அவருக்காகவா இவரை டீம்ல இருந்து இவரை தூக்குனீங்க? விஜய் ஷங்கரை விளாசும் ரசிகர்கள் – என்ன நடந்தது?

- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 14-ஆம் தேதி நடைபெற்ற 24-வது லீக் போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் சந்தித்தன. நவி மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 192/4 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு மேத்தியூ வேட் 12 (6), சுப்மன் கில் 13 (14), விஜய் சங்கர் 2 (7) என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 53/4 என்ற நிலையில் ஆரம்பத்திலேயே குஜராத் தடுமாறத் தொடங்கியது.

அந்த நேரத்தில் களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா சரிந்த தனது அணியை தூக்கி நிறுத்தும் முயற்சியில் அதிரடியாக ஈடுபட்டார். அவருக்கு உறுதுணையாக இளம் வீரர் அபினவ் மனோகர் வெறும் 28 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 43 ரன்கள் விளாசினார்.

- Advertisement -

அசத்திய பாண்டியா, சொதப்பிய ராஜஸ்தான்:
4-வது விக்கெட்டுக்கு அந்த ஜோடி 86 ரன்கள் குவித்த பின் களமிறங்கிய டேவிட் மில்லர் தனது பங்கிற்கு வெறும் 14 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் உட்பட 31* ரன்கள் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்தார். மறுபுறம் குஜராத்தின் நங்கூரமாக செயல்பட்ட கேப்டன் ஹர்திக் பாண்டியா வெறும் 52 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் உட்பட 87* ரன்கள் விளாசி கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.

அதை தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தானுக்கு தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் முதல் ஓவரிலிருந்தே அதிரடியாக பேட்டிங் செய்து ரன்கள் எடுக்க அவருடன் களமிறங்கிய தேவதூத் படிக்கல் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அந்த நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணம் 3-வது இடத்தில் களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் 8 (8) ரன்களில் நடையைக் கட்ட மறுபுறம் பட்டையை கிளப்பிய ஜோஸ் பட்லர் பவர்பிளே ஓவர் முடிவதற்கு முன்பாகவே 24 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் உட்பட 54 ரன்கள் எடுத்து பட்டாசாக வெடித்து ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 11 ரன்களில் ரன் அவுட்டாகி பொறுப்பில்லாமல் ஆட்டமிழந்த நிலையில் அவருடன் வந்த ராசி வேன் டர் டுஷன் 6 (10) ரன்களில் அவுட்டாகி சொதப்பினார்.

- Advertisement -

குஜராத் வெற்றி:
இதனால் 90/5 என தடுமாறிய ராஜஸ்தானின் தோல்வி உறுதியான நிலையில் கடைசி நேரத்தில் சிம்ரோன் ஹெட்மையர் அதிரடியாக 29 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க ரியன் பராக் 18 (16), ஜிம்மி நீசம் 17 (15) போன்ற வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறியதால் 20 ஓவர்களில் 155/9 ரன்களை மட்டுமே எடுத்த ராஜஸ்தான் 37 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்தது. குஜராத் சார்பில் பந்துவீச்சில் கலக்கிய யாஷ் தயால் மற்றும் லாக்கி பெர்குசன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

இந்த வெற்றிக்கு 87 ரன்கள் மற்றும் 1 விக்கெட் எடுத்து ஆல்-ரவுண்டராக செயல்பட்ட குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். அவரின் இந்த சிறப்பான செயல்பாடு காரணமாக இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளில் 4-வது வெற்றியை பதிவு செய்த அவரது அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து அசத்தியது. மறுபுறம் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் முக்கிய நேரத்தில் சொதப்பிய ராஜஸ்தான் பங்கேற்ற 5 போட்டிகளில் 2-வது தோல்வியை பதிவு செய்தாலும் 3 வெற்றிகளால் தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளது.

- Advertisement -

வெட்டி ஆஃபீசர்:
முன்னதாக இந்த போட்டியில் குஜராத் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தாலும் அந்த அணியில் இளம் தமிழக வீரர் சாய் சுதர்சன் நீக்கப்பட்டு சீனியர் தமிழக வீரர் விஜய் சங்கர் சேர்க்கப்பட்டது அனைவரையும் கடுப்பாக வைத்தது. ஏனெனில் இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் விஜய் சங்கர் முறையே 4 (6), 13 (20) என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். அதுவும் பேட்டிங் வரிசையில் முக்கிய இடமான 3-வது இடத்தில் கிடைத்த வாய்ப்பில் டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடிய அவரை நீக்க வேண்டும் என ரசிகர்கள் போர்க்கொடி தூக்கினர்.

அதன் காரணமாக 3-வது போட்டியில் நீக்கப்பட்ட அவரின் இடத்தில் மற்றொரு இளம் தமிழக வீரர் சாய் சுதர்சன் முதல்முறையாக வாய்ப்பு பெற்றார். அதில் அவரும் அதே 3-வது இடத்தில் களமிறங்கி சுப்மன் கில் உடன் இணைந்து 101 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 30 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 35 ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

அப்படி சிறப்பாக செயல்பட்ட அவரை நேற்றைய போட்டியில் காரணமே இல்லாமல் குஜராத் அணி நிர்வாகம் நீக்கியது மட்டுமல்லாமல் சமீப காலங்களாக பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் எதுவுமே செய்யாமல் ஆல்ரவுண்டர் என்ற பெயரில் மோசமாக செயல்பட்டு வரும் விஜய் சங்கருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது பல ரசிகர்களை கோபமடைய வைத்தது.

இதையும் படிங்க : மும்பை ஒர்த் இல்லாத பிளேயர வாங்கிட்டாங்க. தோக்குறதுல தப்பே இல்ல – முன்னாள் வீரரின் நியாயமான கருத்து

அதற்கு ஏற்றார்போல் நேற்றைய போட்டியில் அவர் 7 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடியதால் மீண்டும் குஜராத் நிர்வாகத்திடம் அவரின் தேர்வு பற்றி கேள்வி எழுப்பும் ரசிகர்கள் அவரின் ஆட்டத்தைப் பற்றி சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement