வேலைகள் நடக்கிறது, ஐபிஎல்ல இந்த மாற்றத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது – ஜெய் ஷா பேச்சு

Jay-shah
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரின் 15-வது சீசன் வெற்றிகரமாக மார்ச் 26 முதல் மே 29 வரை இந்தியாவிலேயே நடைபெற்று முடிந்தது. இந்த வருடம் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ஹர்திக் பாண்டியா தலைமையில் தனது முதல் வருடத்திலேயே அட்டகாசமாக செயல்பட்ட குஜராத் டைட்டன்ஸ் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் அசத்தி கோப்பையை வென்று சாதனை படைத்தது. வழக்கம்போல இந்த வருடமும் பெரும்பாலான போட்டிகள் கடைசி ஓவர் வரை சென்று பரபரப்பான தருணங்களை திரில்லர் விருந்தாக ரசிகர்களுக்கு படைத்தது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக இந்த வருடம் சரவெடியாக பேட்டிங் செய்த பேட்ஸ்மென்கள் சிக்சர் மழை பொழிந்தால் வரலாற்றிலேயே முதல் முறையாக 1000கும் மேற்பட்ட சிக்ஸர்கள் விளாசப்பட்டன.

அப்படி நிமிடத்திற்கு நிமிடம் அனல் பறக்க கூடிய பரபரப்பான ஐபிஎல் தொடரை பார்த்துவிட்டு சர்வதேச அளவில் நடைபெறும் டி20 போட்டிகள் ரசிகர்களுக்கு அலுப்பு தட்டும் வகையில் அமைவதாக ரவி சாஸ்திரி, ஆகாஷ் சோப்ரா போன்ற முன்னாள் வீரர்கள் சமீபத்தில் தெரிவித்திருந்தனர். ஏனெனில் இந்தியா – இலங்கை போன்ற அணிகள் மோதும் போது அதில் ஒரு அணி பலவீனமாக இருப்பதால் அந்த போட்டியின் தரம் தாமாகவே குறைந்து விடுகிறது. அதனால் தரமற்ற சர்வதேச டி20 போட்டிகளை கால்பந்து போல வெறும் உலக கோப்பையாக 2 வருடத்திற்கு ஒருமுறை நடத்தி விட்டு எஞ்சிய தருணங்களில் பெரிய ஐபிஎல் அல்லது 2 ஐபிஎல் தொடரை நடத்தலாம் என்று அவர்கள் தெரிவித்திருந்தனர்.

- Advertisement -

விரிவாகும் ஐபிஎல்:
அதை சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் ஒளிபரப்பு ஏலம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. ஆம் அனல் பறக்கும் ஐபிஎல் போட்டிகளை மைதானத்திற்கு வந்து நேரடியாக பார்க்க முடியாத ரசிகர்களுக்கு அதை நேரலையாக ஒளிபரப்பி வந்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழுமத்தின் ஒளிபரப்பு ஒப்பந்தம் இந்த வருடத்துடன் முடிவடைந்தது. அதை தொடர்ந்து 2023 – 2027 ஆகிய காலகட்டத்திற்காக நடத்தப்பட்ட ஒளிபரப்பு ஏலத்தை டிஸ்னி ஸ்டார், வியாகாம்18, டைம்ஸ் இன்டர்நெட் ஆகிய 3 நிறுவனங்கள் சேர்ந்து 48,390 கோடி என்ற பிரமாண்ட தொகைக்கு வாங்கியுள்ளன.

IPL vs EPL

இதனால் வரும் கால கட்டத்தில் நடைபெறும் ஒரு ஐபிஎல் போட்டியின் மதிப்பு 117.5 கோடியாக உயர்ந்து ஈபிஎல், எம்பிஏ போன்ற இங்கிலாந்து, அமெரிக்க நாடுகள் நடத்தும் கால்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டு தொடர்களையும் முந்தி உலகின் நம்பர் 2 விளையாட்டு தொடராக விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதைவிட 2023 – 2027 காலகட்டத்தில் 410 போட்டிகள் நடைபெறும் என்று ஏலதாரர்களிடம் பிசிசிஐ உறுதி அளித்துள்ளது. அதாவது 2023, 2024 ஆகிய சீசன்களை தவிர்த்து 2025 முதல் 84, 94 போட்டிகள் கொண்ட தொடராக ஐபிஎல் விரிவடைய உள்ளது.

- Advertisement -

வேலைகள் நடக்கிறது:
முன்னதாக இந்த வருடமே 10 அணிகளுடன் 74 போட்டிகள் கொண்ட பிரமாண்ட ஐபிஎல் தொடர் 65 நாட்கள் நடைபெற்றதால் ஒருசில சர்வதேச தொடர்கள் பாதிக்கப்பட்டது. அந்த நிலைமையில் 84, 94 போட்டிகள் கொண்ட தொடரை ஐபிஎல் நடந்தால் சர்வதேச கிரிக்கெட் அழியத்துவங்கி விடும் என்று சில வல்லுனர்கள் கவலை தெரிவித்திருந்தனர். இருப்பினும் ஐபிஎல் விரிவடைவது உறுதி என தெரிவித்த பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அதில் வெளிநாட்டு வீரர்கள் தங்கு தடையின்றி பங்கேற்கும் வகையில் அடுத்த 2024 – 2027 ஐசிசி கால அட்டவணையில் (எஃப்டிபி) மாற்றம் செய்யப்படும் என்று கூறியிருந்தார்.

T2 World Cup vs IPL ICC vs BCCI

ஆனால் இது உலக கிரிக்கெட்டுக்கு ஆபத்தானது என கருதும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதுபற்றி இதர நாட்டு கிரிக்கெட் வாரியங்களுடன் ஆலோசித்து ஐசிசியிடம் முறையிடப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் விரிவாக்கத்தை யாராலும் தடுக்க முடியாது என்று தெரிவித்துள்ள பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இதுபற்றி ஐசிசியிடம் பேச்சுவார்த்தை நடத்தத் துவங்கி விட்டதாக கூறியுள்ளார். இதுபற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“வருங்காலத்தில் அர்ப்பணிக்கப்பட்ட பெரிய ஐபிஎல் தொடரின் கால அட்டவணைக்காக இதர நாட்டு கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐசிசியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஐபிஎல் என்பது கிரிக்கெட் காலண்டரில் ஒரு மிகப்பெரிய தொடர். சொல்லப்போனால் உலகளவில் என்எப்எல் தொடருக்கு அடுத்தபடியாக உள்ளது”

இதையும் படிங்க : IND vs RSA : இந்திய அணி சொந்த மண்ணில் தெ.ஆ’வுக்கு எதிராக தொடரும் சோகமான சாதனை – விவரம் இதோ

“சர்வதேச நட்சத்திரங்கள் பங்குபெறும் இந்த தொடரில் இந்திய வீரர்கள் அவர்களுடன் அவர்களுக்கு எதிராக விளையாடுவதால் உலகத்தரம் வாய்ந்த ஐபிஎல் தொடரை உங்களால் பார்க்க முடியும். வீரர்களுக்கு மட்டுமல்லாது பல ஜாம்பவான்களுக்கு பயிற்சியாளராகும் வாய்ப்பையும் ஐபிஎல் வழங்குகிறது. இது அனைவருக்கும் விலைமதிப்பற்ற அனுபவத்தை கொடுக்கும் அற்புதமான இடமாகும். வருங்காலத்தில் போட்டிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட உள்ளது” என்று கூறினார்.

Advertisement