- Advertisement -
ஐ.பி.எல்

ஐபிஎல் 2022 : நடந்தது 20 மேட்ச், அதற்குள் எத்தனை தவறுகள் தெரியுமா? மோசமான அம்பயர்களை கங்குலி கவனிப்பாரா?

இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2022 தொடர் கோலாகலமாக துவங்கி வெற்றிகரமான 2-வது வாரத்தைக் கடந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. இந்த வருட ஐபிஎல் தொடர் ரசிகர்களுக்கு சற்று வித்தியாசமான அனுபவத்தை கொடுத்து வருகிறத. ஏனெனில் அதிக கோப்பைகளை வென்று ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணிகளாக திகழும் நடப்பு சாம்பியன் சென்னை, மும்பை போன்ற அணிகள் இதுவரை ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்ய முடியாமல் புள்ளி பட்டியலில் அதலபாதாளத்தில் திண்டாடி வருகின்றன.

மோசமான அம்பயர்கள்:
மறுபுறம் பெங்களூரு, பஞ்சாப், டெல்லி போன்ற இதுவரை ஒரு கோப்பைகளை கூட இல்லாத அணிகள் அபாரமாக செயல்பட்டு வெற்றி நடை போட்டு வருகின்றன. அதைவிட இந்த வருடம் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட குஜராத், லக்னோ ஆகிய அணிகள் கூட அதிரடியாக செயல்பட்டு ஹாட்ரிக் வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் டாப் 4 இடங்களில் ஜொலிக்கின்றன.

- Advertisement -

இப்படி இந்த வருட ஐபிஎல் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த சீசனில் அம்பயரிங் படுமோசமாக உள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதிலும் இதுவரை 20 லீக் போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில் அதற்குள் முக்கியமான தருணங்களில் அம்பயர் கொடுத்த தவறான தீர்ப்புகள் பலரையும் கடுப்பாக வைத்தது. அதில் நேற்று டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் மோதிய 19-வது லீக் போட்டியில் ஓரே ஓவரில் 3 தவறான தீர்ப்புகளை அம்பயர்கள் வழங்கியது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. அதை பற்றி பார்ப்போம்.

1. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி 20 ஓவர்களில் அதிரடியாக பேட்டிங் செய்து 215/5 ரன்களை குவித்தது. அதைத்தொடர்ந்து 216 என்ற இலக்கை துரத்திய கொல்கத்தாவுக்கு தொடக்க வீரராக களமிறங்கிய அஜிங்கிய ரஹானே முதல் ஓவரை சந்தித்தார்.

- Advertisement -

2. அதை வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் வீச முதல் பந்தில் ரகானே பேட்டில் எட்ஜ் வாங்கியதாக உணர்ந்த ரஹ்மான் மற்றும் டெல்லி வீரர்கள் அம்பயரிடம் அவுட் கேட்டார்கள். அதை அம்பயர் அவுட் கொடுத்ததால் அதிர்ச்சி அடைந்த ரஹானே அதை ரிவியூ செய்தார். இறுதியில் பந்து பேட்டில் படாதது ரீப்ளேயில் தெரிய வந்ததால் அந்த தவறான அவுட்டை அம்பயர் திரும்பப் பெற்றுக்கொண்டார்.

3. அதற்கு அடுத்த பந்திலேயே மீண்டும் ரஹானேவை எல்பிடபிள்யூ முறையில் டெல்லி வீரர்கள் அவுட் கேட்க அதற்கு அமபயர் அவுட் கொடுத்தார். ஆனால் அதற்கும் அதிர்ச்சி அடைந்த ரகானே அதை ரிவ்யூ செய்த நிலையில் ரீப்ளேயில் பந்து பேட்டில் எட்ஜ் வாங்கியபின் காலில் பட்டது தெரிய வந்ததால் மீண்டும் கொடுத்த அவுட்டை அம்பயர் வாபஸ் பெற்றுக்கொண்டார்.

- Advertisement -

4. அதன்பின் 3வது பந்தை எதிர்கொண்ட ரகானேவின் பேட்டில் பந்து பட்டு எட்ஜ் வாங்கி விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கையில் தஞ்சம் அடைந்தது. ஆனால் முதல் 2 பந்துகளில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அதை டெல்லி வீரர்கள் யாரும் கேட்காத நிலையில் அம்பயர் அமைதியாகவே அவுட் கொடுக்காமல் இருந்து விட்டார். ரகானேவும் அதை உணராத காரணத்தால் தொடர்ந்து பேட்டிங் செய்து அதன்பின் 8 ரன்கள் எடுத்தபின்பு ஆட்டமிழந்தார்.

இதை பார்த்த ரசிகர்கள் ஒரே ஓவரில் அதுவும் வரிசையாக முதல் 3 பந்துகளில் இப்படி தாறுமாறாக நடந்து கொண்ட அம்பயரை தற்போது சமூக வலைதளங்களில் திட்டியும் கலாய்த்தும் வருகிறார்கள். இது மட்டுமல்லாமல் இந்த தொடரில் ஏற்கனவே ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் ஹைதெராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் அடித்த பந்து தேவதூத் படிக்கல் கையில் தஞ்சம் அடைவதற்குள் தரையில் பட்டது தெளிவாக தெரிந்த போதிலும் 3வது அம்பயர் அவுட் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

- Advertisement -

அத்துடன் நேற்று முன்தினம் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதிய போட்டியில் நட்சத்திர வீரர் விராட் கோலி 48 ரன்கள் எடுத்திருந்த போது இளம் வீரர் தேவால்டு ப்ரேவிஸ் பந்தில் சர்ச்சைக்குரிய முறையில் எல்பிடபிள்யூ வழங்கப்பட்டார். அதை விராட் கோலி ரிவ்யூ செய்ததில் பேட் மற்றும் கால் ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் பந்து தொட்டது தெரியவந்தது.

அதுபோன்ற தருணங்களில் பந்து முதலில் பேட்டில் படுவதாகத்தான் கருத வேண்டும் என்று கிரிக்கெட்டின் அடிப்படை விதிமுறையில் உள்ளது. அது கூட தெரியாத 3-வது அம்பையர் மீண்டும் அவுட் வழங்கியதால் கடுப்பான விராட் கோலி கோபத்தில் அவரை திட்டி கொண்டே பெவிலியனுக்கு திரும்பினார். இப்படி இந்த வருடம் 20 போட்டி முடிவதற்குள் இதுபோல 5-க்கும் மேற்பட்ட தவறான தீர்ப்புகளை அம்பயர்கள் வழங்கியுள்ளனர்.

இதையும் படிங்க : தன்னை அவமானப்படுத்திய முன்னாள் அணியை பழி வாங்கிய நட்சத்திர வீரர் ! பாராட்டும் ரசிகர்கள்

ஐபிஎல் போன்ற மிகப்பெரிய தொடரில் வெறும் ஒரு பந்தில் போட்டியின் முடிவு தலைகீழாக மாறிவிடும் என தெரிந்த அம்பயர்கள் இப்படி பொறுப்பில்லாமல் தீர்ப்புகளை வழங்குவது எந்த வகையிலும் நியாயமில்லை என ரசிகர்கள் கொதிக்கின்றனர். இதில் கடுப்பாகும் விஷயம் என்னவெனில் இந்த தவறான முடிவு கொடுத்த அம்பயர்கள் அனைவரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். எனவே இதை பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கவனித்து அம்பயர்களுக்கு எச்சரிக்கை கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

- Advertisement -
Published by