- Advertisement -
ஐ.பி.எல்

மும்பைக்காக லக்னோவை தோற்கடிக்க போராடினார்களா அம்பயர்கள்? மீண்டும் ஆதாரத்துடன் விமர்சிக்கும் ரசிகர்கள்

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 48வது லீக் போட்டியில் மும்பையை 4 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ வீழ்த்தியது. லக்னோவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 145 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக இசான் கிசான் 32, நேஹல் வதேரா 46 ரன்கள் எடுத்த நிலையில் லக்னோ சார்பில் அதிகபட்சமாக மோசின் கான் 2 விக்கெட்டுகள் சாய்த்தார்.

அதைத் தொடர்ந்து சேசிங் செய்த லக்னோ அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் கேஎல் ராகுல் 28, மார்கஸ் ஸ்டோய்னிஸ் 62 ரன்கள் எடுத்து 19. 2 ஓவரிலேயே வெற்றி பெற வைத்தனர். முன்னதாக இந்த வருடம் பெங்களூரு, பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்கு நடுவர்கள் சாதகமாக நடந்து கொண்டதாக ரசிகர்கள் ஆதாரத்துடன் விமர்சித்தனர்.

- Advertisement -

ரசிகர்கள் விமர்சனம்:
அந்த நிலையில் இப்போட்டியில் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல மும்பை கண்டிப்பாக வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. அப்படிப்பட்ட இக்கட்டான போட்டியில் பேட்டிங்கில் ரோகித் சர்மா அவுட்டானதும் சூரியகுமார் யாதவ் களமிறங்கினார். அப்போது மார்கஸ் ஸ்டோய்னிஸ் வீசிய ஒரு பந்து சூரியகுமாரின் பேட்டில் உரசிக்கொண்டு விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் கையில் தஞ்சமடைந்தது.

ஆனால் அப்போது களத்தில் இருந்த நடுவர் அவுட் வழங்காமல் ஒயிட் வழங்கியது லக்னோ வீரர்களை ஆச்சரியமடைய வைத்தது. அதைத்தொடர்ந்து லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் ரிவியூ செய்தார். அதில் சூரியகுமார் பேட்டில் மிகப்பெரிய எட்ஜ் பட்டது தெளிவாக தெரிந்தது. அதனால் ஒய்ட் என்ற தீர்ப்பை வாபஸ் பெற்ற நடுவர்கள் சூர்யாகுமார் அவுட்டென அறிவித்தார்கள். அதை சந்தேகிக்கும் ரசிகர்கள் ஒருவேளை ராகுல் ரிவ்யூ எடுக்காமல் போயிருந்தால் மும்பைக்கு சாதகமாக அந்த தீர்ப்பு மாறியிருக்கும் என்று விமர்சிக்கின்றனர்.

- Advertisement -

அதை விட 145 ரன்களை துரத்திய லக்னோ ஸ்டோய்னிஸ் அதிரடியால் கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்தது. ஆனால் அவரும் ஹூடாவும் அவுட்டான பின் வந்த அஸ்டன் டர்னர் 5 ரன்னில் அவுட்டானதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது ஒரு பந்தில் ஆயுஸ் படோனி சிங்கிள் எடுப்பதற்காக ஓடி டைவ் அடித்தார். இருப்பினும் அவருடைய பேட் தரையில் இல்லாமல் காற்றில் இருந்ததாக சொல்லி நடுவர்கள் ரன் அவுட் வழங்கினார்கள்.

இதையும் படிங்க: ஹல்க் என்னோட பட்டப்பெயர்.. அவருக்கு தரமுடியாது.. பிட்ச் பற்றி எங்களுக்கு தெரியும்.. ஸ்டோய்னிஸ் பேட்டி

ஆனால் உண்மையாகவே பேட்டின் அடிப்பகுதி காற்றில் இருந்தாலும் கைப்பிடிக்கு கீழே உள்ள பகுதியின் விளிம்பு தரையில் உரசியது நன்றாக தெரிந்தது. அந்த வகையில் கடைசி நேரத்தில் சரிந்த லக்னோ அணியை மேலும் சரித்து விடலாம் என்ற நோக்கத்துடன் மும்பைக்கு சாதகமாக அம்பயர்கள் ரன் அவுட் தீர்ப்பு வழங்கியதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். ஆனால் அதையும் தாண்டி இலக்கு குறைவாக இருந்ததால் லக்னோ வென்றதாக தெரிவிக்கும் எதிரணி ரசிகர்கள் நடுவர்களின் உதவியும் தாண்டி இப்போட்டியில் மும்பை தோற்றதாக பேசி வருகின்றனர்.

- Advertisement -