அவங்க தக்காளி, முட்டையாலயே அடிச்சாங்க.. 1996 உ.கோ பின்னணியை பகிர்ந்த முன்னாள் பாக் வீரர்

Aaqib Javed
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் 1992 போல கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் லீக் சுற்றுடன் பரிதாபமாக வெளியேறியது. குறிப்பாக வரலாற்றை மாற்றவோம் என்று பேசிய அந்த அணியினர் வரலாற்றில் தொடர்ந்து 8வது முறையாக இந்தியாவுக்கு எதிராக உலக கோப்பையில் தோற்றது மட்டுமல்லாமல் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வரலாற்றில் முதல் முறையாக அவமான தோல்வியை பதிவு செய்தனர்.

அத்துடன் இங்கிலாந்துக்கு எதிராக ஆறுதல் வெற்றியை கூட பதிவு செய்யாமல் வெளியேறிய அந்த அணி கடுமையான கிண்டல்கள் மற்றும் விமர்சனங்களை சந்தித்தது. மேலும் இந்த தோல்விகளுக்கு பொறுப்பேற்ற பாபர் அசாம் அனைத்து வகையான பாகிஸ்தான் அணியின் கேப்டன்ஷிப் பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்து அதிரடியான முடிவை எடுத்துள்ளார்.

- Advertisement -

முட்டை, தக்காளி அடி:
அந்த வகையில் தற்போது பாகிஸ்தான் ரசிகர்கள் தங்கள் அணியினர் மீது மிகுந்த அதிருப்தியுடன் காணப்படுகிறார்கள். இந்நிலையில் 1996 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக பெங்களூருவில் நடைபெற்ற காலிறுதியில் தோல்வியை சந்தித்து நாட்டுக்கு திரும்ப சென்ற போது பாகிஸ்தான் ரசிகர்கள் முட்டை மற்றும் தக்காளியால் அடித்ததாக முன்னாள் வீரர் ஆக்கிப் ஜாவேத் தெரிவித்துள்ளார்.

இது பற்றி பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றில் அவர் பேசியது பின்வருமாறு. “இப்போது நாம் பாகிஸ்தான் அணியை உலகக் கோப்பை சுமாராக செயல்பட்டும் விமர்சிப்பதற்கே யோசிக்கிறோம். ஆனால் அவர்கள் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். ஏனெனில் 1996 உலகக் கோப்பையில் எனக்கு மிகவும் மோசமான நிகழ்வு நடந்தது. குறிப்பாக இந்தியாவில் இருந்து திரும்புவதற்கு முன்பாக நாங்கள் பயந்தோம்”

- Advertisement -

“சொல்லப்போனால் விமான நிலையத்தில் இருந்த பாதுகாப்பு குழுவினர் கூட எங்களுக்கு உதவி செய்ய வரவில்லை. எங்கள் வீட்டின் மீது கற்கள் எறியப்பட்டது. என்னுடைய தலையில் முட்டை மற்றும் தக்காளியால் அடித்தனர். எங்களுடைய அணி பேருந்து நிறுத்தப்பட்ட ஒரு சிலர் என்னை நோக்கி ஓடி வந்தார்கள். அப்போது ஓட்டுநர் பேருந்தை இயக்கிய நிலையில் நான் என்னுடைய பைகளை எடுத்து எடுத்துக்கொண்டு ஓடினேன்”

இதையும் படிங்க: எனக்கு சொல்ல வார்த்தை இல்ல.. அரையிறுதி தோல்விக்கு பிறகு மனமுடைந்த – தெ.ஆ கேப்டன் தெம்பா பவுமா

“நல்ல வேலையாக அந்த சமயத்தில் காவல்துறையில் இருந்த என்னுடைய உறவினர் ஒருவர் காரில் வந்து என்னை காப்பாற்றினார். அப்படி எங்களுடைய காலத்தை ஒப்பிடும் போது தற்போதைய அணியினர் சந்திக்கும் விமர்சனங்கள் ஒன்றுமே கிடையாது. நாங்கள் நிறைய நம்பிக்கை வைத்தும் இந்த அணி 5 அல்லது 6வது இடத்தை மட்டுமே பிடித்தது. கடந்த 3 உலகக் கோப்பைகளாக நம்முடைய அணி இதே கதையை அரங்கேற்றி வருகிறது” என்று கூறினார்.

Advertisement