தினேஷ் கார்த்திக் இந்த ஒரு டெஸ்ட்ல பாஸ் பண்ணிட்டா வேர்ல்டுகப்ல விளையாடுறது கன்பாரம் ஆம் – விவரம் இதோ

Dinesh-Karthik
Advertisement

இந்திய அணியின் சீனியர் வீரரும், தமிழக வீரருமான தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்காக 2004-ஆம் ஆண்டு முதல் விளையாடி வந்தாலும் தோனியின் இடம் காரணமாக நிரந்தர வாய்ப்பு இன்றி தவித்து வந்தார். இருப்பினும் தனது மிகச் சிறப்பான செயல்பாடு காரணமாக அவ்வப்போது இந்திய அணியில் உள்ளேயும் வெளியேயும் இருந்து வரும் தினேஷ் கார்த்திக் தொடர்ச்சியாக தனது கடின உழைப்பை வெளிக் காட்டி வருகிறார். அதோடு 2019-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற தினேஷ் கார்த்திக் அந்த தொடரின் அரையிறுதிப் போட்டியை அடுத்து இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.

Dinesh Karthik vs RSA

அதனை தொடர்ந்து மீண்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்று பலரும் பேசி வந்த நிலையில் தற்போது மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் ஐபிஎல் தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றிருந்தார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் விளையாடிய தினேஷ் கார்த்திக் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக அற்புதமாக பயன்படுத்தியிருந்தார் என்றே கூற வேண்டும். அதிலும் குறிப்பாக நான்காவது டி20 போட்டியின்போது டாப் ஆர்டரில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில் பாண்டியாவுடன் அவர் அமைத்த பாட்னர்ஷிப் மற்றும் இறுதி நேரத்தில் இவர் காட்டிய அதிரடி என இரண்டும் தான் இந்திய அணியின் வெற்றிக்கு உதவியது.

- Advertisement -

இதன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் கிடைத்தது. 37 வயதில் தனது ஆட்டநாயகன் விருதை பெற்ற தினேஷ் கார்த்திக் டி20 கிரிக்கெட்டிலும் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்திருந்தார். இப்படி தினேஷ் கார்த்திக் அற்புதமான பார்மில் இருப்பதனால் அவருக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வரும் வேளையில் டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியில் இடம் கிடைக்குமா? என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Dinesh Karthik

இந்நிலையில் தினேஷ் கார்த்திக் இந்த வருடம் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்பட வேண்டுமெனில் ஒரே ஒரு விஷயம் மட்டும் இருக்கிறது. அதனை கடந்து விட்டால் நிச்சயம் உலக கோப்பை அணியில் தெரிவு செய்யப்படுவார் என்று உறுதியாகி உள்ளது. அந்த விடயம் யாதெனில் டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியை தேர்வு செய்ய ராகுல் டிராவிட் தான் திட்டம் வைத்துள்ளார் என்றும் உலக கோப்பை தொடருக்கு முன்னதாக ரெகுலராக ஒரு குறிப்பிட்ட அணிக்கு டி20 போட்டிகளில் விளையாட வாய்ப்பு வழங்கப்படும்.

- Advertisement -

அப்படி அந்த அணியில் விளையாடும் வீரர்களை வைத்துதான் இந்திய அணி தேர்வு செய்யப்படும் என்று கங்குலி மறைமுகக் குறிப்பு ஒன்றை அளித்திருந்தார். அப்படி கங்குலி அளித்த குறிப்பின்படி பார்க்கையில் : ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக ஒரு சில தொடர்களில் மட்டுமே இந்திய அணி விளையாடவுள்ளது. அப்படி நடைபெற இருக்கும் தொடர்களில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் இங்கிலாந்து தொடர் மிக முக்கியமான ஒன்றாக தெரிகிறது.

இதையும் படிங்க : வேலைகள் நடக்கிறது, ஐபிஎல்ல இந்த மாற்றத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது – ஜெய் ஷா பேச்சு

அப்படி இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் அந்த தொடரில் தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டால் கிட்டத்தட்ட உலகக் கோப்பை அணிக்கு தேர்வானத்துக்கு சமம் என்று கூறப்படுகிறது. அதோடு அந்த இங்கிலாந்து தொடரில் அவருக்கு பிளேயிங் லெவனிலும் வாய்ப்பு வழங்கப்பட்டால் கண்டிப்பாக டி20 உலக கோப்பை தொடரிலும் அவர் பிளேயிங் லெவனில் விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement