IND vs WI : உண்மையாவே இவர் டம்மி பீஸ் தானோ – உங்கள சப்போர்ட் பண்ண எங்களை சொல்லணும் என நட்சத்திர வீரரை விளாசம் ரசிகர்கள்

- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 3 – 2 என்ற கணக்கில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் டி20 கிரிக்கெட்டில் இன்னும் நாங்கள் வீழ்ந்துவிடவில்லை என்பதை நிரூபித்து அசத்தியுள்ளது. மறுபுறம் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர்கள் இல்லாமல் இத்தொடரில் களமிறங்கிய இந்தியா முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தாலும் அதற்கடுத்த 2 போட்டிகளில் வென்று தொடரை சமன் செய்தது. ஆனால் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த இந்தியா தொடரை இழந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

இதன் வாயிலாக டி20 தரவரிசையில் தற்போது உலகின் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா பலவீனமான அணியாக கருதப்படும் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 2016க்குப்பின் முதல் முறையாக ஒரு தொடரில் தோல்வியை சந்தித்துள்ளது. அதே போல் டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தோல்வியும் ஒரு குறிப்பிட்ட தொடரில் 3 போட்டிகளில் தோல்வியும் சந்தித்து இந்தியா தலைகுனிந்து நாடு திரும்பியுள்ளது. இத்தனைக்கும் இத்தொடரில் ஐபிஎல் 2023 தொடரில் சிறப்பாக செயல்பட்டு நல்ல ஃபார்மில் இருக்கும் வீரர்கள் தான் களமிறங்கினர்.

- Advertisement -

ரசிகர்கள் கோபம்:
இருப்பினும் அதில் பவுலிங் ஓரளவு சிறப்பாக இருந்த போதிலும் பேட்டிங்கில் தான் இந்தியா ஆரம்பம் முதலே தடுமாறி இறுதியாக தோல்வியும் சந்திப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதிலும் குறிப்பாக அறிமுகமாக விளையாடிய திலக் வர்மா, நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் ஆகிய இருவரை தவிர்த்து இஷான் கிசான், சுப்மன் கில், கேப்டன் பாண்டியா ஆகியோர் சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தியது தோல்வியை கொடுத்தது.

அதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் முதல் போட்டியில் முக்கியமான நேரத்தில் 12 (12) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றியதை போலவே 2வது போட்டியிலும் 7 (7) ரன்னில் ஆட்டமிழந்து அடுத்தடுத்த தோல்விகளுக்கு காரணமாக அமைந்தார். மேலும் 3, 4 ஆகிய வெற்றியை சந்தித்த போட்டிகளில் பேட்டிங் செய்யும் வாய்ப்பை பெறாத அவர் நேற்றைய கடைசி போட்டியில் முக்கியமான நேரத்தில் 13 (9) ரன்னில் அவுட்டாகி தோல்வியிலிருந்து இந்தியாவை காப்பாற்றவில்லை.

- Advertisement -

கேரளாவைச் சேர்ந்த அவர் 2015இல் அறிமுகமாகி 2019இல் 2வது போட்டியை விளையாடி 2021 வரை நிலையற்ற வாய்ப்புகளை பெற்று வந்தார். இருப்பினும் மனம் தளராமல் ஐபிஎல் தொடரில் போராடியதால் 2021இல் இந்தியாவுக்காக கிடைத்த வாய்ப்புகளில் அயர்லாந்து டி20 தொடரில் அரை சதமடித்து ஜிம்பாவே ஒருநாள் தொடரில் ஆட்டநாயகன் விருது வென்று அசத்திய அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் ஒவ்வொரு முறையும் வாய்ப்பு கிடைக்காத போதெல்லாம் அவருக்கு ஆதரவாக மொத்த ரசிகர்களும் திரண்டு இந்திய அணி நிர்வாகத்துக்கு எதிராக போர் கொடி உயர்த்தியானார்கள்.

அந்த நிலையில் நல்ல திறமை இருந்தும் கிடைக்கும் வாய்ப்புகளில் அழுத்தமான தருணங்களை சமாளித்து சஞ்சு சாம்சன் சிறப்பாக செயல்படுவதில்லை என்ற கருத்துகளும் ஏற்கனவே இருந்து வருகின்றன. அதை நிரூபிக்கும் வகையில் தற்போது ராகுல் மற்றும் பண்ட் ஆகியோர் காயமடைந்துள்ள சமயத்தில் நடைபெற்ற இந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டிய அவர் 5 போட்டிகளில் ஒரு அரை சதம் மட்டுமே அடித்து ஏமாற்றத்தை கொடுத்துள்ளார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக டி20 கேரியரில் இதுவரை 19 இன்னிங்ஸில் 333 ரன்களை 18.5 என்ற படுமோசமான சராசரியில் எடுத்துள்ள அவர் அயர்லாந்துக்கு எதிராக பதிவு செய்த 77 ரன்களை தவிர்த்தால் இன்னும் மோசமாக செயல்பட்டு வருவது தெளிவாக தெரிகிறது. அதாவது 4 வாய்ப்புகள் கிடைத்தால் அதில் இரண்டை கூட சரியாக பயன்படுத்தாமல் ஒன்றில் மட்டுமே அவர் அடிப்பது தெரிய வருகிறது.

இதையும் படிங்க:IND vs WI : இந்த தனித்துவம் போதுமா? இந்தியாவை தலைகுனிய வைத்த கேப்டனாக பாண்டியா மோசமான சாதனை – வெளுக்கும் ரசிகர்கள்

அதனால் இவர் உண்மையாகவே டம்மி பீஸ் தானோ என்பது போல் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். மேலும் இனிமேலும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று சொல்லாதீர்கள் என தெரிவிக்கும் ரசிகர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தாத உங்களுக்கு மெகா ஆதரவு கொடுத்த எங்களை சொல்லணும் என்று அவர் மீது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Advertisement