தனியாளாக இந்திய அணிக்கு வெற்றி பெற்றுத்தந்த துருவ் ஜுரேலுக்கு கிடைத்த பிரமாண்ட பரிசு – விவரம் இதோ

Jurel
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக ராஞ்சி நகரில் நடைபெற்ற முடிந்த நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை எதிர்த்து விளையாடிய இந்திய அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 192 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் இந்த தொடரையும் கைப்பற்றியது.

இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சார்பாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துருவ் ஜுரேலுக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. ஏனெனில் இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்களை குவித்த அசத்தியது.

- Advertisement -

அவ்வேளையில் இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் ஒரு கட்டத்தில் 177 ரன்களுக்கு 7 விக்கட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்காரணமாக இந்திய அணி 250 ரன்களை கூட தொடாது என்றே எதிர்பார்க்கப்பட்டது. அப்போது பின்வரிசை வீரர்களுடன் ஜோடி சேர்ந்த துருவ் ஜுரேல் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார்.

அந்தவகையில் தனி ஆளாக பவுலர்களை ஒருபுறம் நிற்க வைத்து அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய துருவ் ஜுரேல் 149 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்கள் என 90 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக இந்திய அணி 307 ரன்களை குவித்தது.

- Advertisement -

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸின் போதும் இந்திய அணி 192 ரன்கள் என்கிற இலக்கினை துரத்தும் போது 120 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அவ்வேளையில் சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்த துருவ் ஜுரேல் ஆட்டமிழக்காமல் 77 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

இதையும் படிங்க : அந்த போஸ்டரை எடுக்கலனா பங்க்ஷனே நடக்காது.. கல்லூரி நிர்வாகத்தை அலறவிட்ட ரோஹித் ரசிகர்கள் – என்ன நடந்தது?

அதன் காரணமாகவே அவருக்கு இந்த ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. மேலும் இந்த போட்டியில் அவரது பேட்டிங்கில் உள்ள திறமைகளை வெளிக்காட்டியதால் அவருக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. இவ்வேளையில் அவரது இந்த சிறப்பான செயல்பாட்டை பாராட்டி பிரபல கார் நிறுவனமான MG அவர்களது 22 லட்ச ருபாய் மதிப்பிலான MG Hector காரை பரிசாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement