- Advertisement -
ஐ.பி.எல்

ஹல்க் என்னோட பட்டப்பெயர்.. அவருக்கு தரமுடியாது.. பிட்ச் பற்றி எங்களுக்கு தெரியும்.. ஸ்டோய்னிஸ் பேட்டி

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெற்ற 48வது லீக் போட்டியில் மும்பையை 4 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ தோற்கடித்தது. லக்னோவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை சுமாராக செயல்பட்டு 145 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக நேஹல் வதேரா 46, இஷான் கிசான் 32 ரன்கள் எடுத்தனர்.

லக்னோ சார்பில் அதிகபட்சமாக மோசின் கான் 2 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து சேசிங் செய்த லக்னோ அணிக்கு கேப்டன் கேஎல் ராகுல் 28, மார்கஸ் ஸ்டோய்னிஸ் 62 (45) ரன்கள் வெற்றி பெற வைத்தனர். இதனால் ஐந்தாவது வெற்றியை பதிவு செய்த லக்னோ புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியது. மறுபுறம் 7வது தோல்வியை பதிவு செய்த மும்பை ஒன்பதாவது இடத்திற்கு சரிந்தது.

- Advertisement -

ஹல்க் நாயகன்:
இந்த வெற்றிக்கு 62 ரன்கள் மற்றும் 1 விக்கெட் எடுத்து முக்கிய பங்காற்றிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் ஆஸ்திரேலிய வீரர்களான டிம் டேவிட் – மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோரில் ஹல்க் என்னும் பெயர் யாருக்கு பொருத்தமாக இருக்கிறது என்று இப்போட்டியின் போது ரசிகர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஸ்டோய்னிஸ் என்றே பெரும்பாலான ரசிகர்கள் வாக்களித்தனர்.

அது பற்றி போட்டியின் முடிவில் ஆட்டநாயகன் விருது வென்ற பின் ஸ்டோய்னிஸ் பேசியது பின்வருமாறு. “இந்தப் பெயரை நான் நீண்ட காலமாக கொண்டுள்ளேன். டிம் டேவிட் கொஞ்சம் அதிக முடியுடன் பெரிய கால்களை கொண்டுள்ளார். புதிய பந்தில் 3 ஓவர்களை பவர் பிளேவில் வீசுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் பந்து வீசியது நன்றாக இருந்தது. பிட்ச் ஓரளவு நன்றாக இருந்தது”

- Advertisement -

“இருப்பினும் அது ஸ்லோவாகும் என்பது எங்களுக்கு தெரியும். அதனால் நாங்கள் கொஞ்சம் வேகமாக சேசிங் செய்திருக்கலாம். கடைசி நேரத்தில் விழுந்த விக்கெட்டுகளுக்கு மத்தியில் 8 – 10 பந்துகளில் சிறிய பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தால் இன்னும் எளிதாக வென்றிருப்போம். அதே போல பேட்டிங்கில் கடினமாக வேலை செய்த நான் கடைசியில் சுமாராக அவுட்டாகி மற்றவரிடம் வேலையை கொடுத்தது ஏமாற்றமாக இருந்தது”

இதையும் படிங்க: ரோஹித், பும்ராவுக்கு பின் 3வது முக்கிய வீரரான அவர் 2024 டி20 உ.கோ ப்ளேயிங் லெவனில் இருக்கனும்.. பிஷப்

“இந்த அணியில் இது எனக்கு மூன்றாவது வருடமாகும். இங்கு முதல் நாளிலிருந்து நான் தொடர்ந்து இருப்பதற்கு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். இங்கே சிலருடன் நெருக்கமான நட்பை உருவாக்கியுள்ளேன். நல்ல கிரிக்கெட்டை விளையாடும் எங்களுக்கு அனைத்தும் நன்றாக அமைந்து வருகிறது” என்று கூறினார்.

- Advertisement -