- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ரோஹித், பும்ராவுக்கு பின் 3வது முக்கிய வீரரான அவர் 2024 டி20 உ.கோ ப்ளேயிங் லெவனில் இருக்கனும்.. பிஷப்

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள அந்த அணியில் விராட் கோலி, சூரியகுமார் யாதவ் போன்ற நட்சத்திர வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதே போல டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணியில் கேப்டனாக அசத்தி வரும் ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பர்களாக தேர்வாகியுள்ளனர்.

அத்துடன் சிஎஸ்கே அணியில் அசத்தலாக விளையாடி வரும் சிவம் துபே, ராஜஸ்தான் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டு வரும் ஜெய்ஸ்வால் ஆகியோரும் பேட்டிங் துறையில் தேர்வாகியுள்ளனர். மேலும் ஆல் ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜாவும் ஸ்பின்னர்களாக சஹால், குல்தீப் யாதவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்

- Advertisement -

3வது முக்கிய வீரர்:
அத்துடன் பும்ரா, சிராஜ், அர்ஷிதீப் சிங் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக தேர்வாகியுள்ளனர். இருப்பினும் இந்த அணியில் நடராஜன் உள்ளிட்ட எந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரரும் தேர்வு செய்யப்படாதது தமிழக ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அதே போல ரிங்கு சிங் ரிசர்வ் வீரராக மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது பலருக்கும் ஏமாற்றத்தை கொடுத்தது.

இந்நிலையில் இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் பும்ரா ஆகியோருக்கு பின் சிவம் துபே தான் முக்கியமானவர் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் இயன் பிஷப் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “15 பேர் இந்திய அணியை நான் தேர்வு செய்த போது ரோஹித், பும்ரா, சிவம் துபே மற்றும் இதர 12 வீரர்களை தேர்ந்தெடுத்தேன். இந்த 3 வீரர்களை தவிர்த்து மற்ற 12 வீரர்களை பற்றி நான் கவலைப்படவில்லை”

- Advertisement -

“ஏனெனில் நீங்கள் ஃபார்மை அடிப்படையாக எடுக்கும் போது இந்த ஐபிஎல் தொடரில் சிவம் துபே களமிறங்கும் ஒவ்வொரு முறையும் தன்னுடைய அபார ஆட்டத்தால் போட்டியை மாற்றி வருகிறார். எனவே கேப்டன் மற்றும் பும்ராவை தவிர்த்து உலகக் கோப்பை விமானத்தில் இருக்க வேண்டிய மற்றொரு வீரர் என்றால் அது சிவம் துபே. ஐபிஎல் மட்டுமன்றி சமீபத்திய சர்வதேச போட்டிகளிலும் அவர் நல்ல ஃபார்மில் இருக்கிறார்”

இதையும் படிங்க: 145 ரன்ஸ்.. லக்னோவிடம் தோற்ற மும்பை.. ஆர்சிபி’க்கு கம்பெனி கொடுக்க வந்த பரிதாபம்.. பிளே ஆஃப் முடிந்த்தா?

“அதனால் கரீபியன் தீவுகளுக்கு சென்று முதல் போட்டியில் அவர் விளையாடாமல் இருந்தால் அது கேலிக்குரிய விஷயமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்” எனக் கூறினார். அந்த வகையில் 15 பேர் கொண்ட அணி மட்டுமின்றி உலகக் கோப்பையில் இந்திய அணியின் பிளேயிங் லெவனிலும் சிவம் துபே விளையாட வேண்டும் என்று இயன் பிசாப் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -