ஜடேஜாவை விட அவரோட டெக்னிக் வேகமா இருக்கு.. இனிமேலும் தப்பு பண்ணாதீங்க.. இந்தியாவுக்கு குக் அறிவுரை

Alastair Cook 6
- Advertisement -

ராஞ்சியில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 3 – 1* என்ற கணக்கில் கோப்பையை கைப்பற்றியுள்ளது. முன்னதாக அப்போட்டியில் 192 ரன்களை சேசிங் செய்த போது ரோகித் சர்மா 55, ஜெய்ஸ்வால் 37 ரன்கள் அடித்து 84 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்து ஆட்டமிழந்தனர்.

ஆனால் அப்போது வந்த ரஜத் படிடார் 0, ஜடேஜா 4, சர்பராஸ் கான் 0 ரன்களில் அவுட்டாகி பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தியதால் 120/5 என சரிந்த இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியானது. நல்லவேளையாக அப்போது சுப்மன் கில் 52*, துருவ் ஜுரேல் 39* ரன்கள் அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தனர். குறிப்பாக முதல் இன்னிங்ஸில் 177/7 என இந்தியா திணறிய போது 90 ரன்கள் அடித்து காப்பாற்றிய துருவ் ஜுரேல் இரண்டாவது இன்னிங்ஸிலும் வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

தப்பு பண்ணாதீங்க:
இந்நிலையில் அழுத்தமான நேரத்தில் 5வது இடத்தில் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா வெறும் 4 (33) ரன்களை 12.12 என்ற படுமோசமான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து அழுத்தத்தை உண்டாக்கியதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக் கூறியுள்ளார். எனவே இது போன்ற சூழ்நிலைகளில் அடுத்த முறை ஜடேஜாவை விட வேகமான பேட்டிங் டெக்னிக்கை கொண்டுள்ள துருவ் ஜுரேலை முன்கூட்டியே களமிறக்குங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது பற்றி டிஎன்டி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “துருவ் ஜுரேல் லென்த்தை பிடித்து விளையாடும் விதம் என்னை கவர்ந்துள்ளது. அவர் சரியான முடிவை எடுப்பதில் வேகமாக செயல்படுகிறார். அவருடைய தூண்டுதல் இயக்கத்தை நீங்கள் பார்க்கிறீர்கள். அவர் ஒய்ட் பந்தின் தொடக்கத்திலிருந்து பின்னோக்கி முன்னேறி சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பதில் திறமையானவராக செயல்படுகிறார்”

- Advertisement -

“க்ளாஸ் வீரரான கில் சற்று வித்தியாசமாக விளையாடினார். ஆனால் முன்னோக்கி அழுத்தும் ஜுரேல் பொறுமையுடன் வேகமாக பேட்டிங் செய்யக் கூடியவர். மறுபுறம் ஜடேஜா ஏன் இன்னும் சற்று கீழே பேட்டிங் செய்திருக்க வேண்டும் என்பதை காட்டினார். ஆம் அவரிடம் ரன்கள் குவிக்கும் திறமை இருக்கிறது. ஆனால் அழுத்தமான நேரத்தில் அட்டாக் மற்றும் துடுப்பாட்டம் விளையாடுவதற்கான சமநிலை உங்களிடம் வேண்டும். ஜடேஜா உலகத்தரம் வாய்ந்த ஆல் ரவுண்டர். ஆனால் ஐந்தாவது இடத்தில் அவர் ரிஸ்க் எடுத்து விளையாட தடுமாற்றினார்”

இதையும் படிங்க: தனியாளாக இந்திய அணிக்கு வெற்றி பெற்றுத்தந்த துருவ் ஜுரேலுக்கு கிடைத்த பிரமாண்ட பரிசு – விவரம் இதோ

“ஏனெனில் அவுட்டாக விரும்பாமல் விளையாடிய அவர் தன் மீதே அழுத்தத்தை உருவாக்கினார். ஆனால் அதை சமநிலையுடன் செய்த ஜூரேல் வேகமான கால் நகர்த்தல் மற்றும் கூர்மையான மனதை கொண்டுள்ளார். ஜடேஜாவின் வழியில் உங்களுக்கு ரன்கள் கிடைக்க வாய்ப்பில்லை. இங்கே ஜடேஜாவை நான் மோசமான வீரர் என்றழைக்கவில்லை. ஆனால் ஜடேஜாவை விட ஜுரேல் சற்று நன்றாக விளையாடும் திறமையைக் கொண்டுள்ளார்” என்று கூறினார்.

Advertisement