IND vs RSA : மனிதாபிமானம் இல்லையா, இப்படியா பண்ணுவீங்க – ருதுராஜை வெளுக்கும் ரசிகர்கள், என்ன நடந்தது?

Ruturaj
- Advertisement -

கடந்த ஜூன் 9 முதல் தலைநகர் டெல்லியில் துவங்கி கட்டாக், விசாகப்பட்டினம், ராஜ்கோட் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்று வந்த டி20 தொடர் நிறைவு பெற்றுள்ளது. இதில் முதல் 2 போட்டிகளில் பெரிய இலக்கை அசால்டாக சேசிங் செய்த தென்ஆப்பிரிக்கா சொந்த மண்ணில் இந்தியாவுக்கு அடுத்தடுத்த தோல்விகளை பரிசளித்து அதிர்ச்சி கொடுத்தது. கேப்டன் ரோகித் சர்மா இல்லாத நிலைமையில் கடும் விமர்சனங்களுக்கும் பின்னடைவுக்கும் உள்ளான இந்திய அணியினர் தோல்விகளுக்கு பயப்படாமல் விசாகப்பட்டினம் மற்றும் ராஜ்கோட்டில் நடந்த அடுத்த 2 போட்டிகளில் அட்டகாசமாக செயல்பட்டு அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றனர்.

அதனால் சொந்த மண்ணில் நாங்கள் எப்போதுமே ராஜாதான் என்று நிரூபித்த இந்தியா 2 – 2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்து தென்னாப்பிரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுத்தது. அந்த சூழ்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 5-வது போட்டி ஜூன் 19-ஆம் தேதியான நேற்று பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற சின்னசாமி மைதானத்தில் இரவு 7 மணிக்கு துவங்கியது.

- Advertisement -

சமனில் தொடர்:
அதில் கடந்த போட்டியில் காயமடைந்த பவுமாவுக்கு பதில் கேப்டனாக அறிவிக்கப்பட்ட தென் ஆப்பிரிக்க கேப்டன் கேஷவ் மஹராஜ் டாஸ் வென்று பந்து வீசுவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து களமிறங்க தயாராக இருந்த இந்தியாவை தடுத்து நிறுத்தும் வகையில் வந்த மழை இப்போட்டியை 19 ஓவர்களாக குறைக்க வைத்து 7.50 மணிக்கு துவங்கும் வகையில் தாமதப்படுத்தியது. அதைத்தொடர்ந்து துவங்கிய இப்போட்டியில் இஷான் கிசான் 15 (7) ருதுராஜ் கைக்வாட் 10 (12) என தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றியதால் 3.3 ஓவரில் 28/2 என இந்தியா தடுமாற்றமான தொடக்கத்தை பெற்றது.

அப்போது முன்பை விட வலுவாக வந்த மழை ஒரு மணி நேரம் அடித்து நொறுக்கி மைதானத்தை தண்ணீரால் நிரப்பி போட்டியை மொத்தமாக தடுத்து நிறுத்தியது. இரவு 10.10 மணி கடந்தும் மழை விடாததால் வேறு வழியின்றி விதிமுறைப்படி இந்த போட்டியை ரத்து செய்யப்படுவதாக அம்பயர்கள் அறிவித்தனர். அதனால் சமனில் இருந்த இந்த தொடரின் வெற்றியாளர்களாக இரு அணிகளும் அறிவிக்கப்பட்டு கோப்பையை பகிர்ந்து கொண்டன.

- Advertisement -

மனிதாபிமானமற்ற ருதுராஜ்:
முன்னதாக 7 மணிக்கு இப்போட்டி துவங்கிய போது பேட்டிங் செய்வதற்காக இந்திய தொடக்க வீரர் ருத்ராஜ் மற்றும் இஷான் கிசான் ஆகியோர் பேட், ஹெல்மெட் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொண்டு தயாராக இருந்தபோதும் மழை வெளுத்து வாங்கியதால் பவுண்டரியின் அருகே அமைக்கப்பட்டிருந்த மினி பெவிலியனில் மழை ஓயும் வரை காத்திருந்தனர். அப்போது மழையால் பிட்ச் நனையாமல் தார் பாய் கொண்டு மூடி விட்டு வேக வேகமாக ஓடிவந்த உள்ளூர் மைதானம் பராமரிப்பாளர் ஒருவர் மழைக்கு ஒதுங்கும் வகையில் ருதுராஜ் அமர்ந்திருந்த அந்த கூரையின் அடியில் வந்து அவரின் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தார்.

நாம் அனைவரையும் போல ஒரு கிரிக்கெட் ரசிகரான அவருக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்தது. ஏனெனில் கரோனா கட்டுப்பாட்டு பிரச்சனை காரணமாக சமீப காலங்களில் இது போல் இந்திய அணிக்கு சம்பந்தமில்லாத நபர்கள் இந்திய அணி வீரர்களின் அருகில் கூட நெருங்க முடியாத நிலைமை இருந்து வருகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் தனக்கு மிகவும் பிடித்த ருதுராஜ் உடன் சிரித்த முகத்துடன் அந்த மைதான பராமரிப்பாளர் செல்பி எடுக்க முயன்றார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த ருதுராஜ் அதோடு நிற்காமல் தனது அருகில் வர வேண்டாம் என்ற வகையில் தனது கையால் அவரது தோல்பட்டையை 2 – 3 முறை தள்ளி விட்டு நகர்ந்து செல்லுமாறு கட்டாயப்படுத்தினார்.

- Advertisement -

வெளுக்கும் ரசிகர்கள்:
அவரின் செய்கை சினிமா படத்தில் “நோய்வாய்ப்பட்டவரை கர்வம் வாய்ந்த ஒரு கேரக்டர் என்னைத் தொடாதே” என்று கூறும் வகையில் அமைந்தது. அதனால் அந்த நல்ல ரசிகரின் முகத்தில் இருந்த புன்னகை காணாமல் போனதுடன் இறுதிவரை செல்பி எடுக்க முடியாமல் ஏமாற்றமடைந்தார். அடித்து நொறுக்கிய மழையால் தெளிவாகத் தெரியாத இந்த தருணத்தை ஒரு ரசிகர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதை தொடர்ந்து ருதுராஜின் இப்படிப்பட்ட ஒரு முகம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இத்தனைக்கும் இந்த தொடரில் கரோனா கட்டுப்பாட்டு வளையத்தில் இல்லாமல்தான் இரு அணிகளும் விளையாடின.

அதை பார்த்த ரசிகர்கள் சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி, ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற நட்சத்திரங்கள் எவ்வளவோ சாதித்த போதிலும் ரசிகர்களை பார்த்தால் தேடிவந்து கைகொடுத்து செல்பி எடுக்கிறார்கள். ஆனால் நீங்கள் இவ்வளவு இளம் வயதிலேயே பெரிய அளவில் எதுவும் சாதிக்காத போதிலும் இப்படி கர்வமாக நடந்து கொள்ளலாமா என்று வெளுத்து வாங்குகிறார்கள்.

இதையும் படிங்க : தினேஷ் கார்த்திக் இந்த ஒரு டெஸ்ட்ல பாஸ் பண்ணிட்டா வேர்ல்டுகப்ல விளையாடுறது கன்பாரம் ஆம் – விவரம் இதோ

மேலும் ஒரு மனிதாபிமானத்திற்காகவாவது அவருடன் செல்பி எடுத்திருக்கலாமே என்று கூறும் ரசிகர்கள் ரசிகர்களான நாங்கள் இல்லை என்றால் நீங்கள் இல்லை என்று ருதுராஜை எச்சரித்து வருகின்றனர்.

Advertisement