிவித்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “இந்த பையன் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி ரோஹித் பைய்யா, ராகுல் சார்” என்று கையெடுத்து கும்பிட்டு இந்திய கொடி மற்றும் இதயம் எமோஜியை போட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஜடேஜாவை விட அவரோட டெக்னிக் வேகமா இருக்கு.. இனிமேலும் தப்பு பண்ணாதீங்க.. இந்தியாவுக்கு குக் அறிவுரை

அந்த வகையில் கிடைத்த வாய்ப்பை பொன்னாக மாற்றியதால் இந்திய அணிக்காக விளையாட விருப்பம் இல்லாமல் வெளியேறிய இஷான் கிசானுக்கு பதிலாக இனிமேல் ஜுரேலுக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து இத்தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசிப் போட்டி மார்ச் 7ஆம் தேதி தரமசாலாவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement